"அவரும் நானும்".. நடுவில் கொரோனா.. குஷ்பு போட்ட உருக்கமான போட்டோ.. நெகிழும் ரசிகர்கள்!
சென்னை: கொரோனா சிகிச்சைக்கு பிறகு தனிமைப்படுத்திக் கொண்டுள்ள கணவர் சுந்தர் சியை இப்படி தள்ளியிருந்துதான் காண வேண்டியுள்ளது என புகைப்படத்துடன் நடிகை குஷ்பு உருக்கமாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாவது அலை அனைவரையும் வாட்டி வதைத்து வருகிறது. முதல் அலையில் தப்பியவர்கள் இந்த இரண்டாவது அலையின் கொடூர பிடியில் சிக்கிக் கொள்கிறார்கள்.
அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் உள்ளிட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இயக்குநர் சுந்தர் சிக்கு கொரோனா வைரஸ் உறுதியானது.

இரு மகள்களுக்கும் கொரோனா நெகட்டிவ்
இதையடுத்து குஷ்பு, அவரது இரு மகள்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர்களுக்கு நெகட்டிவ் என வந்தது. இதையடுத்து சுந்தர் சி அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கொரோனாவிலிருந்து மீண்ட சுந்தர் சி மருத்துவமனையிலிருந்து கடந்த 14ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

குஷ்பு ட்வீட்
எனினும் அவர் 7 நாட்களுக்கு வீட்டு தனிமையில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனால் அவர் கெஸ்ட் ஹவுஸில் தங்கியிருப்பதாகவும் இன்னும் 7 நாட்களுக்கு பிறகே அவரை சந்திக்க முடியும் என்றும் குஷ்பு ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

போன்
இந்த நிலையில் அவர் இன்றைய தினம் ஒரு ட்வீட்டை போட்டுள்ளார். அதில் வீட்டுக்குள் ஒரு நாற்காலியில் சுந்தர் சி அமர்ந்து கொண்டு போனை பார்த்துக் கொண்டிருக்கிறார். குஷ்பு வீட்டு வராண்டாவில் உள்ள படிக்கெட்டில் உட்கார்ந்து கொண்டு தனது கணவனை பார்க்கிறார். இருவரும் மாஸ்க் அணிந்து கொண்டிருக்கிறார்.

3 நாட்கள்
குஷ்பு ட்வீட்டில் கூறுகையில் தற்போது நாங்கள் இருவரும் இப்படித்தான் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறோம். இன்னும் 3 நாட்கள்தான் உள்ளன. அதன் பின்னர் சுந்தர் சி வீட்டுக்கு வந்துவிடுவார் என உருக்கமாக குஷ்பு தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications