தமிழ்நாட்டுக்கே குட்நியூஸ் வருது.. பொங்கலுக்கு ரெடியா இருங்க..கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டுல யார்? வாவ்
சென்னை: கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு எப்போது திறக்கப்படும் என்ற ஆர்வம் சென்னைவாசிகளுக்கு பெருகிவரும் நிலையில், அதுகுறித்த முக்கிய தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
கிளாம்பாக்கத்தில் வடிகால் வசதி பணிகள் நடந்து கொண்டிருப்பதால், பஸ் ஸ்டாண்டு திறப்பது தள்ளிப்போடப்பட்டது. ஜிஎஸ்டி சாலையில், புதிதாக கால்வாய் மற்றும் கல்வெட்டு அமைப்பதற்கான பணிகளும், ரூ.17 கோடியில் துரிதமாக நடந்து வந்தது..

அதேபோல, பஸ் ஸ்டாண்டிலிருந்து வெளியேறும் மழைநீர், சுமார் 180 அடிநீளமுள்ள ஜிஎஸ்டி சாலையை கடந்து கிளாம்பாக்கம் ஏரி, வண்டலூர் ஏரிகளுக்கும் செல்லும் வகையில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் மேற்கொள்ளப்பட்டன.
ரயில் நிலையம்: இதைத்தவிர, பஸ் ஸ்டாண்டு அருகில், சுமார் 1 மீட்டர் அகலம் உள்ள மழைநீர்கால்வாயை 2 மடங்கு அகலப்படுத்துவதுடன், புதிதாக 1180 மீட்டர் நீளத்தில் புதிய கால்வாய் அமைக்கவும், தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே சுமார் 65 மீட்டர் நீளத்தில் சுரங்கப்பாலம் அமைக்கும் பணிகளும் துவங்கப்பட்டன. இதற்கு நடுவில், கிளாம்பாக்கத்தில் ரூ.20 கோடி செலவில் புதிய ரெயில் நிலையம் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது..
இந்த பணிகள் காரணமாக, கிளாம்பாக்கம் பேருந்து முனையம் திறப்பது தள்ளிப்போயுள்ளது என்றாலும், எப்போது திறக்கப்படும் என்பது உறுதியாக தெரியவில்லை.. இந்நிலையில், இதுகுறித்த ஒரு அப்டேட் வெளியாகி உள்ளது.
பறந்த உத்தரவு: தற்சமயம், கிளாம்பாக்கத்தில், 90 சதவீத பணிகள் முடிந்துவிட்டதாம்.. இன்னும் 10 சதவீதம் மட்டுமே உள்ளது.. அய்யஞ்சேரி இணைப்பு சாலை பணிகளும் 90 சதவீதம் முடிக்கப்பட்டு உள்ளதால், எஞ்சிய பணிகளை வரும் 15-ந்தேதிக்குள் பணிகளை முடித்து ஒப்படைக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறதாம். அதனால், இறுதிகட்ட பணிகளை கண்காணித்து வருவதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.
அந்தவகையில், அடுத்த மாதம் இறுதியில் கிளாம்பாக்கம் பஸ்நிலையம் திறப்பு விழாவுக்கு தயாராகிவிடும் என்றும், பொங்கல் பண்டிகைக்கு முன்பே திறக்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும் பெருத்த நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர்.
கடந்த தீபாவளி பண்டிக்கைக்கு முன்பே இந்த பஸ் ஸ்டாண்டை திறக்க திட்டமிடப்பட்டது. ஆனால், அப்போது பெய்த மழையால், மொத்த பிளானும் சொதப்பலாகி, மழைநீர் வடிகால்வாய் மற்றும் இணைப்பு சாலை பணிகள் கையில் எடுக்கப்பட்டன.
விரைவில் ரெடி: அதனால்தான் பொங்கல் பண்டிகையின்போது, இந்த பஸ் ஸ்டாண்டை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவந்துவிட வேண்டும் என்று முடிவாகி உள்ளதாம். அடுத்த மாதம் 15-ந்தேதிக்குள் மீதமுள்ள பணிகளையும் முடிக்க அதிகாரிகள் ஒப்பந்ததாரர்களுக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளதால், கிளாம்பாக்கமே பரபரப்பாக காணப்படுகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications