Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு கிறங்கடிக்குதே.. ஜிஎஸ்டி ரோட்டில் இதை கவனிச்சீங்களா.. பெருங்களத்தூர் குஷி

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எப்போது திறக்கப்படும் என்ற ஆர்வம் ஒருபக்கம் எழுந்து வந்தாலும், 2 விதமான கோரிக்கைகளை அந்த பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் விடுத்து வருகிறார்கள்.

வண்டலூர் அருகே சுமார் 59.86 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 393.74 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து முனையத்தின் இறுதிக்கட்ட பணிகள் இத்தனை நாளும் நடந்து கொண்டிருந்த நிலையில், கடந்த ஜுன் மாதமே, "கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்" என்ற பெயரில் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படவிருந்தது.

Kilambakkam Bus Stand and Do you know What are the Two main issues in Kilambakkam Bus Terminus

கட்டுமான பணிகள்: ஆனால், இந்த பஸ் ஸ்டாண்டு பகுதியில், மழைநீர் தேங்குவது, மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்தது.. அதேபோல, பஸ்கள், எளிதாக சென்று வரும் வகையில் கிளாம்பாக்கத்தை சுற்றி சாலை அமைக்கவும் திட்டமிடப்பட்டது..

மேலும், பஸ்நிலைய மேற்கூரை பணிகள், பயணிகள் வந்து தங்குவதற்கான தங்குமிடம், உணவகம், கடைகள் பணிகளும் ஆரம்பமாயின. இந்த பணிகள் எல்லாமே இந்த மாதத்திற்குள் முடித்துவிட முடியாது என்பதால்தான், கிளாம்பாக்கம் பஸ்நிலைய திறப்பு தள்ளிப்போகும் என்று அதிகாரிகள் கூறியிருந்தனர்.

இப்போது, கிட்டத்தட்ட 99 சதவீத பணிகளும் முடிவடைந்து, திறப்பு விழாவுக்கு பேருந்து நிலையம் தயாராகி வருவதாக தெரிகிறது. முதல் கட்டமாக நெல்லை எக்ஸ்பிரஸ் பஸ்களும், அடுத்த கட்டமாக மதுரைக்கும் பஸ்களை இயக்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

அதாவது, முதல்கட்டமாக திருநெல்வேலிக்கும், அடுத்து மதுரைக்கும், 3-வது கட்டமாக விழுப்புரத்துக்கும் பஸ்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், இதுகுறித்து உறுதியான தகவல்கள் இனிமேல் அறிவிக்கப்படும்.. இப்படி படிப்படியாக பஸ் ஸ்டாண்டு முழுவதையும் பயன்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்து இருப்பதாகவும் தெரிகிறது.

கிளாம்பாக்கம்: எனினும் கிளாம்பாக்கம் பஸ் முனையத்தால் மேலும் டிராபிக் அதிகமாகும் என்ற கவலை ஏற்கனவே கிளம்பியது. அதனால்தான், ஜிஎஸ்டி சாலையில் டிராபிக் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான், சென்னையில் இருந்து கிளாம்பாக்கம் வருவதற்கென ஒரு வழியும், சென்னைக்கு வெளியே இருந்து கிளாம்பாக்கம் வருவதற்கு வேறு வழியும் என 2 வழிகளை சிஎம்டிஏ மும்முரமாக உருவாக்கி வருகிறது. இதைத்தவிர, 3வதாக ஒரு மாற்றுப்பாதையையும் சிஎம்டிஏ உருவாக்க திட்டமிட்டுள்ளது.

அதன்படி, சென்னை நகரை தொடாமல் வனத்துறைக்கு சொந்தமான நிலத்தில் ஒரு புதிய ரூட்டை, அதாவது ஐயஞ்சேரி - கிளாம்பாக்கம் பாதையில் புதிய ரூட்டை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.. இதுகுறித்து ஏற்கனவே அமைச்சர் சேகர்பாபு விளக்கமாக கூறியிருந்தார்.

