காது, கண் வழியாக கசியும் ரத்தம்.. மியான்மர் நிலநடுக்க துயரம் குறித்து கவிப்பேரரசு வைரமுத்து
சென்னை: உலகையே பேரதிர்ச்சியில் உறையவைத்திருக்கும் மியான்மர் நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் பல்லாயிரத்தைத் தாண்டி வருகிறது. கொத்து கொத்தாக, கட்டிடங்களோடு கட்டிடங்களாக புதைகுழிகளுக்கும் மனித உயிர்கள் புதையுண்டு போன துயரத்தில் இருந்து மியான்மர் தேசம் மீண்டு எழுவதற்கு இந்தியா உள்ளிட்ட அத்தனை நாடுகளும் உதவிக் கரம் நீட்டி வருகின்றன.
மியான்மர் நிலநடுக்க துயரம் குறித்து கவிப்பேரரசு வைரமுத்து தமது சமூக வலைதளப் பக்கத்தில் எழுதியுள்ள கவிதை:

மியான்மரை நினைத்தால்
கழிவிரக்கம் கொள்கிறது
கணத்துப்போன நெஞ்சு
உயரமான துயரத்தை
ஒரு தனிமனிதன்
எதிர்கொள்வதைப்போல
ஒரு நாடே எதிர்கொள்கிறது
கழுத்தில்
ராணுவ ஆட்சியின்
இரும்புப் பிடி
மார்பில்
கிளர்ச்சியாளர்களின்
துளைக்கும் துப்பாக்கி
தலைக்குமேலே
கபாலம் பிளக்கும்
ராணுவ விமானங்கள்
காலடியின்கீழே
பூமியைக் களவாடும்
பூகம்பம்
நாட்டின் பாதியில்
வசதியாய் வாழும் வறுமை
இந்நிலையில்
ஆயிரம் ஆயிரமாய்
பூமியால் பூமிக்குள்
புதைக்கப்பட்ட மக்கள்
கேட்டால் காதுவழியாகவும்
கண்டால் கண்வழியாகவும்
கசிகிறது ரத்தம்
ஒருகாலத்தில் தமிழர்களின்
அமுதசுரபியாய் இருந்த தேசம்
இன்று
திருவோடாய்த் திண்டாடுகிறது
அந்த நாட்டை
இயற்கை ஆசீர்வதிக்கட்டும்
உலக நாடுகள்
உதவி புரியட்டும்
மியான்மரை நினைத்தால்
— வைரமுத்து (@Vairamuthu) April 2, 2025
கழிவிரக்கம் கொள்கிறது
கனத்துப்போன நெஞ்சு
உயரமான துயரத்தை
ஒரு தனிமனிதன்
எதிர்கொள்வதைப்போல
ஒரு நாடே எதிர்கொள்கிறது
கழுத்தில்
ராணுவ ஆட்சியின்
இரும்புப் பிடி
மார்பில்
கிளர்ச்சியாளர்களின்
துளைக்கும் துப்பாக்கி
தலைக்குமேலே
கபாலம் பிளக்கும்
ராணுவ விமானங்கள்… pic.twitter.com/oOpz76JqGI
நம் அண்டைநாட்டில்
மனித மாமிசங்களைக்
காக்கைகள் கொத்திக்
கொண்டிருக்கும்பொழுது,
நாம்
நாய்களுக்கு
இறைச்சித் துண்டு
இட்டுக்கொண்டிருக்க முடியாது
இவ்வாறு கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications