தமிழக பாஜகவில் ஏகப்பட்ட துணைத் தலைவர்கள்.. அப்ப குஷ்புவுக்கு தேசிய பதவி? ஆனால் கிடைக்கவிடுவாங்களா?
சென்னை: தமிழக பாரதிய ஜனதா கட்சியில் வந்து இணைவோருக்கு எல்லாம் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டு வரும் நிலையில் இன்று கட்சியில் சேர்ந்த நடிகை குஷ்புவுக்கு தேசிய அளவிலான பதவி ஒன்று வழங்கப்படுமா? என கேள்வி எழுந்துள்ளது.
தமிழக பாஜகவில் பதவிகளுக்கு ஒரு பார்மேட் வைத்திருக்கிறார். எந்த கட்சியில் இருந்து எத்தனை சீனியர்கள், பிரபலங்கள் வந்தாலும் அவர்களுக்கு முதலில் மாநில துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுவிடும். 2-ம் நிலை நிர்வாகிகள், பிரமுகர்களின் மவுஸைப் பொறுத்து அடுத்த கட்டமாக பதவிகள் வழங்கப்படும்.

தேசிய பதவி இல்லை
பாஜகவில் நீண்டகாலமாக இருந்து வரும் சீனியர்கள் ஒருசிலருக்கு தேசிய அளவிலான பதவிகளை டெல்லி மேலிடம் வழங்கும். ஆனால் இந்த முறை தேசிய அளவிலான பதவி எதுவும் தமிழக பாஜக தலைவர்கள் ஒருவருக்கு கூட வழங்கவில்லை. தேசிய செயலாளர் பதவியில் இருந்த ஹெச். ராஜா அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுவிட்டார்.

பாஜகவில் குஷ்பு
இந்தியாவிலேயே அனேகமாக பாஜகவின் தேசிய பதவிக்கு தகுதி பெறாத ஒரே மாநில நிர்வாகிகள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள். இந்த களேபரங்களுக்கு மத்தியில்தான் டெல்லியில் பாஜக பொதுச்செயலர் சிடி ரவி முன்னிலையில் நடிகை குஷ்பு அந்த கட்சியில் இணைந்தார். பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா முன்னிலையில்தான் குஷ்பு இணைவார் என கூறப்பட்டது. ஆனால் குஷ்பு வருகையை டெல்லி பாஜக மேலிடமே விரும்பவில்லையோ என்னவோ இப்படி ஒரு நிகழ்வு நடந்துவிட்டது.

குஷ்புவுக்கு என்ன பதவி?
சரி இது முடிந்த கதையாகிவிட்டது. காங்கிரஸ் கட்சியில் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்தவர் குஷ்பு. இந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு அல்லது டிஸ்மிஸ் செய்யப்பட்ட நிலையில் பாஜகவில் ஐக்கியமானார் குஷ்பு. இதனால் பாரதிய ஜனதா கட்சியில் குஷ்புவுக்கு என்ன பதவி கிடைக்கும்? என்பதும் விவாதங்களில் ஒன்று. பத்தோடு பதினொன்றாக இருந்துவிடுங்கள் என தமிழக பாஜக துணைத் தலைவர் பதவியை கொடுத்து ஓரம்கட்டி வைக்கவும் வாய்ப்பிருக்கிறது.

தேசிய பதவி கிடைக்குமா? கிடைக்கவிடுவார்களா?
தேசிய கட்சியில் தேசிய அளவில் பதவியில் இருந்தவர் என்பதால் பாஜகவிலும் தேசிய அளவிலான செய்தித் தொடர்பாளர் போன்ற ஒரு பதவியை கொடுக்கவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் ஏற்கனவே இருக்கும் தமிழக பாஜக சீனியர்கள் ஒருத்தருக்கு கூட தேசிய பதவி தராமல் இன்று வந்த நடிகை குஷ்புவுக்கு அப்படி ஒரு பதவியை கிடைக்கவிடுவார்களா? என்கிற கேள்வியும் எழுகிறது. குஷ்புவுக்கு கிடைக்கப் போகும் பதவியை வைத்து புதிய கோஷ்டி அத்தியாயம் பாஜகவில் உதயமாகப் போகிறது என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.
-
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்











Click it and Unblock the Notifications