எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக
சென்னை: சட்டமன்ற தேர்தலில் அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், விஜய பாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அணி திரண்டனர். தவெகவுக்கு ஆதரவளித்தனர். திமுகவின் ஆதரவுடன் எடப்பாடி முதல்வராகும் கனவும் நடைபெறவில்லை. அமைச்சரவையில் இடம்பெறும் வேலுமணி அணியின் முயற்சியும் நடைபெறவில்லை.
வேலுமணி எம்எல்ஏக்கள் 5 பேர் எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்தனர். மேலும் 4 எம்எல்ஏக்கள் தங்களின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனர். பிரச்சனை வேறு திசையில் பயணிப்பதால் அதிமுகவில் பழனிசாமி, வேலுமணி அணியினர் சமாதானம் ஆக முடிவு செய்துள்ளனர். இதை சி.வி. சண்முகம் வீட்டிற்கு வந்த கே.சி. வீரமணி உறுதிபடுத்தியுள்ளார்.

சி.வி சண்முகம் வீட்டில் கே.சி வீரமணி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி, எம்ஆர்சி நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் வீட்டிற்கு வந்தார். அப்போது வீரமணி செய்தியாளர்களிடம், "நாங்கள் அனைவரும் ஒன்றாகிவிட்டோம். தாய், பிள்ளை எல்லாம் ஒன்றாகிவிட்டோம். உங்களுக்கு செய்தி வேண்டும் அவ்வளவு தானே. எல்லா பிரச்சனையும் தீர்ந்து ஒன்று சேர்ந்துவிட்டோம்" என்றார்.
இதுகுறித்து அதிமுக ஐடி விங் எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், எனக்கு பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மக்களுக்காகவே இயங்கும் என்று புரட்சி தலைவி அம்மா கூறியுள்ளார். கோடான கோடி தொண்டர்களின் தியாகத்தால் வளர்ந்த இந்த எஃகு கோட்டையை இனி எவராலும் அசைக்க முடியாது!
இன்றே சமாதானம்
இனி நமக்குள் பிரிவில்லை.. இந்த எஃகு கோட்டையை தகர்க்க இனி எவருக்கும் வழியில்லை. நம் இலக்கு ஒன்றுதான்... அது கோட்டையில் மீண்டும் நமது இரட்டை இலை கொடி பறப்பது மட்டுமே. நாளை நமதே.. தமிழ்நாடும் நமதே என்று கூறியுள்ளனர். இதன் மூலம் பிரிந்துள்ள அதிமுக இன்றே ஒன்றிணைவது உறுதியாகியுள்ளது.
-
சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி, பாமக போட்ட பிச்சை! சி.வி.சண்முகம் காட்டம் -
எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்.. சிவி சண்முகத்தை அடுத்து சி. விஜயபாஸ்கரும் பரபர ட்வீட் பதிவு -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ்












Click it and Unblock the Notifications