அப்போ மட்டும் இனிச்சதாக்கும்.. ஏன் ஒன்றிய அமைச்சர்கள்னு சொல்றதுதானே.. குஷ்பு விளாசல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: டெல்லியில் திமுக அமைச்சர்களாக இருந்தப்போ ஒன்றிய அமைச்சர்கள்னு ஏன் கூப்பிடலை என நடிகை குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

Recommended Video

    DMK-வின் Ondriya Arasu-க்கு Khushbu பதிலடி | DMK vs BJP | Oneindia Tamil

    திமுக அரசு பொறுப்பேற்றவுடன் ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி கூட்டத்தில் பேசிய தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மாநிலங்கள் ஒன்று சேர்ந்ததுதான் மத்திய அரசு என கூறியிருந்தார்.

    இதையடுத்து இனி மத்திய அரசை ஒன்றிய அரசு என்றே அழைப்போம் என திமுக அரசு தெரிவித்தது. இவ்வாறே திமுக கூட்டணி கட்சிகளும் அழைத்து வருகிறார்கள். இதற்கு பாஜகவினர் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர்.

    ஸ்டாலின் விளக்கம்

    ஸ்டாலின் விளக்கம்

    இந்த நிலையில் நேற்றைய தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபை கூட்டத்தொடரில் ஒன்றிய அரசு என ஏன் அழைக்கிறோம் என்பதை விளக்கினார். அவர் கூறுகையில் ஒன்றியம் என்ற சொல் தவறான சொல் அல்ல. ஒன்றியம் என்ற வார்த்தையில் கூட்டாட்சி தத்துவம் அடங்கி உள்ளது.

    சொல்

    சொல்

    அரசியலமைப்பு சட்டத்திலும் ஒன்றியம் என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளன. எனவே ஒன்றியம் என்ற வார்த்தையை கண்டு யாரும் மிரள வேண்டாம். ஒன்றிய அரசு என்ற சொல்லையே பயன்படுத்துவோம் என ஸ்டாலின் விளக்கமளித்தார்.

    பாஜக நிர்வாகி

    பாஜக நிர்வாகி

    இதற்கு பதில் அளித்து தமிழக பாஜக தலைவர் எல் முருகன் செய்தியாளர்களிட்ம பேசுகையில் ஒன்றியங்கள் சேர்ந்தது மத்திய அரசு என்றால் இனி முதல்வரை ஒன்றிய முதல்வர் என்றுதான் அழைப்போம் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பாஜக நிர்வாகி குஷ்பும், ஸ்டாலினின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

    மத்திய அமைச்சர்கள்

    மத்திய அமைச்சர்கள்

    இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது திமுக எம்பிக்கள் சிலரும் மத்திய அமைச்சர்களாக்கப்பட்டனர். இவர்களை மத்திய அமைச்சர்கள் என்ற பெருமையுடன் திமுக அழைத்தது.

    திமுக அமைச்சரவை

    திமுக அமைச்சரவை

    ஏன் அப்போதே ஒன்றிய அமைச்சர்கள் என அழைக்க வேண்டியதுதானே. இப்போது ஒன்றிய அரசு என அழைக்க ஞானம் வந்த போது மத்தியில், அமைச்சரவையில் திமுக இடம் பெற்றிருந்த போது தூங்கிக் கொண்டிருந்ததா? எங்களுக்கு தெரிய வேண்டியதெல்லாம் ஒன்றுதான்.

    ஞானோதயம்

    ஒன்றிய அரசு என அழைப்பதன் பின்னணியில் உள்ள நோக்கம்தான் என்ன? நம் நாட்டை இந்தியா அல்லது பாரதம் என்றுதானே அழைக்கிறோம், பல மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் இருக்கிறது என்பதால் இந்திய குடியரசு என்றா அழைக்கிறோம்? மே 2ஆம் தேதிக்கு பிறகு ஏன் இந்த திடீர் ஞானோதயம் என கேள்வி எழுப்பியுள்ளார் குஷ்பு.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+