குஷ்பு திடீர் விலகல்.. தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்!
சென்னை: தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை குஷ்பு திடீரென ராஜினாமா செய்துள்ளார். குழந்தைகள் மற்றும் மகளிர் நல மேம்பாட்டுத்துறை குஷ்புவின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பு நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நடிகை குஷ்பு தமிழ்நாட்டு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். குஷ்புவுக்கு கோவில் கட்டப்பட்டதே, தமிழ் ரசிகர்கள் அவர் மீது கொண்டிருந்த அபிமானத்திற்குச் சான்று. சினிமாவை தொடர்ந்து அரசியலிலும் கால் பதித்தார் குஷ்பு.

2010 காலகட்டத்தில் திமுகவில் இருந்த குஷ்பு 2014ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பின்னர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குஷ்பு, 2020 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். 2021-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு, தோல்வியைத் தழுவினார் குஷ்பு பின்னர், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் பதவி குஷ்புவுக்கு வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், குஷ்பு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார். அப்போது பேசிய குஷ்பு, நான் எப்போதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக குரல் கொடுத்து வருகிறேன். பெண்களின் உரிமைகளுக்கும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன். பெண்களின் சுயமரியாதைக்காக தொடர்ந்து போராடி வருகிறேன்.
பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு குரல் கொடுக்க தற்போது எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. பெண்கள் பயமின்றி, தங்களுக்கு நேரும் பாதிப்புகளைக் கூற வேண்டும். உங்களுக்கு குரல் கொடுக்க நான் இருக்கிறேன். எப்போது வேண்டுமானாலும் என்னைத் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்தார்.
எனினும் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி வந்தார் குஷ்பு. மணிப்பூரில் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக குஷ்பு குரல் கொடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் குஷ்பு பேசியதாகவும் சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை குஷ்பு திடீரென ராஜினாமா செய்துள்ளார். கடந்த 2023 பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக பொறுப்பேற்ற குஷ்பு, ஒன்றரை ஆண்டுகளில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications