கோவை இளைஞர் தற்கொலை விவகாரத்தில் போலீஸ் நடவடிக்கையே இல்லையே? 'அவங்க' காரணமா? சீறும் கவிஞர் தாமரை!
சென்னை: கோவை இளைஞர் சிவா தற்கொலை விவகாரத்தில் மரணத்துக்கு காரணமான விஜயலட்சுமி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் தியாகு உள்ளிட்டோருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பதால் போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லையா? என பாடலாசிரியர் தாமரை கேள்வி எழுப்பி உள்ளார்.
கோவையை சேர்ந்த சிவா என்ற இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலைக்கு அவரது மனைவியும் சமூக செயற்பாட்டாளருமான விஜயலட்சுமி என்ற Vijis Palanichamy என்பவரே காரணம் என்கிறார் பாடலாசிரியர் தாமரை. தமது 2-வது கணவரான தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் தியாகுவை தம்மிடம் இருந்து பிரித்தவர் விஜிதான் என்பதும் தாமரையின் குற்றச்சாட்டு. இந்த விவகாரத்தில் போலீஸ் ஏன் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தமது சமூக வலைதளப் பக்கங்களில் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக தாமரை தமது ட்விட்டர் பக்கத்தில், 26.12.2022 விஜி கோவை இளைஞர் சிவா தற்கொலை வழக்கு.
ஏன் இன்னும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை ? இதுவரை விசாரணக்காக சிவா குடும்பத்தினரைக்கூட அழைக்கவில்லை. வெளிவந்த குரல்பதிவுகளில் உள்ள பிரபல பெயர்கள்தாம் காரணமா ? காவல்துறை உடனே நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன். பெண்ணுக்கொரு நீதி ஆணுக்கொரு நீதியா ? ஆணின் கொடுமையால் ஒரு பெண் இறந்திருந்தால் இத்தனை நேரம் எல்லோரும் கொதித்தெழுந்திருப்பார்கள். பெண்களிலும் பேய்கள் உண்டு. விஜிபழனிச்சாமியால் தற்கொலை செய்து கொண்ட சிவாவின் மரணத்தை உடனே விசாரிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார். கோவை இளைஞர் சிவா தற்கொலைக்கு முன்னதாக பேசிய வீடியோ ஆடியோக்களில் கொளத்தூர் மணி, தியாகு பெயர் இருப்பதாகவும் அதனாலேயே போலீஸ் விசாரிக்கவில்லை என்பதும் தாமரையின் சந்தேகம்.

இது தொடர்பாக சமூக செயற்பாட்டாளர் விஜயலட்சுமி என்ற Vijis Palanichamy தமது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:கடந்த சில நாட்களாக என்னைப் பற்றி ஊடகங்களிலும், சமூகவலைதளங்களிலும் பரப்பப்படும் அவதூறு செய்திகள் பற்றி பேச என்னிடம் ஏதுமில்லை. தனிப்பட்ட நபர்களின் காழ்புணர்ச்சியாலும், ஊடகங்களின் அறமற்ற செயல்களால் பரப்படும் அவதூறுகளுக்கு பதிலளிக்கும் அளவிற்கு என் மனநிலை இல்லை. பத்தாண்டுகளுக்கும் மேலாக கவிஞர் தாமரையின் தற்குறித்தனமான தரம் தாழ்ந்த செயல்களால் நானும் எனது மகள்களும் உச்சபட்ச மனஉளைச்சலில் தான் வாழ்ந்து வருகிறோம். இவர்கள் எல்லாம் பரப்பும் அவதூறுகளும், மிரட்டல்களுக்கும் வயதுக்கு வந்த எனது இருமகள்களின் எதிர்காலத்தை கேள்விகுறியாக்கி இருக்கிறது. அதையெல்லாம் கடந்து வாழும் துணிவை அவர்களுக்கு நான் சொல்லி வளர்த்திருந்தாலும் இந்த சமூகத்தால் அவர்கள் அச்சுறுத்தப்படும் நிலையில் தான் இப்போதும் இருக்கிறார்கள்.
நான் சிங்கிள் மதர் என்றும், ஊடகத்துறையில் பணிபுரிவதும் ஊரறிந்த விஷயம். பணமோசடிக்காரி, பல திருமணங்கள் செய்து பிழைப்பவள், திருடி என்றெல்லாம் ஆதாரங்கள் இல்லாத அவதூறு செய்திகளை பொதுவெளியில் பேசுவதும் பரப்புவதும், அதனால் உள்ளூர மகிழ்வதும் வக்கிரமானது என்று உணராமலே, ஊருக்கு நீதி வாங்கி தர துடிப்பவர்கள் சட்ட நடவடிக்கை எடுக்கலாமே?.. என்னால் தாமரைக்கும், இன்ன பிறருக்கும் அநீதி நடந்திருக்கிறது என்றால் தாரளமாக அவர்கள் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளலாம். என்னுடன் பழகும் நபர்களை எல்லாம் தவறாக சித்தரிப்பது, இக்காட்டான மருத்துவ சூழ்நிலையில் நான்இருந்த போது எனக்கு உதவ வருபவர்களிடம் எனக்கு உதவ கூடாது என்று சொல்வது, இப்போது உள்ள சூழலில் கூட நடந்தது என்னவென்றே தெரியாமல் ஆதாரமற்ற செய்திகளை பரப்பி மகிழும் சில்லறைத்தனமான செயல்களால் எதுவும் நடந்துவிடப்போவதில்லை.
