Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சீமான் மனைவி 'அண்ணி' கயல்விழி நாம் தமிழர் கட்சி பொதுச் செயலாளர்? இன்னொரு தேமுதிகவாக உருமாறுகிறதா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாம் தமிழர் கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மனைவி கயல்விழி பொதுமேடைகளில் ஏறத் தொடங்கிவிட்டார்; செய்தியாளர்களை சந்திக்கிறார்... இதையடுத்து நாம் தமிழர் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக "அண்ணி" கயல்விழியை "அண்ணன்" சீமான் அறிவிப்பாரா? என்கிற எதிர்பார்ப்பில் நாம் தமிழர் தம்பிகள் இருப்பதாக கூறப்படுகிறது.

திரைப்பட இயக்குநராக இருந்த நிலையில் திராவிடர் கழகம், இடதுசாரிகள் மேடையில் பேச்சாளராக இடம் பெற்றவர் சீமான். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தீவிரமாக ஆதரித்து பேசியதால் சிறைவாசம் அனுபவித்தார். 2009-ம் ஆண்டு இலங்கை இறுதி யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அழித்தொழிக்கப்பட்டது.

Kayalvizhi Seeman to become Naam Tamilar Party next General Secretary?

உதயமான நாம் தமிழர்: அப்போது ஆத்திரத்திலும் கோபத்திலும் இருந்த தமிழ்நாட்டு இளைஞர்கள் அன்றைய திமுக- காங்கிரஸ் கூட்டணியை வெறுத்தனர்; அதிமுக மீதும் கோபத்தில் இருந்தனர். இதனால் இயல்பாகவே தனி இயக்கம் ஒன்றை சீமான் தலைமையில் கட்டமைத்தனர். தினத்தந்தி நிறுவனர் சி.பா. ஆதித்தனார் முன்னர் நடத்திய நாம் தமிழர் என்ற பெயரையே இந்த இயக்கம் பயன்படுத்தியது. பின்னர் இது நாம் தமிழர் கட்சியாக தேர்தல் அரசியலில் பங்கேற்றது.

தனித்தே போட்டி: நாம் தமிழர் கட்சி இதுவரை தனித்தே அத்தனை தேர்தல்களையும் சந்தித்து வந்துள்ளது. தமிழ்நாட்டில் கணிசமான வாக்கு வங்கியை உருவாக்கி வைத்துள்ளது நாம் தமிழர் கட்சி. சீமான் திராவிட இயக்க மூத்த தலைவர் முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழியை திருமணம் செய்தார். இவர்களுக்கு தற்போது ஒரு மகன் உள்ளார்.

Kayalvizhi Seeman to become Naam Tamilar Party next General Secretary?

சீமான் கட்சி மீதான விமர்சனம்: சீமான் தமது கட்சியை முறையாக நடத்தவில்லை; பொதுக்குழு, செயற்குழு என்பதெல்லாம் கூட்டப்பட்டது இல்லை என்கிற விமர்சனங்கள் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் நாம் தமிழர் கட்சியில் இன்று இளைஞர்களாக இணைவர்கள் அடுத்த சில ஆண்டுகளில் அக்கட்சியை விட்டு வெளியேறி திமுக, அதிமுகவில் இணைவது தொடர்ந்தும் இருந்து வருகிறது. அதேநேரத்தில் சீமான் மனைவி கயல்விழி, நாம் தமிழர் கட்சி விவகாரங்களில் தலையிடுகிறார் என கூறப்பட்டாலும் பொதுவெளியில் இதுவரை விவாதப் பொருளாக அவர் இருந்தது இல்லை.

போலீஸ் ஸ்டேஷனில் சீமானுடன் கயல்விழி: நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் சீமான் ஆஜரான போது, கயல்விழியும் உடன் வந்தார். கயல்விழியும் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். ஒரு குடும்ப பிரச்சனை அதற்காக கயல்விழி உடன் வந்திருப்பார் என கடந்து செல்லப்பட்டது.

Kayalvizhi Seeman to become Naam Tamilar Party next General Secretary?

எதிர்பார்க்காத ஒன்றா?: ஆனால் நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் தடா சந்திரசேகரன் படத் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 'அண்ணி கயல்விழி' பேசுவார் என அறிவிக்கப்பட்டது. இதை கயல்விழியே எதிர்பார்க்காததைப் போலத்தான் அவரது இயல்பு வெளிப்பட்டது. இதற்கு முன்னர் ஒரு சில மேடைகளில் கயல்விழி பேசியிருந்தாலும் தற்போதைய சூழலில் இந்த மேடையேற்றம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

மேடையேற்றப்பட்ட கயல்விழி: இந்த மேடையில் ஏறி பேசிய கயல்விழி, நாம் தமிழர் கட்சியின் உட்கட்சி பிரச்சனைகளையும் தொட்டுவிட்டுப் போனார். நாம் தமிழர் கட்சியில் தமக்கு எதிரான போக்கு இருந்தது; அதில் தடா சந்திரசேகரன் நிலைப்பாடு என பட்டும் படாமலும் கண்கலங்கியபடி பேசினார் கயல்விழி. இதை சீமானும் ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தார். கயல்விழியின் இந்த மேடையேற்றமும் நேற்று சீமான் தெரிவித்த ஒரு பதிலும்தான் இப்போது நாம் தமிழர் கட்சியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது,

Kayalvizhi Seeman to become Naam Tamilar Party next General Secretary?

அடுத்த பொதுச்செயலாளர் பதவி?: இந்த நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களிடம் பேசினார் சீமான். அப்போது நாம் தமிழர் கட்சியின் அடுத்த பொதுச்செயலாளர் யார்? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. எங்கள் கட்சியினரை விட நீங்கள் ஆர்வமாக இருக்கிறீர்கள் என கமுக்கமாக சிரித்துவிட்டு, பொதுக்குழுவில் கூடி முடிவெடுப்போம் என்று மட்டும் சொன்னார் சீமான்.

Kayalvizhi Seeman to become Naam Tamilar Party next General Secretary?

பொதுச் செயலாளராகும் அண்ணி கயல்விழி?: தடா சந்திரசேகரன், சீமானால் "மூத்தவர்" என அழைக்கப்பட்டார். அதேபோல கயல்விழியால் "மாமா" என அழைக்கப்பட்டவர். அதாவது சீமானுக்கு அதிமுக்கியமானவருக்குதான் பொதுச்செயாலளர் பதவி வழங்கப்பட்டிருந்தது. தற்போதைய நிலையில் சீமானுக்கு அதிமுக்கியாமனவர் அல்லது தடா சந்திரசேகரனுக்கு இணையானவர் என்றால் கயல்விழி சீமான் மட்டும்தான். ஆகையால் நாம் தமிழர் கட்சியின் பொதுச் செயலாளர் பதவி கயல்விழி சீமானுக்கு கொடுக்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை.. அதாவது தேமுதிக போல நிறுவனத் தலைவர் விஜயகாந்த்/ பொருளாளர் பிரேமலதா வியகாந்த் பாணியில்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+