"போக்குவரத்து நெரிசல் ஏற்படுதை தடுக்க ஐயஞ்சேரி - கிளாம்பாக்கம் பாதையில் உள்ள போலீஸ் அகாடமி சாலையை 6 கி.மீ. தூரத்துக்கு மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதில் சில கிமீ வனப்பகுதி நிலங்களாக உள்ளதால், அந்த பகுதிகளை கையகப்டுத்த வனத்துறையிடமும் பேசி வருகிறோம்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளதால், இது ஒருவித நிம்மதியை தந்து வருகிறது. எனினும், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தரப்பில் 2 வேண்டுகோள்களும் விடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டுக்கு பக்கத்தில், எந்த ரயில்வே ஸ்டேஷன்களும் இல்லை.. சென்னையின் நாலாபுற பக்கங்களிலிருந்தும் பயணிகள், கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டுக்கு வரவேண்டுமானால், வருவோர், பஸ், ஆட்டோ, அல்லது கேப்களில்தான் பஸ் ஸ்டாண்டுக்கு வந்து சேரவேண்டியதிருக்கும். ஏற்கனவே ஜிஎஸ்டி ரோட்டில், டிராபிக் ஜாம் நெருக்கி தள்ளும் நிலையில், இந்த நிலைமை வந்துவிட்டால், இன்னும் டிராபிக் அதிகமாகிவிடும்.

வாகன ஓட்டிகள்: இப்போதே வாகன ஓட்டிகள் சிக்கி திணறிதான் நெரிசலில் சென்று கொண்டிருக்கிறார்கள். இனி கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டுக்கு வருபவர்களும்சரி, வெளியூரில் இருந்து இறங்கும் பயணிகளும் சரி, மொத்தமாக வந்துசேரும்போது நெரிசல் விழிபிதுங்கிவிடும். இதையெல்லாம் தவிர்க்க வேண்டுமானால், உடனடியாக அந்த பகுதியில் ரயில் நிலையம் அமைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்கிறார்கள் அந்த பகுதி மக்கள்.

இப்படி ஒரு பிளான் நீண்ட காலமாகவே தெற்கு ரயில்வேவுக்கு இருப்பதால், விரைவில் இந்த பணியும் ஆரம்பமாகும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறர்கள்.

2 கோரிக்கைகள்: அதேபோல, கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டை திறப்பதால் மட்டுமே, போக்குவரத்து சிக்கல்கள் தீர்ந்துவிடாது.. இந்த கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டுக்கு பயணிகள் எப்படி வந்து சேர முடியும்? சென்னையின் எங்கோ மூலைப்பகுதிகளில் உள்ளவர்கள் இந்த கிளாம்பாக்கத்துக்கு வரவேண்டுமானால், அதற்கே பஸ் வசதி வேண்டும்.. சென்னை நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து புதிய பேருந்துகள் கிளாம்பாக்கத்துக்கு அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

Kilambakkam Bus Stand and Do you know What are the Two main issues in Kilambakkam Bus Terminus

ஆக, கிளாம்பாக்கம் பஸ் முனையம் திறக்கப்படவேண்டுமானால், ஒருபக்கம் ரயில் வசதி தேவை, இன்னொரு பக்கம் பஸ் வசதியும் தேவையாக இருக்கிறது.. இந்த இரண்டு வசதிகளும் இருந்தால் மட்டுமே கிளாம்பாக்கம் பஸ் முனையம் திறப்பது மக்களுக்கு உதவியாக இருக்கும் என்று இரட்டை கோரிக்கைகள் வெடிக்க துவங்கி உள்ளன.

பெருங்களத்தூர்: எத்தனையோ பெரும்சிரமத்துக்கு நடுவில், தமிழக அரசு இந்த கிளாம்பாக்கம் பஸ் முனையத்தை திறக்க நடவடிக்கை எடுத்து வரும்நிலையில், மேற்கண்ட இந்த 2 நடவடிக்கையையும் எடுத்துவிட்டால், இன்னும் சிறப்பாக இருக்கும்., சென்னையின் வரப்பிரசாதமாக கிளாம்பாக்கம் நிச்சயம் திகழும் என்று பொதுமக்கள் சொல்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளே அதிக அளவில் இயக்கப்படும் என்று தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நடைமுறை சாத்தியமானால், கோயம்பேடு பஸ் நிலையத்திலிருந்து வரும் பேருந்துகளால், பெருங்களத்தூர் ஏற்படும் போக்குவரத்து நெரிசலும் வெகுவாக குறையும் என்றும் பெருத்த நம்பிக்கை எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+