ஊழல் செய்த செந்தில் பாலாஜி கைது..அமலாக்கத்துறை மீது சாயம் பூசாதீர்! கொந்தளித்த குஷ்பு
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும், நிலையில் அமலாக்கத்துறை மீது திமுக கடும் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறது. இந்நிலையில், விசாரணை அமைப்புகள் மீது அரசியல் சாயம் பூசுவதா? என்று பாஜகவை சேர்ந்த குஷ்பு கேள்வியெழுப்பியுள்ளார்.
நேற்று காலை அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, தலைமை செயலகத்தில் உள்ள அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் ரெய்டு நடத்தினர். சுமார் 17 மணி நேரம் நடைபெற்ற இந்த ரெய்டு இன்று அதிகாலையில் முடிவடைந்தது. இதனையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை காரில் அழைத்து சென்றனர். அப்போதுதான் செந்தில் பாலாஜிக்கு எதிர்பாராத விதமாக நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கிறது.

அவர் நெஞ்சுவலியில் கதற, அதிகாரிகள் உடனடியாக அவரை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதித்தனர். விசாரணையில் முடிவில் செந்தில் பாலாஜியை கைது செய்ய அமலாக்கத்துறையினர் முயன்றார்களா? என்று கேள்வியெழுந்தது. ஆனால் இதற்கு அதிகாரிகள் விளக்கமளிக்கவில்லை. இந்நிலையில், உடனடியாக அமைச்சர்கள் சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று செந்தில் பாலாஜியின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தனர்.
இந்த விவகாரம் பெரியதாக வெடித்த நிலையில், "விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்று கூறிய பிறகும், நெஞ்சுவலி ஏற்படும் அளவுக்கு நெருக்கடி கொடுத்து - மனிதநேயமற்ற முறையில் பாஜக.,வின் அமலாக்கத்துறை நடந்து கொண்டது கண்டனத்திற்குரியது?" என அமலாக்கத் துறை நடவடிக்கைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் அமலாக்கத்துறை நடவடிக்கைக்கும், பாஜகவுக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜகவை சேர்ந்த குஷ்பு, "விசாரணை அமைப்புகள் மீது அரசியல் சாயம் பூசவதா?" என கேள்வியெழுப்பியுள்ளார். இந்த பேட்டியின்போது அவர் பேசியதாவது, "அமலாக்கத்துறை, உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படிதான் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆனால் மத்திய அரசு மீது பலர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதற்கும் மத்திய அரசுக்கும் என்ன தொடர்பு? அமலாக்கத்துறை மீது அரசியல் சாயம் பூச முயற்சிகள் நடக்கின்றன. இது கடும் கண்டனத்திற்குரியது.
இப்போது அமலாக்கத்துறை மீது குற்றம்சாட்டுபவர்கள், அவர்களுக்கு சாதகமான நடவடிக்கையை அமலாக்கத்துறை மேற்கொண்டால் அதை பாராட்டுவார்கள். அதே அமலாக்கத்துறையின் நடவடிக்கை இவர்களை பாதித்தால், பழிவாங்கும் நடவடிக்கை என விமர்சிக்கின்றனர். இவர்கள் சொல்வதுபோலவே பார்த்தால், தமிழ்நாட்டில் பாஜகவுக்கு எதிராக அரசு செயல்படுகிறது என்று சொல்லலாமா? அப்படி சொன்னால் அதை இவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?
ஊழல் காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டிருப்பதையும் தி.மு.க. தலைவர் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதையும் சேர்த்து வலை பின்னுவது ஏன்? மோடி என்ற ஒரு நபரை தோற்கடிக்க இத்தனை பேர் கூட்டு சேர வேண்டி உள்ளது அப்படியானால் பலம் எந்த பக்கம் இருக்கிறது. பலமான தலைவர் யார்? என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தற்போது வரை பிரதமரை எதிர்த்து போட்டியிட எந்த எதிர்க்கட்சி தலைவரும் முன்வரவில்லை" என்று கூறியுள்ளார்.
-
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications