உல்லாசத்துக்கு ஆசைப்பட்டு.. நண்பருடன் பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்தால் மொத்தம் 6 பேர்? கேரளா பரபர

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆன்லைன் மோசடிகள் நாளுக்கு நாள் பெருகிவருகின்றன.. புதுபுது செயலிகளை பயன்படுத்தி, புதுவிதமான மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன.. இதற்கு நடுவில் தொழிலதிபர்களை ஏமாற்றி பணம் நகை பறிக்கும் செயல்களும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.. இதனால் உல்லாசத்துக்கு ஆசைப்பட்டு, ஏமாந்து போகும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தபடியே உள்ளது.. கேரள மாநிலத்தில் என்ன நடந்தது?

கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்தவர் சந்தீப் குமார்.. இவருக்கு 27 வயதாகிறது.. இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடுப்பி மாவட்டம் குந்தாப்புராவுக்கு வந்திருந்தார்.. அப்போது அவருக்கு பைந்தூரை சேர்ந்த அப்துல் சவத் என்ற 28 வயது நபரின் நட்பு கிடைத்தது.

Prostitution Kerala

உல்லாசம் - அழைப்பு

இதையடுத்து, அப்துல் சவத், சந்தீப் குமாருக்கு குந்தாப்புராவை சேர்ந்த அஸ்மா (42) என்பவரை அறிமுகம் செய்து வைத்தார். இந்நிலையில், கடந்த 2ந்தேதி அஸ்மா, சந்தீப் குமாருக்கு போன் செய்து, குந்தாப்புராவில் தனக்கு தெரிந்த ஒரு வீட்டில் ஜாலியாக இருக்கலாம் என்று சொல்லி அழைத்துள்ளார்.

உடனே சந்தீப்குமாரும் குந்தாப்புராவுக்கு கிளம்பி வந்துள்ளார்.. சந்தீப் குமாரை அழைத்துக் கொண்டு, அங்கிருந்த ஒரு வீட்டிற்குள் நுழைந்த அஸ்மா, தன்னுடைய நண்பர்கள் அப்துல் சவத் உள்ளிட்ட 5 நபர்களுக்கு போனை போட்டு அதே வீட்டுக்கு வரவழைத்தார்..

ரவுண்டு கட்டிய 6 பேர்

சிறிது நேரத்தில் 6 பேரும் சேர்ந்து, சந்தீப்குமாரை ரவுண்டு கட்டிவிட்டனர்.. கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரூ.3 லட்சம் ரூபாயை கேட்டுள்ளனர். இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத சந்தீப் குமார், அங்கிருந்து தப்பிக்க முயன்றார்.. ஆனால் 6 பேரும் சேர்ந்து சந்தீப் குமாரை சரமாரியாக தாக்கி, கயிற்றால் கட்டி போட்டுவிட்டனர்..

அவரது பாக்கெட்டிலிருந்த 6,200 ரூபாயை பறித்து கொண்டனர்.. மேலும், சந்தீப் குமாரின் செல்போனிலிருந்து கூகுள் பே மூலம் 3 தவணைகளாக ரூ.35 ஆயிரம் வரை டிரான்ஸாக்‌ஷன் செய்து கொண்டனர்.. பின்னர் சட்டை பாக்கெட்டிலிருந்த ஏடிஎம் கார்டு, பாஸ்வேர்டை பெற்றுக்கொண்டு, ரூ.40 ஆயிரம் பணத்தையும் எடுத்துக் கொண்டு இரவு 11 மணிக்கு சந்தீப் குமாரை விடுவித்தனர்.. போலீசுக்கு போனால் கொன்றுவிடுவதாகவும் மிரட்டிவிட்டு சென்றனர்..

நிலைகுலைந்த சந்தீப்குமார்

இந்த கொலை வெறி தாக்குதலில் நிலைகுலைந்து போன சந்தீப்குமார், உடனடியாக இதுகுறித்து உடுப்பி டவுன் போலீசில் புகார் அளித்தார். இந்த விவகாரத்தை அறிந்து அதிர்ச்சியடைந்த போலீஸ் சூப்பிரண்டு ஹரிராம் சங்கர், இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அத்துடன் தனிப்படை ஒன்றையும் அமைத்தார்.. இறுதியில் அப்துல் சவத், அஸ்மா, சைபுல்லா (38), முகமது நசீர் (36), அப்துல் சத்தார் (23), அப்துல் அஜீஸ் (26) ஆகிய 6 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த 18 லட்சம் மதிப்பிலான 2 கார்கள் பறிமுதல் செய்தனர்.. தற்போது 6 பேருமே சிறையில் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+