நெக்ஸ்ட் லெவலுக்கு ரெடி.. கீழடியில் 9-ம் கட்ட அகழாய்வு பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கீழடியில் 9-ம் கட்ட அகழாய்வு பணிகளை இன்று ஏப்ரல் 6-ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.. சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக முதல்வர் இந்நிகழ்வை துவக்கி வைத்தார்.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் நடைபெற்ற 8 கட்ட அகழாய்வு பணிகளின்போது பழங்கால தமிழர்கள் பயன்படுத்திய தொல்பொருட்கள் ஏராளமாக கிடைத்தன.

 Keezhadi: excavation of phase 9 in keezhadi from today and chief minister inaugurates on video

இவை அனைத்தும் 2600 ஆண்டுகள் பழமையானவை என ஆய்வுகளின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது... குறிப்பாக, தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை கீழடி அகழாய்வுத் தளத்தில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் தொடர்ந்து இப்போது வரை ஐந்து கட்டங்களாக அகழாய்வு மேற்கொண்டு வருகிறது.

தமிழர்களின் பண்பாட்டின் முக்கியத்துவம் மற்றும் தொன்மையை நிரூபிக்கவும், அதை உலகளவில் கொண்டு செல்லவும் தொல்லியல் துறை உலகப் புகழ்பெற்ற அறிவியல் ஆய்வகங்களுக்கு கீழடியில் கண்டெடுக்கப்பட்ட முக்கியமான கண்டுபிடிப்புகளை அனுப்பி அதிகாரபூர்வமான முடிவுகளை பெற்றுள்ளது. கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட மாதிரிகளின் அறிவியல் காலக்கணிப்பு கிமு ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வைகை ஆற்றங்கரையில் நகரமயமாக்கல் இருந்ததையும், கங்கைச் சமவெளியின் நகரமயமாக்கலுக்கு சமகாலமானது என்பதையும் உறுதிபடுத்தியுள்ளது.

அதேபோல, கி.மு. ஆறாம் நூற்றாண்டில் தமிழ்ச் சமூகம் கல்வியறிவும் எழுத்தறிவும் பெற்றிருந்தனர் என்பதை அறிவியல் அடிப்படையில் நிலைநிறுத்தியுள்ளது.. கீழடி அகழாய்வில் 1000-க்கும் மேற்பட்ட குறியீடுகளும், 60-க்கும் மேற்பட்ட தமிழி எழுத்துப் பொறிப்புக்கொண்ட பானை ஓடுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த பானை ஓடுகளில் குவிரன் ஆதன், ஆதன் போன்ற தனிநபர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளதன் வாயிலாக சமுதாயத்தின் பல்வேறு பிரிவினரும் கல்வியறிவு பெற்றிருந்தனர் என்பது வெளிப்படுகிறது.

இந்த அகழாய்வு பணிகளின்போது கிடைத்த தொல்பொருட்கள் ரூ.18.42 கோடியில் கட்டப்பட்டுள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகத்தை கடந்த மாதம் 5-ந் தேதி முதல்வர் ஸ்டாலின் நேரில் திறந்து வைத்து பார்வையிட்டார். அதனை தொடர்ந்து கீழடியை பொதுமக்கள் பார்வையிட்டும் வருகின்றனர்.. இந்த நிலையில், கீழடியில் 9-ம் கட்ட அகழாய்வு பணிகள் மற்றும் திருவண்ணாமலை கீழநமண்டியில் அகழாய்வு பணிகளை இன்று 6ம் தேதி முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார்.

 Keezhadi: excavation of phase 9 in keezhadi from today and chief minister inaugurates on video

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து வீடியோ கான்பரஸ் வாயிலாக தொடங்கி வைத்தார்.. கீழடி, அகரம், கொந்தகை என 3 இடங்களில் 9-ம் கட்ட அகழாய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.. வீரணன் என்பவரது நிலத்தில் முதலில் எட்டு குழிகள் தோண்டப்பட உள்ளன. கீழடியில் 110 ஏக்கர் பரப்பளவில் தொல்லியல் மேடு உள்ளதாகவும் முழுவதுமாக அகழாய்வு செய்தால் தான் பண்டைய கால தமிழர்களின் வாழ்வியலை முழுமையாக வெளி கொணர முடியும் என தொல்லியலாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தமிழக தொல்லியல் துறை அதிகாரிகள் அருங்காட்சியகத்தில் பொருட்களை காட்சிப்படுத்தும் பணியில் இருந்ததால் ஜனவரிக்கு பதில் ஏப்ரலில் மீண்டும் அகழாய்வு பணிகள் தொடங்குகின்றன... இதுவரை 8 கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்றுள்ளன. மத்திய தொல்லியல் துறை 3 முறையும் தமிழக தொல்லியல் துறை 5 முறையும் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளன... இதில், 8ம் கட்ட அகழாய்வில் 20 குழிகள் தோண்டப்பட்டு சுடுமண் பொம்மை உறை கிணறுகள் உள்பட 1000-க்கும் மேற்பட்ட பணிகள் மேற்கொள்ளவுள்ளனர். கொந்தகை அகழாய்வு தளத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+