செம்ம டேலண்ட்.. 8ம் வகுப்பு வரை படித்துள்ள குஷ்பு.. சொத்து எவ்வளவு.. வேட்புமனுவில் ஆச்சர்ய தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை குஷ்பு 8ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார் என்ற தகவல் அவரது வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சிறுவயது முதலே வறுமையை வென்று வளர்ந்தவள் நான் என்று அடிக்கடி கூறியுள்ள குஷ்பு, 9ம் வகுப்பை பாதியில் கைவிட்டவர் என்பது பலருக்கும் தெரியாது. குஷ்புவுக்கு இந்தி, தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் என பல மொழிகளில் பேசவும் எழுதவும் தெரியும்.

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி அதிமுக கூட்டணி சார்பில் பாஜ வேட்பாளராக நடிகை குஷ்பு களமிறக்கப்பட்டுள்ளார். நேற்று குஷ்பு நுங்கம்பாக்கத்தில் உள்ள மண்டல அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

முன்னதாக வள்ளுவர் கோட்டம் அருகில் இருந்து தொண்டர்களுடன் அவர் ஊர்வலமாக சென்றார். இதில் அதிமுக நிர்வாகிகள் டி.சிவராஜ், சின்னய்யன், கராத்தே தியாகராஜன், விஜய் ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.

குஷ்பு மீது வழக்குகள்

குஷ்பு மீது வழக்குகள்

குஷ்பு நேற்று வேட்புமனு தாக்கல் செய்த மனுவில் சொத்து பட்டியலையும் இணைத்துள்ளார். அத்துடன் அவர் மீதான வழக்கு விவரங்களையும் குறிப்பிட்டுள்ளார். குஷ்பு தன் மீது தமிழகம் முழுவதும் 4 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ரொக்கம்

ரொக்கம்

குஷ்பு சொத்துபட்டியலில், தனது கையிருப்பாக ரூ.2 லட்சத்து 15 ஆயிரத்து 600ம், அவரது கணவர் சுந்தர்.சி கையிருப்பாக ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோன்று, குஷ்பு தன் பெயரில் 8.55 கிலோ தங்கம், 78 கிலோ வெள்ளி, 2 கார்கள் மற்றும் கணவர் பெயரில் 3 கார்கள், 495 கிராம் தங்கம், 9 கிலோ வெள்ளி உள்ளன என்றும் கூறியுள்ளார்.

எவ்வளவு

எவ்வளவு

குஷ்பு தனது பெயரில் ரூ.4 கோடியே 55 லட்சத்து 45 ஆயிரத்து 693 மதிப்பில் அசையும் சொத்துக்களும், தனது கணவர் பெயரில் ரூ.1 கோடியே 83 லட்சத்து 98 ஆயிரத்து 58 மதிப்பிலான அசையும் சொத்துக்களும் உள்ளது என்று வேட்பு மனுவில் கூறியுள்ளார். அத்துடன் தனது முதல் குழந்தை பெயரில் 11 லட்சத்து 89 ஆயிரத்து 304 மதிப்பிலும், இரண்டாவது குழந்தை பெயரில் ரூ.12 லட்சத்து 560 மதிப்பில் அசையும் சொத்துக்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கணவர் பெயரில் 16 கோடி

கணவர் பெயரில் 16 கோடி

குஷ்பு தன் பெயரில் செங்கல்பட்டு முட்டுக்காடு பகுதியில் சொகுசு பங்களா, திருக்கழுகுன்றத்தில் பங்களா, கணவர் பெயரில் மேடவாக்கத்தில் பங்களா, கோயம்புத்தூரில் பங்களா என தனது பெயரில் ரூ.17 கோடியே 99 லட்சம் 87 ஆயிரத்து 500 மதிப்பிலான அசையா சொத்துக்களும், கணவர் பெயரில் ரூ.16 கோடியே 57 லட்சம் மதிப்பிலான அசையா சொத்துக்களும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது பெயரில் ரூ.3 கோடி 45 லட்சம், 13 ஆயிரம் 950 மதிப்பிலும், கணவர் பெயரில் 55 லட்சம் 55 ஆயிரம் 939 மதிப்பில் கடன்கள் உள்ளதாகவும் குஷ்பு வேட்பு மனுவில் கூறியுள்ளார்.

குஷ்பு கல்வி தகுதி

குஷ்பு கல்வி தகுதி

இதற்கிடையே குஷ்பு தனது கல்வி தகுதியாக கூறிய தகவல் தான் சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி உள்ளது. நடிகை குஷ்பு தான் 8ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளதாக வேட்பு மனுவில் கூறியுள்ளார். இதில் ஆச்சர்யமான இன்னொரு விஷயம் என்னவென்றால் குஷ்பு படித்தது 8ம் வகுப்பு என்றாலும் இந்தி, தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் பல மொழிகளில் பேசவும் எழுதவும் தெரிந்தவர் 8ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் என்று சொன்னால் யாரும் நம்ப முடியாது. அந்த அளவிற்கு கல்வி மற்றும் கேள்விகளில் ஆளுமை உடையவர் என்பதை யாரும் மறுக்க முடியாது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+