கியர் மாறிய கிளாம்பாக்கம்.. சென்னையின் யோகம்.. கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு திறப்பு எப்போது தெரியுமா?
சென்னை: கிளாம்பாக்கம் பஸ் நிலையம் விரைவில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும்நிலையில், அதுகுறித்த இன்னொரு அப்டேட் வெளியாகி உள்ளது.
வண்டலூர் அருகே சுமார் 59.86 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 393.74 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து முனையத்தின் இறுதிக்கட்ட பணிகள் இத்தனை நாளும் நடந்து கொண்டிருந்த நிலையில், கடந்த ஜுன் மாதமே, "கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்" என்ற பெயரில் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படவிருந்தது.
கட்டுமான பணிகள்: ஆனால், நடைமுறை சிக்கல்கள் இங்கு கிளம்பியதால், இதை திறந்து வைப்பது ஒத்திவைக்கப்பட்டது. காரணம், மழை பெய்தாலே, இந்த பஸ் ஸ்டாண்டு பகுதியில், மழைநீர் தேங்குவது, மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்தது..

கட்டுமான பணிகளின்போது, இந்த சிக்கல் தெரியாமல் இருந்த நிலையில், சென்னையில் பெய்த கோடை மழையால், பஸ் ஸ்டாண்டு பகுதி முழுவதுமே நீரில் மிதந்தது.. அதனால், தேங்கி நிற்கும் நீரை மறுபுறம் கொண்டு செல்ல ஜிஎஸ்டி சாலையின் குறுக்கே குழாய் அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டனர்.
அதேபோல, பஸ்கள், எளிதாக சென்று வரும் வகையில் கிளாம்பாக்கத்தை சுற்றி சாலை அமைக்கவும் திட்டமிடப்பட்டது.. மேலும், பஸ்நிலைய மேற்கூரை பணிகள், பயணிகள் வந்து தங்குவதற்கான தங்குமிடம், உணவகம், கடைகள் பணிகளும் ஆரம்பமாயின. இந்த பணிகள் எல்லாமே இந்த மாதத்திற்குள் முடித்துவிட முடியாது என்பதால்தான், கிளாம்பாக்கம் பஸ்நிலைய திறப்பு தள்ளிப்போகும் என்று அதிகாரிகள் கூறியிருந்தனர்.
விரைவில் திறப்பு: இப்போது, இந்த பணிகள் கிட்டத்தட்ட முடியும் நிலைக்கு வந்துவிட்டதாக தெரிகிறது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை, அமைச்சர் சேகர்பாபு, கிளாம்பாக்கத்துக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது, பேருந்து நிலையத்தில் வெளிச்சம் குறைவாக இருந்தால், அதிக வெளிச்சம் தேவையாக இருப்பதால் கூடுதலாக மின்விளக்குகளை அமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து, நேற்றைய தினம், தமிழ்நாடு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டார்..
திறப்பு விழாவுக்கு பேருந்து நிலையம் தயாராகி வரும்நிலையில் இந்த பேருந்து முனையத்தின் நிலைமை, சூழல் குறித்தெல்லாம் அதிகாரிகளிடம் தலைமை செயலாளர் கேட்டறிந்தார்.. மேலும், பேருந்து முனையத்தில் செய்யப்பட்டுள்ள வசதிகள், நடைபெறும் பணிகள் குறித்தும் சிஎம்டிஏ அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ர. ராகுல்நாத், தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆனந்த் குமார் சிங், கண்காணிப்பு பொறியாளர் சீனிவாச ராவ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
திறப்பு விழா: 90 சதவீதத்திற்கு மேல் பணிகள் நிறைவடைந்த நிலையில், மிச்சம் 1 சதவீதம் பணிகளே முடிக்கவேண்டியிருக்கிறதாம். அதனால்தான், திறப்பு விழா தொடர்பான ஆய்வுகளை இப்போதே துவங்கியுள்ளார் தலைமை செயலாளர் என்கிறார்கள்..
அதனால்தான், தலைமை செயலாளர் ஆய்வு மேற்கொண்டபோது, கிளாம்பாக்கம் பேருந்து முனையம் எப்போது திறக்கப்படும் என்று செய்தியாளர்கள் கேட்டனர்.. பிறகு, செப்டம்பர் 15ம் தேதி, பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படுமா என்று மீண்டும் கேட்டனர். இதற்கு தலைமை செயலாளர் பதிலளிக்க மறுத்து விட்டாராம். அப்படியானால், கிளாம்பாக்கம் பேருந்து நிலைய திறப்பு விழாவானது, மேலும் தள்ளிப்போகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

கூடுவாஞ்சேரி: முன்னதாக, கூடுவாஞ்சேரியில் ரவுண்டானா அமைப்பது தொடர்பாகவும் கூடுவாஞ்சேரி, மாடம்பாக்கம் சாலை முதல் மண்ணிவாக்கம் வரை 7 கிமீ தூரத்துக்கும், கண்டிகை முதல் கூடுவாஞ்சேரி வரை 18 கிமீ தூரத்துக்கும், நல்லம்பாக்கம் முதல் ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலை வரை 10 கிமீ தூரத்துக்கும் சாலைகளை அகலப்படுத்துவது தொடர்பாகவும் அதிகாரிகள் குழு ஏற்கனவே ஆலோசித்துள்ள நிலையில், இந்த பணிகள் எப்போது முடியும் என்ற எதிர்பார்ப்பும் எழுகிறது.
அதேபோல, ஆம்னி பஸ்கள் விவகாரம் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது.. ஏற்கனவே, ஆம்னி பஸ் நிறுத்தத்திற்கான இடத்தை படப்பை அருகில் தேர்வு செய்து இருந்தனர். அந்த இடத்தை ஆய்வு செய்தபோது ஆம்னி பஸ்கள் கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு வரும்போதும், பயணிகளை ஏற்றி சென்று செல்லும்போதும், 2 முறை டோல்கேட்டுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கிறதாம்.
தள்ளிபோகிறதா?: அதனால், ஆம்னி பஸ் நிலைய இடத்தை, வேறு இடத்தையும் ஆய்வு செய்து கொண்டு இருப்பதாக சொன்னார்கள். இதுவரை, ஆம்னி பஸ்களுக்கென்று தனியாக நுழைவாயில் ஒதுக்கப்படாத நிலையில், விரைவில் அதற்கும் முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற சிக்கல்களையும் தீர்த்துவிட்டே, கிளாம்பாக்கம் பஸ் முனையம் திறக்கப்படும் என தெரிகிறது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications