Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொதிக்கும் கேசிஆர்.. சிக்னல் தரும் ஸ்டாலின்.. பிளாக் செய்த மம்தா -பாஜகவிற்கு எதிராக உருவாகும் டீம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேசிய அளவில் மத்திய பாஜக அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் எதிராக பல்வேறு மாநில முதல்வர்கள் கொதித்து எழ தொடங்கி உள்ளனர். 2024 லோக்சபா தேர்தலில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், தெலுங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ், மேற்கு வங்க முதல்வர் ஸ்டாலின் மம்தா பானர்ஜி ஆகியோர் முக்கிய அரசியல் சக்திகளாக இருப்பார்கள் என்று கணிக்கப்படுகின்றது..

கடந்த சில நாட்களாக மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் எதிராக இந்த 3 மாநில முதல்வர்கள் கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறார்கள். மற்ற சில மாநில முதல்வர்கள் மத்திய அரசை எதிர்த்து வந்தாலும் தமிழ்நாடு, மேற்கு வங்கம், தெலுங்கானா மாநில முதல்வர்களின் நிலைப்பாடுகள் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

லோக்சபா தேர்தல் தொடங்கி 5 மாநில சட்டசபை தேர்தல் வரை தேசிய அரசியல் களத்தில் இவர்கள் மூவரின் கருத்துக்கள் முக்கியத்துவம் பெற்று வருகிறது. இதனால் தேசிய அளவில் மாநில கட்சியை சேர்ந்த முதல்வர்களின் புதிய அணி ஒன்று உருவாகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

கேசிஆர் கொதிப்பு

கேசிஆர் கொதிப்பு

கடந்த சில நாட்களாக மத்திய அரசுக்கும் பிரதமர் மோடிக்கு எதிராக தெலுங்கானா முதல்வர் கேசிஆர் கடுமையாக பேசி வருகிறார். சமீபத்தில் பட்ஜெட் குறித்து பேசிய கேசிஆர் பிரதமர் மோடிக்கு தொலைநோக்கு பார்வையே இல்லை. பாஜகவிற்கு வெட்கம் இல்லை. அந்த கட்சியை வங்கக்கடலில் வீசி எறிந்தால்தான் நாடு நன்றாக இருக்கும். மத்திய அரசு நடந்து கொள்ளும் விதத்தை பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது. பிரதமர் மோடி குறுகிய மனப்பான்மை கொண்டு இருக்கிறார்.

கடும் பேட்டி

கடும் பேட்டி

பிரதமர் மோடிக்கு விதவிதமாக தொப்பி போடவே நேரம் சரியாக இருக்கிறது. பஞ்சாப் சென்றால் டர்பன், தமிழ்நாடு வந்தால் லுங்கி என்று தோற்றத்தை மாற்றுகிறார். ஆனால் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. மக்களை பாஜக ஏமாற்றிவிட்டது. மத்திய பட்ஜெட் என்பதே கோல்மால் பட்ஜெட்தான். நாட்டில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இதற்காக நாடு முழுக்க பல லட்சம் மக்களை நான் சந்தித்துள்ளேன். விரைவில் நான் என்னுடைய முன்னேற்ற பாலிசி திட்டங்களை அறிவிப்பேன் என்று கேசிஆர் காட்டமாக குறிப்பிட்டார்.

ஸ்டாலின் அழைப்பு

ஸ்டாலின் அழைப்பு

இன்னொரு பக்கம் முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததில் இருந்த மத்திய அரசுக்கு எதிரான அரசியலை நடத்தி வருகிறார். ஒன்றியம் என்ற வார்த்தை பிரயோகம் தொடங்கி நீட் எதிர்ப்பு மசோதா வரை பல இடங்களை முதல்வர் ஸ்டாலின் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி உள்ளார். அதோடு அனைத்து இந்திய சமூக நீதி கூட்டமைப்பு மூலம் சமூக நீதி அரசியல் செய்யும் கட்சிகளை ஒருங்கிணைக்க முதல்வர் ஸ்டாலின் முயன்று வருகிறார். தேசிய கட்சிகள் உட்பட 37 கட்சிகளுக்கு இந்த கடிதம் சென்றாலும், வலுவான மாநில கட்சிகளுக்கு விடப்பட்ட அழைப்பாகவே இது பார்க்கப்படுகிறது.