தமிழுக்காகவும், பெண்ணுரிமைகளுக்காகவும் மட்டுமே வாழும் தாமரை அவருக்கு இழைக்கப்பட்ட அநீதியை கேட்க வேண்டிய இடத்தில கேட்காமல் ஊரார் வீட்டில் ரெண்டகம் செய்வது அநாகரீகமான செயல். ஒரு பெண் தான் பார்க்கும் நபர்களுடன் எல்லாம் தவறான உறவில் தான் இருப்பார் என்றால் அது தாமரை என்ற பெண்ணுக்கும் பொருந்தும் தானே ? கோவையை சேர்ந்த ரத்னசீலன் என்ற நபரை நான் சந்தித்த பிறகு இருவரும் விரும்பித்தான் திருமணம் செய்துகொண்டோம். அது ரத்னசீலன் குடும்பத்துக்கும் தெரியும். அதே போல ரத்னசீலன் வீட்டில் நான் தங்கியிருந்தவரை அவர்கள் என்னை நன்றாகவே பார்த்துக்கொண்டார்கள். இப்போது ரத்னசீலனது உறவினர்கள் மாறிமாறி பேசுவது போல, என்னால் மாற்றி பேச இயலாது. அவர்களை அசிங்கப்படுத்த நான் விரும்பவில்லை. தாமரை சொல்வதுபோல சொகுசுவாழ்க்கை, விமானம், பணத்திற்கு வேசமிடும் பெண்ணாக நானிருந்தால், ஏற்கனவே வரம்புமீறிய கடனில் இருக்கும், வாடகை வீட்டில் வசிக்கும், மாதம் 23k சம்பளம் வாங்கும் ரத்னசீலனை திருமணம் செய்திருப்பேனா.?
ரத்னசீலன் ஒருவித மன உளைச்சளிலேதான் வாழ்ந்து வந்தார். அது அவரது குடும்ப மற்றும் கடன் பிரச்சினை. புதிதாக இணைந்த என்னிடம் அதுபற்றி முழுமையாக பகிர அவர் விரும்பவில்லை. அவருக்கு குடிப்பழக்கம் இருக்கிறது என்பதே யாருக்கும் தெரியாது. திருமணமான பத்தே நாளில் ரத்தம் வர என்னை அடித்து துன்புறுத்தியது ரத்னசீலன் அப்பா, அம்மா மற்றும் அவர்கள் குடியிருக்கும் வீட்டு ஓனர் வரை அனைவருக்கும் நன்றாகவே தெரியும். அதன் பிறகு காவல்நிலையத்தில் புகார் அளிக்க நான் முடிவெடுத்த போது ரத்னசீலன் அம்மாவின் வேண்டுகோளுக்கிணங்க நான் அமைதியாக இருந்துவிட்டேன். அந்த அடிதடி பிரச்சினைக்கு பிறகும் சமரசம் செய்து இணைந்து வாழ விரும்பினேன். ரத்னசீலன் நடவடிக்கைகள் ஏற்புடையதாக இல்லை என்பதால் சண்டைக்கு பிறகான நான்காவது நாள் அங்கிருந்து கிளம்பிவிட்டேன்.
இன்று மீடியாக்களுக்கும், சமூக வலைதளங்களிலும் பேசும் ரத்னசீலன் உறவினர்கள் யார் ஒருவரும் நான் ஏன் போனேன், அதன் பிறகு என்ன நடந்தது என்று இன்றுவரை ஒருவர் கூட என்னிடம் கேட்கவில்லை. மட்டுமின்றி ரத்னசீலன் இறந்த பிறகு எவர் ஒருவரும் என்னிடம் அவர் இறந்த செய்தியை கூட சொல்லவில்லை. அதே போல இறந்துபோன ரத்னசீலன் பேசிய ஆடியோக்களை மட்டுமே வைத்துக்கொண்டு அவதூறும் பரப்புவர்களுக்கு ஒரு கேள்வி, இன்னொரு பெண் எனக்கு கிடைக்கும் வரை என்னைவிட்டு போய்விடாதே, என் மரணத்துக்கு நீ காரணமில்லை என்றெல்லாம் ரத்னசீலன் பேசிய ஆடியோக்களை பற்றி ஏன் பேசவில்லை. ?.. ஏனென்றால் உங்கள் நோக்கம் ரத்னசீலனுக்கு நீதி பெறுவது இல்லை, அதன் வாயிலாக பிறரை துன்புறுத்தி மகிழ்வதே. இறந்து போன ரத்னசீலன் பற்றி எதுவொன்றையும் பேசி பிழைப்பு நடத்தும் கேவலமான நிலையில் நானில்லை. அவரது இறப்பு எனக்கு இழப்புதான்.
என் மீது பரப்பப்பட்ட, பரப்பப்படும் அனைத்து அவதூறுகளுக்கும் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள தயாராகிவிட்டேன். என்மீது குற்றம் சுமத்துபவர்கள் தயவுசெய்து சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் சந்திக்க எப்போதும் நான் தயார். விரைவில் மீடியாவையும் சந்திப்பேன். மனிததன்மையற்ற பிறரது முன்முடிவுகளுக்கும், முகாந்திரமற்ற அவதூறுகளுக்கும் பதில் சொல்லும் மனநிலையில் நானில்லை.
தனி மனிதியாக இருமகள்களுடன் வாழும் எனக்கோ என் மகள்களுக்கோ ஏதேனும்அசம்பாவிதமமோ உயரிழப்போ ஏற்பட்டால் அதற்கு கவிஞர் தாமரையும், ரத்னசீலன் சகோதரியயான கந்துவட்டி தொழில் நடத்தும் பானுப்பிரியாவும் தான் முழுக்காரணம். அவதூறுகளை பரப்பி வாழும் தாமரைக்கும், அவரது பக்க வாத்தியங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். இவ்வாறு விஜயலட்சுமி பதிவிட்டுள்ளார்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications