கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் என்னங்க இது? செல்போன் டவரையே காலி செய்த சென்னை மக்கள்.. முடங்கிய இணையம்
சென்னை: ஒரே நாளில் கிளாம்பாக்கத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவிட்டது. வெளியூர்களுக்கு செல்ல கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டுக்கு வந்த பொதுமக்கள் அளவுக்கு அதிகமாகவே திணறிவிட்டார்கள்.. மேலும் இணையதள சேவையும் முடங்கிவிட்டது.
இன்று ஆயுத பூஜை மற்றும் நாளை விஜய தசமி, நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது.. இதனால் கல்வி நிறுவனங்கள், அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கின்றன.

இதையொட்டி சென்னையில் வசிக்கும் வெளியூர் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு நேற்றைய தினம் புறப்பட்டு சென்றார்கள். பயணிகளின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன..
அதேபோல, தசரா திருவிழா கொண்டாடப்படுவதால் குலசேகரன்பட்டினத்திற்கு சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்தே சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன.. தூத்துக்குடி, திருச்செந்தூர், நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கும் அதிக அளவில் இயக்கப்பட்டள்ளன. இதனால், கிளாம்பாக்கத்தில் பயணிகளின் நெரிசல் அதிகமாக காணப்பட்டது.
வாகனங்கள்: ஜிஎஸ்டி உள்ளிட்ட சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து ஊர்ந்து சென்றன.. செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியிலும் வாகனங்கள் அணி வகுத்து நின்றன. எனினும், அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்..
இதனிடையே, கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் நெட்வொர்க் சேவை திடீரென பாதிக்கப்பட்டது. இதனால், இணையதள பணிவர்த்தனைகள் மொத்தமாக முடங்கிப்போனது.
முடக்கம்: நேற்றைய தினம் அதிகப்படியான மக்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால் இணையதள சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது... இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.. காரணம், அங்கிருந்த கடைகளுக்குள் சென்று பொருட்களை வாங்கி கொண்டிருந்த பயணிகள், திடீரென இணையதள சேவை முடங்கியதால், ஆன்லைனில் பணம் கட்ட முடியாமல் தவித்தனர்..
அதேபோல, ஓட்டல்களில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்கள், ஊர்களுக்கு செல்ல சாப்பாடு பார்சல் வாங்கி கொண்டிருந்தவர்களும், இணையதளம் மூலம் பணம் செலுத்த முடியாமல் பயணிகள் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகினர்...
தவிப்பு: எனவே, ஏடிஎம்களை தேடி அலைய துவங்கினார்கள் பயணிகள்.. கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில், பொதுமக்களின் தேவைக்காக வைக்கப்பட்டிருந்த 5 ஏடிஎம்-களில், சில மிஷின்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளதாம். இதனால், ஏடிஎம் கார்டுகளுடன், ஏடிஎம்முக்கு வந்த பயணிகள், பணம் எடுக்க முடியாமல் திணறினர். அதனால், அங்கு செயல்பட்டு கொண்டிருந்த ஒன்றிரண்டு ஏடிஎம்களின் வாசலிலேயே நீண்ட வரிசையில் காத்திருந்து பணம் எடுத்து சென்றனர்.












Click it and Unblock the Notifications