ஆளுனருடன் மோதல்

ஆளுனருடன் மோதல்

தேசிய அளவில் முதல்வர் ஸ்டாலின் எதிர்கட்சிகளை இதன் மூலம் ஒருங்கிணைக்கிறாரோ என்ற கேள்வி எழுந்து இருக்கிறது. இன்னொரு பக்கம் தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராகவும் முதல்வர் ஸ்டாலின் நிலைப்பாடு எடுத்து வருகிறார். சமீபத்திய முரசொலி கட்டுரை தொடங்கி மதவாத அரசியல் செய்யும் பாஜகவை அம்பலப்படுத்துவோம் என்று முதல்வர் ஸ்டாலின் தனது கடிதத்தில் சொன்னது வரை பல இடங்களில் ஸ்டாலின் நேரடியாக பாஜகவிற்கும், மோடிக்கும் எதிராக நிலைப்பாடு எடுத்து வருகிறார்.

மம்தா பிளாக்

மம்தா பிளாக்

இது போக இன்னொரு பக்கம் மம்தா பானர்ஜி தேசிய அளவில் எதிர்கட்சிகளை ஒன்று திரட்டும் பணிகளில் இறங்கி உள்ளார். உத்தர பிரதேசத்தில் அகிலேஷுக்கு ஆதரவு, கோவாவில் போட்டி என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை தேசிய கட்சியாக மாற்றும் வேலைகளை தீவிரமாக செய்து வருகிறார். அதிலும் சமீபத்தில் மேற்கு வங்க கவர்னர் ஜெகதீப்பை ட்விட்டரில் பிளாக் செய்யும் அளவிற்கு மம்தா பானர்ஜி தீவிரமாக பாஜக எதிர்ப்பு நிலைப்பாட்டை கடைப்பிடித்து வருகிறார்.

 மம்தா போட்டி பிளான்

மம்தா போட்டி பிளான்

அதிலும் சமீபத்தில் மம்தா பானர்ஜி அளித்த பேட்டியில், உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் இப்போதே அகிலேஷ் யாதவை ஆதரிக்கிறேன். வரும் லோக்சபா தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி உத்தர பிரதேசத்தில் போட்டியிடும் என்று மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். தேசிய அரசியலில் குதிக்க வசதியாக மம்தா பானர்ஜி இந்த முடிவை எடுத்து இருக்கிறார். இவரின் இந்த அறிவிப்பு தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

அணி திரள்கிறார்களா

அணி திரள்கிறார்களா

தொடர்ந்து கே.சி.ஆர், ஸ்டாலின், மம்தா பானர்ஜி ஆகியோரின் இந்த பேட்டிகள் மற்றும் அறிவிப்புகள், தேசிய அளவில் மாநில முதல்வர்கள் ஒன்று திரளும் அறிகுறியோ என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. வலுவான பாஜகவிற்கு எதிராக இந்த மாநில முதல்வர் ஒன்று திரள்கிறார்களோ என்ற கேள்வியை இந்த பேட்டிகள் எழுப்பி உள்ளன. இதற்கு முன்பும் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திர பாபு நாயுடு இப்படி மாநில முதல்வர்களை திரட்ட முயன்றார்.

கடந்த முறை நடக்கவில்லை

கடந்த முறை நடக்கவில்லை

ஆனால் அப்போது அது தோல்வியில் முடிந்தது . இப்போது மீண்டும் 3 மாநில முதல்வர்கள் மத்திய பாஜக எதிர்ப்பு நிலைப்பாட்டை கடைபிடிக்க தொடங்கி உள்ளனர். ஆம் ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவால், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ஆந்திர முதல்வர் ஜெகன், உள்ளிட்ட சிலர் பாஜக எதிர்ப்பு நிலைப்பாட்டை கடைபிடித்தாலும் இவர்கள் அந்த அளவிற்கு கடுமையான நிலைப்பாட்டை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+