பெரிய விக்கெட்.. வலையில் "புள்ளி" சிக்குகிறதா.. இடைத்தேர்தலா.. ஓவர்டேக் செய்யும் பாஜக பிளான்
கரூர் திமுகவில் இருந்து முக்கிய புள்ளி பாஜக பக்கம் தாவலாம் என்கிறார்கள்
சென்னை: பாஜகவில் இருந்து ஏற்கனவே டாக்டர் சரவணன் திமுக பக்கம் சென்றுள்ள நிலையில், திமுகவில் இருந்து முக்கிய நபரை இழுக்க, தாமரை கட்சி பிளான் செய்து வருகிறது என்று ஒரு செய்தி சுற்றலில் விடப்பட்டுள்ளது. கிசுகிசுக்கப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு, திமுக மூத்த தலைவர் திருச்சி சிவாவின் மகன் சூர்யாவை, பாஜக தன் பக்கம் வளைத்து போட்டது.. இந்த இணைப்பு விழாவையும் சிறப்பாக கொண்டாடியது.
எந்த பொறுப்பிலும் இல்லாத சிவாவை, கட்சியில் சேர்த்து கொண்டதை ஒரு சாதனையாக பாஜக சொல்கிறதே என்று திமுக தரப்பில் கிண்டல்கள் வெளிவந்தன..

திருச்சி சிவா
ஆனால், இதற்கு பிறகு, திமுகவில் இருந்து மேலும் சிலர் பாஜக பக்கம் தாவுவார்கள் என்ற தகவல் பாஜக தரப்பில் இருந்தே வெளியானது.. விரைவில் எம்பி தேர்தல் வர உள்ளநிலையில், அதற்கான ஆபரேஷனையும் பாஜக கையில் எடுத்துவிட்டதாகவும் சொன்னார்கள்.. இதற்கு நடுவில், செய்தியாளர்களிடம் பேசிய இந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் பேசியிருந்த பேச்சு அதிர்வலையை தமிழகத்தில் ஏற்படுத்தியிருந்தது.

40 எம்எல்ஏக்கள்
"மகாராஷ்டிராவில் நடைபெறுவது போல தமிழகத்தில் நடைபெறும்.. தமிழக முதல்வர் எப்போது ராஜினாமா செய்வார் என்று தெரியவில்லை. ஏற்கனவே எம்எல்ஏக்கள் ஒரு சிலரிடம் பேரம் பேசுவதாக தகவல் வந்து கொண்டிருக்கிறது... அதுவும் உளவுத்துறை மூலமாக வருகிறது" என்று கொளுத்திப்போட்டார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், திமுகவில் நிறைய தமிழ்நாட்டில் ஒரு ஏக்நாத் ஷிண்டே உருவாவார்.. யார் அது என்று கேட்டால் அதை ஊடகங்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும்" என்றும் கிளப்பி விட்டார்..

ராதாகிருஷ்ணன்
இதனால், திமுகவில் அந்த எம்எல்ஏக்கள் யாராக இருக்கும்? என்ற எதிர்பார்ப்பு எகிறியது.. ஆனால், அப்படி யாருமே பாஜக பக்கம் இதுவரை தாவவில்லை.. மாறாக, அதிமுகவில் இருந்து ஒரு முக்கிய புள்ளியை தட்டி தூக்கி உள்ளது.. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்ட கே.ஆர்.எம் ராதாகிருஷ்ணன் தான் தற்போது பாஜகவில் இணைந்தார்.. காரணம், யார் கட்சியில் சேர்ந்தாலும் அவர்களுக்கு முக்கிய பொறுப்பு தந்து அழகு பார்க்கும் பாஜக.. அப்படித்தான், திருச்சி சூர்யாவுக்கும் பெரிய போஸ்டிங் தந்தது...

தாமரை மொட்டு
தற்போது அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், பல மாஜிக்கள், எம்எல்ஏக்கள் அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது.. இதில் சிலர் மீது புகார்கள் உள்ள நிலையில், இவர்கள் திமுக பக்கம் சாயலாமா? என்ற குழப்பத்தில் இருக்கிறார்களாம்.. மேலும் சிலரோ, டெல்லியின் ஆதரவு இருந்தால் மட்டும் போதும், எந்த விசாரணையும், ரெய்டும் தங்களை அணுகாது என்பதால், பாஜக பக்கம் தாவலாமா என்று யோசித்து வருகிறார்களாம்.. பாஜகவா? திமுகவா? என்ற இருவித தத்தளிப்பில் இருந்து வரும் நிலையில், இன்னொரு தகவல் கசிந்து வருகிறது.

பிளான்கள்
அதன்படி, கரூர் மாவட்டத்தை பாஜக குறி வைத்துள்ளதாம்.. குறிப்பாக, திமுக எம்எல்ஏ ஒருவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டிருக்கிறதாம்.. அதுமட்டுமல்ல, அந்த தொகுதியில் நடக்கும் இடைத்தேர்தலில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடுவார் என்று புதிதாக ஒன்றை கிளப்பி விட்டுள்ளனர்.. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.. ஆனால், திமுக தரப்பிலோ வேறு விதமான பிளான்கள் போடப்பட்டு வருகிறதாம்.. சிவகங்கை மாவட்டத்தில் பாஜகவுக்கு சென்ற நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுக்க ஆளும் தரப்பு முயன்று வருகிறதாம்.. திமுகவின் முயற்சியை முறியடிக்கத்தான், கரூரை குறி வைத்து காய் நகர்த்தி வருகிறதாம் பாஜக..

50 + 10 எம்எல்ஏக்கள்
இப்படித்தான் 10 திமுக எம்எல்ஏக்கள் தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக எடப்பாடி கொளுத்தி போட்டார்.. 50 அதிமுக எம்எஏக்கள் தங்களுடன் லிங்கில் இருப்பதாக, ஆர்எஸ் பாரதி பதிலுக்கு கொளுத்தி போட்டார்.. அதுபோலதான் இப்படியெல்லாம் யூகங்கள் கிளம்பி வரும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. ஆளும் கட்சியில் உள்ள திமுக எம்எல்ஏ, பாஜக பக்கம் செல்ல வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட போகிறது? இடைத்தேர்தல் என்பதையெல்லாம் அந்த அளவுக்கு எளிதாக, உடனடியாக நடத்திவிட முடியாது என்றும் கூடுதலாக கருத்து சொல்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. இருந்தாலும் அந்த திமுக எம்எல்ஏ யாராக இருக்கும்?!
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications