இப்போதே சுட்டெரிக்கும் வெயில்.. தவிக்கும் மக்கள்.. கத்திரி வெயில் எப்போது தொடங்குகிறது தெரியுமா?
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் வரும் மே மாதம் முதல் வாரத்தில் இருந்து தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னை: தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் வரும் மே மாதம் முதல் வாரத்தில் இருந்து தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் தமிழகம் முழுக்க இன்னும் சில நாட்களில் வெயில் மிகவும் அதிகமாகும்.
தமிழகத்தில் வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மார்ச் இரண்டாம் வாரத்திலேயே கத்திரி வெயில் போல, தமிழகம் முழுக்க கடுமையான வெப்பம் சுட்டெரித்து வருகிறது.

நெல்லை, சேலம், கோவை, வேலூர், சென்னை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் கடும் வெயிலின் தாக்கத்தால் அனல் காற்று வீசுகிறது. இதனால் பகல் நேரங்களில் மக்கள் வெளியே செல்ல முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.
கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்னும் தொடங்கவில்லை. அக்னி நட்சத்திரம் என்பது சூரியனின் கதிர்கள் நேராக நம் மீது 90 டிகிரியில் விழுவதாகும். இதனால் மக்களுக்கு பாதிப்பு அதிக அளவில் ஏற்படும். ஆனால் இந்த கத்திரி வெயில் தொடங்கும் முன்பே பல இடங்களில் வெப்பநிலை அதிகரித்துள்ளது.
ஏற்கனவே வேலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 5-ந் தேதி 103 டிகிரி, அடுத்த நாள் 6-ந் தேதி 105 டிகிரி, 29-ந் தேதி 104 டிகிரி வெயில் மிக மோசமாக இருந்துள்ளது. இதே நிலை பல மாவட்டங்களில் நிலவியது.
இந்த வருடம் மே 4ம் தேதி கத்திரி வெயில் தொடங்க உள்ளது. சென்ற வருடத்தை விட இந்த வருடம் வெயில் அதிகமாக இருக்கும் என்று ஏற்கனவே வானிலை மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் சில இடங்களில் 110 டிகிரி வரை வெயில் அடிக்கிறது. இது மக்களுக்கு பெரிய அதிர்ச்சி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தேர்தல் நேரம் என்பதால் பிரச்சாரம் செய்ய முடியாமல் வேட்பாளர்களும், கட்சியினரும் தவித்து வருகின்றனர். மக்களும் பிரச்சார கூட்டங்களில் கலந்து கொள்ள முடியாமல் தவித்து வருகிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications