நான் அப்செட் ஆயிட்டேன்னா.. அவன் முகத்தை பார்த்தாலே போதும்! கீர்த்தி சுரேஷுக்கு இப்படி ஒரு பழக்கமா?
சென்னை: தமிழ் திரை உலகில் அறிமுகமாகி தற்போது பாலிவுட் வரை கால் பதித்திருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். தான் அப்செட் ஆனால் என்ன செய்வேன் என்பது குறித்து பேசி இருக்கிறார். குறிப்பாக அவன் முகத்தைப் பார்த்தாலே எல்லாம் மறந்து விடும் என கூறி இருக்கிறார். யார் அந்த அவன்? என்பது தான் ரசிகர்களின் தேடுதலாக இருக்கிறது.
தமிழ் திரை உலகில் அறிமுகமாகி தற்போது பாலிவுட் வரை கால் பதித்திருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். பிரபல இயக்குநர் ஏஎல் விஜய் இயக்கத்தில் வெளியான இது என்ன மாயம் படத்தின் மூலம் திரைத் துறையில் அறிமுகமானார்.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளை பிசியாக நடித்து வந்த அவர் மகாநடி படத்தின் மூலம் தேசிய விருதை பெற்றார். தொடர்ந்து விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்தாலும் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட மகாநடி படம் தான் அவரை இந்திய அளவில் பேச வைத்தது.

கீர்த்தி சுரேஷின் நடிப்பை பார்த்து பலரும் மிரண்டு போனது என்னவோ உண்மை தான். அந்த படத்துக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. ஆனால் அதற்குப் பிறகு கீர்த்தி சுரேஷுக்கான வாய்ப்புகள் குறைய தொடங்கியது. தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் உடன் மாமன்னன் படத்தில் நடித்தார். அதற்குப் பிறகு சைரன், ரகு தாத்தா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
பாலிவுட்டிலும் பேபி ஜான் படத்தின் மூலம் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனாலும் இந்த படம் தோல்வி அடைந்தாலும் அடுத்தடுத்து பாலிவுட் படங்களில் புக் ஆகி வருகிறார் கீர்த்தி சுரேஷ். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது நெருங்கிய நண்பரான ஆண்டனி தட்டிலை திருமணம் செய்து கொண்டார். கோவாவில் நடைபெற்ற திருமணத்திற்கு விஜய், த்ரிஷா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் தனி விமானத்தில் சென்றது குறிப்பிடத்தக்கது.
திருமணத்திற்கு பிறகு சற்று சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கும் அவர் கடைசியாக உப்பு கப்புரம்பு படத்தில் நடித்திருந்தார். அந்தப் படமும் படுதோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் தான் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த கீர்த்தி சுரேஷ் தனது வாழ்க்கையின் சிக்கலான தருணங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார்.
மேலும் அப்போது தனது தனிமை மற்றும் மனநிலையை போக்குவதற்காக என்ன செய்வேன் என்பது குறித்து விளக்கியிருக்கிறார்," எப்போதாவது நான் அப்செட் ஆகிவிட்டால் வயிறு நிறைய சாப்பிடுவேன். எனது காரை எடுத்துக் கொண்டு நீண்ட தூரம் லாங் டிரைவ் போவேன். நல்ல இசையை கேட்கும்போது எனது மனநிலை மாறிவிடும். மேலும், நான் வீட்டில் ஒரு நாய்க் குட்டியை வளர்க்க தனிமையில் நான் அப்செட் ஆக உணர்ந்தால் அவன் முகத்தை பார்த்தாலே போதும் எல்லா பிரச்சனையும் போய் விடும்" எனக் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications