Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட வைத்திலிங்கம்.. அதிமுகவில் அடுத்தடுத்து ட்விஸ்ட்.. ஓபிஎஸ் அடுத்த மூவ்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவின் ஓ.பன்னீர் செல்வத்தின் முக்கிய ஆதரவாளரான வைத்திலிங்கத்துக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிமுகவில் உட்கட்சி பூசல் உச்சத்தில் உள்ள நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் ஜூலை 11ம் தேதி நடைபெறும் என்று இபிஎஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஓபிஎஸ் தரப்பில் அதிமுக பொதுக்குழு நீதிமன்ற உத்தரவை அவமதிப்பு செய்ததாக கூறி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

key supporter of AIADMKs O Panneer Selvam Team, Vaithilingam has been confirmed of corona infection

இதுமட்டுமல்லாமல், கட்சியின் செயற்குழு பொதுக்குழு முடிவுகளில் நீதிமன்றம் தலையிடமுடியாது என எடப்பாடி பழனிசாமி அணியினர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளனர். இதனிடையே அண்மையில் எடப்பாடி பழனிசாமியின் மனைவி ராதாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா உறுதியானதையடுத்து பழனிசாமியின் மனைவி வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதனால் எடப்பாடி பழனிசாமியும் அதிமுக முக்கிய நிர்வாகிகளை சந்திக்காமல், தொலைபேசி மூலமாக ஆலோசனை மேற்கொள்வதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஓ.பன்னீர் செல்வத்தின் முக்கிய ஆதரவாளரான வைத்திலிங்கத்திற்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து மருத்துவர்களின் ஆலோசனைபடி, அவர் சென்னையில் உள்ள அவரது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

அண்மைக் காலமாக கட்சியில் வரும் பிரச்னைகளை சரி செய்ய வேண்டிய முக்கியப் பணிகளை வைத்திலிங்கம் மூலமாக ஓபிஎஸ் செய்து வந்தார். தற்போது அவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதால், அவரது பணிகளை ஜெசிடி பிரபாகர் மூலம் செய்து வருவதாக கூறப்படுகிறது. வைத்திலிங்கம் தொலைபேசி வாயிலாக ஆலோசனை மேற்கொள்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே இபிஎஸ் மீது அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் தரப்பில் வைத்திலிங்கம் மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. அதோடு, எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் வழங்கி வந்த விளக்கங்களுக்கு, ஓபிஎஸ் தரப்பில் வைத்திலிங்கம் தான் செய்தியாளர்களை சந்தித்து பதிலளித்து வந்தார். இதனால் ஓபிஎஸ் தரப்புக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக பேசப்படுகிறது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபத்தை எட்டியுள்ள நிலையில், முக்கிய நிர்வாகிகள் கொரோனா வைரஸால் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனிடையே அண்மையில் வைத்திலிங்கம் ஊருக்கு சென்றிருந்தபோது, இபிஎஸ் தரப்பில் அவருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் அடுத்தடுத்து அதிமுகவில் நடக்கும் சம்பவங்களால் இரு தரப்பும் பரபரப்பாக செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+