பாஜக நிர்வாகியான ரௌடி பல்லு மதன் வீட்டில் கெரோசின் குண்டு வீச்சு.. சென்னையில் பரபரப்பு!
சென்னை: சென்னையில் பிரபல ரௌடியும் பாஜக நிர்வாகியுமான பல்லு மதன் என்பவர் வீட்டில் கெரோசின் குண்டு வீசப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் நடந்த கொலையில் அவருக்கு தொடர்பு உள்ளதால் இந்த தாக்குதல் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்த ரௌடி மதனகோபால் என்ற பல்லு மதன். இவர் மீது அப்பகுதி காவல் நிலையங்களில் ஏராளமான வழக்குகள் உள்ளன. இதனால் ஏ+ குற்றவாளிகள் லிஸ்ட்டில் இருந்து வருகிறார். ரௌடி பினுவின் கூட்டாளியான பல்லு மதன், ஏராளமான குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்.இந்த பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்றபோது ரௌடி பல்லு மதனை சென்னை மத்திய குற்றப்பிரிவின் ரவுடி ஒழிப்பு போலீசார் பள்ளிக்கரணை பகுதியில் மடக்கிப் பிடித்தனர். பல்லு மதன் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் தான் வடக்கு மலையம்பாக்கத்தில் குழுமியிருந்த 75 ரவுடிகளை போலீசார் கூண்டோடு பிடித்தனர்.

மதனகோபால் என்ற பல்லு மதன், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் இணைந்து, தற்போது பாஜகவில் பட்டியல் அணி மாவட்ட தலைவராக உள்ளார். இந்நிலையில், பல்லு மதன் வீட்டில் மர்ம நபர்கள் சில மண்ணெண்ணெய் குண்டு வீசப்பட்டுள்ளது.
பள்ளிக்கரணை பகுதியில் பெயிண்டர் பிரசாந்த் என்பவரை கொலை செய்தவர்கள் பல்லு மதன் உதவியாக இருந்ததாகவும், அதனால், பிரசாந்த்தின் ஆதரவாளர்கள், மதன் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீசியுள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications