சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உடனடி ஆக்ஷன்.. தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு நன்றி தெரிவித்த நடிகை குஷ்பு!

Google Oneindia Tamil News

சென்னை: ஹேக் செய்யப்பட்ட தனது ட்விட்டர் பக்கத்தை மீட்டுக் கொடுத்த தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் அவரது குழுவினருக்கு நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு நன்றி தெரிவித்துள்ளார்.

நடிகை குஷ்பு ட்விட்டரில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அரசியல், சமூகம், சினிமா தொடர்பாக அவர் பதிவு செய்யும் கருத்துகள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வந்தன.

மும்பையில் 4 நாட்கள் கனமழை.. 5ஆவது நாளாக இன்று வெளுத்து வாங்கும்.. ரெட் அலர்ட் வார்னிங் மும்பையில் 4 நாட்கள் கனமழை.. 5ஆவது நாளாக இன்று வெளுத்து வாங்கும்.. ரெட் அலர்ட் வார்னிங்

இந்த நிலையில் அண்மையில் குஷ்புவின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு ப்ரையன் என்ற பெயருக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து அவரது ட்விட்டர் பக்கத்திலிருந்து தேவையற்ற ட்வீட்கள் வந்தன.

மாற்றம்

மாற்றம்

அவரது பாஸ்வேர்ட் உள்ளிட்ட அனைத்தும் மாற்றப்பட்டு குஷ்புவால் அவரது பக்கத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக நடிகை குஷ்பு டிஜிபி சைலேந்திர பாபுவிடம் புகார் மனு அளித்தார்.

சைபர் கிரைம் போலீஸார்

சைபர் கிரைம் போலீஸார்

அது போல் சைபர் கிரைமிலும் புகார் அளித்திருந்தார். நடிகை குஷ்புவின் கணக்கை முடக்கியது யார் எனக் கேள்வி எழுப்பி ட்விட்டருக்கு சென்னை சைபர் க்ரைம் போலீஸ் கடிதம் எழுதி உள்ளது. இதனிடையே குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தை பழையபடி மீட்டெடுத்துவிட்டார்.

Recommended Video

    Khushboo TamilNadu-ஐ யாராலும் பிரிக்க முடியாது Part 2 | Oneindia Tamil
    தமிழக டிஜிபி

    தமிழக டிஜிபி

    இதையடுத்து குஷ்பு தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் போட்டுள்ளார். அவர் தனது ட்வீட்டில், "ஹேக் செய்யப்பட்ட எனது ட்விட்டர் கணக்கை துரிதமாக, பாதுகாப்பாக மீட்டு கொடுக்க உதவிய டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் அவரது குழுவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

    மழை

    மழை

    நாடாளுமன்ற மழைக் கால கூட்டத்தொடரின்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பிரதமர் மோடி கொட்டும் மழையில் குடையை அவரே பிடித்தவாறு இருந்தார். அந்த புகைப்படத்தை பதிவிட்ட குஷ்பு, ராகுல், பிரியங்காவுக்கு பாதுகாப்பு அதிகாரிகள் குடை பிடித்திருந்த புகைப்படத்தையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தவர் குஷ்பு.

    English summary
    Khushu Sundar thanked DGP Sylendra babu and his team for retrieving her Twitter account.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X