காங்கிரஸுக்கு குட்பை... பாஜகவில் நடிகை குஷ்பு இன்று பிற்பகல் இணைகிறார்?
சென்னை: காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரான நடிகை குஷ்பு பாரதிய ஜனதா கட்சியில் இன்று பிற்பகல் இணைய உள்ளதாக மீண்டும் தகவல்கள் ரெக்கை கட்டி பறக்கின்றன.
திமுகவில் இருந்து வெளியேறிய குஷ்பு, காங்கிரஸ் கட்சியில் நீண்டகாலமாக பணியாற்றி வருகிறார். அந்த கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராகவும் இருந்து வருகிறார்.

ஆதங்கப்பட்ட குஷ்பு
ஆனால் குஷ்புவால் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் இணைந்து செயல்பட முடியாத நெருக்கடி இருந்து வருகிறது. அண்மையில் கொரோனாவால் காலமான காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் படத் திறப்பு நிகழ்ச்சியில் இந்த ஆதங்கத்தை குஷ்பு பகிரங்கமாகவே வெளிப்படுத்தி இருந்தார்.

திடீரென மேடையேறிய குஷ்பு
இதன்பின்னர் பாஜக தலைவர்கள் பலரும் குஷ்புவை அந்த கட்சியில் இணைய வலியுறுத்தி பேட்டிகள் கொடுத்தனர். பாஜக தலைவர்கள் பலரும் குஷ்புவுக்கு வாழ்த்து சொல்வதும் அவரும் பாஜக தலைவர்களுக்கு வாழ்த்து சொல்வதும் தொடர்ந்தது. இந்நிலையில் திடீரென உ.பி. ஹத்ராஸ் சம்பவத்துக்கு நீதி கோரி சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் போராட்டத்தில் மேடையேறி பேசினார் குஷ்பு.

காங்கிரஸ் சமாதானம்?
இதனால் பாஜகவில் இணைவார் என்கிற சலசலப்புகள், வதந்திகள், அழைப்புகள் அனைத்துக்கும் குஷ்பு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாகவே கருதப்பட்டது. குஷ்புவும் பாஜகவில் தான் இணையவில்லை என கூறி விளக்கம் தந்திருந்தார். இதனைத் தொடர்ந்து குஷ்புவை சமாதானப்படுத்தும் வகையில் காங்கிரஸ் மேலும் ஒரு முக்கிய பொறுப்பை வழங்க ஆலோசிப்பதாகவும் தகவல்கள் கிடைத்தன. இதனை நாமும் பதிவு செய்திருந்தோம்.

பாஜகவில் இன்று குஷ்பு ஐக்கியம்?
இருப்பினும் குஷ்பு பாஜகவில் இணையப் போகிறார்; டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜேபிநட்டா முன்னிலையில் திங்கள்கிழமையன்று இணைய இருக்கிறார் என புதிய தகவல்கள் வலம்வருகின்றன. இந்த தகவல்களை இதுவரை குஷ்பு மறுக்காமல் இருந்தும் வருகிறார். பாஜகவில் இணைந்தாலும் குஷ்புவுக்கு முக்கிய பதவி வழங்க ஆர்.எஸ்.எஸ். இயக்கம் எதிர்க்கிறது என்கிற ஒருதகவலும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications