கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட்.. செங்கல்பட்டு டூ தாம்பரம் 6 வழிச்சாலை.. அடடே திண்டிவனம் டோட்டலா மாறுதே
சென்னை: கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு விரைவில் திறக்கப்பட உள்ள நிலையில், ரூ.3,523 கோடி மதிப்பில் தாம்பரம் - செங்கல்பட்டு இடையே உயர்மட்ட பறக்கும் சாலை அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது..
மொத்தம் 6 வழித்தடங்கள் அமைக்கப்பட உள்ளன. இதைத்தவிர, திண்டிவனம் வரையிலான வழித்தடத்திலும், புதிய திட்டங்கள் கையில் எடுக்கப்பட்டுள்ளன.
கட்டமைப்பு வசதி: புறநகர்ப்பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி, உள்ளிட்ட பகுதிகள் வளர்ச்சியாலும் அதன் உள் கட்டமைப்பு வசதிகளாலும், முன்னேற்றம் அடைந்துவருவதைபோலவே, வாகன பெருக்கமும் பெருகி வருகிறது.. அரசு பஸ்கள், ஆம்னி பஸ்கள், பைக்குகள், தவிர, கனரக வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்த போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலேயே, இதே புறநகர்பகுதிகளில் மேம்பாலங்களை கட்டுவதன் அவசியம் இன்று எழுந்துள்ளது. இப்போதைக்கு பெருங்களத்தூரில் கட்டப்பட்டு உள்ள மேம்பாலத்தால் போக்குவரத்து பெரும்பாலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதை இன்னும் எளிமைப்படுத்துவதற்காகவே, தாம்பரம்- செங்கல்பட்டு இடையே மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 6 வழித்தடங்கள்.. ரூ.3,523 கோடியில் இந்த பணி நடைபெற போவதாக தெரிவித்துள்ளார்கள். பெருங்களத்தூரில் மேம்பாலம் தொடங்கி பரனூர் சுங்கசாவடியை தாண்டி, இந்த பாலம் முடிவடையும் என தெரிகிறது..

நெடுஞ்சாலை ஆணையம்: இந்த பணியை இப்போது தொடங்கவில்லை. அடுத்த சில மாதங்களில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தொடங்க உள்ளது.. ஆனால், எப்போது முடிவடையும் என்பதை சொல்லவில்லை..
NHAIன் கோரிக்கையின்பேரில் கட்டுமான பணிகளுக்குத் தேவையான கனிம பொருட்களுக்கான மாநில அரசின் வரி வருவாயை ஏற்கனவே தள்ளுபடி செய்துள்ள நிலையில், இந்த கட்டுமான பணிக்கான ஜிஎஸ்டி வருவாயில் மாநில அரசின் பங்கை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH) தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.
தமிழக அரசு: ஆனால், இந்த கோரிக்கை மீது தமிழக அரசு இன்னும் முடிவை தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. தமிழக அரசின் முடிவை அடுத்து இந்த திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்கிறார்கள்.
மேம்பாலத்தில் கிளாம்பாக்கம் பஸ் நிலையம், பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரி, மகேந்திரா சிட்டி ஆகிய இடங்களில் வாகனங்கள் நுழைவு மற்றும் வெளியேறும் படிகள் அமைய உள்ளதாகவும், வாகனங்கள் சுமார் 100 கி.மீட்டர் வேகத்தில் பயணம் செய்யும் வகையில் பாலம் அமைய இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
விரிவாக்கம்: செங்கல்பட்டு- திண்டிவனம், ஜிஎஸ்டி சாலை விரிவாக்கப் பணியும் நடைபெற உள்ளது. 67.1 கி.மீட்டர் நீளமுள்ள செங்கல்பட்டு- திண்டிவனம் சாலை இப்போது 4 வழிச்சாலையாகி உள்ளது.. எனவேதான், இதன் 2 பக்கமும், சர்வீஸ் சாலைகளுடன் 8 வழிச் சாலையாக மேம்படுத்துவதற்காகவே, இப்படி ஒரு திட்டம் கையில் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த மேம்பாலப்பணி முடிவடைந்தால், ஏகப்பட்ட நன்மைகள் வாகன ஓட்டிகளுக்கு கிடைக்கும்.
- தாம்பரம்- செங்கல்பட்டு இடையே மேம்பாலம் அமையும்போது லட்சக்கணக்கான வாகனங்கள் செல்லும் இந்த வழித்தடத்தில் சுமார் 50 சதவீத வாகனங்கள் உயர்த்தப்பட்ட மேம்பால சாலையில் செல்லும் வகையில் மாறக்கூடும்.. இதனால் வாகன நெரிசல் கட்டுப்படும்.. புறநகர்ப்பகுதிகளில் ஏற்படும் விபத்துக்களும் குறையும்..
என்ன காரணம்: காரணம், ஏற்கனவே இந்த வழித்தடத்தில் 12 இடங்கள் விபத்து அபாயம் உள்ள பகுதியாக கண்டறியப்பட்டிருக்கிறது.. இந்த புதிய பாலம் வரக்கூடுமானால், விபத்துக்கள் நிச்சயம் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
அதேபோல, திண்டிவனம் வரையிலான வழித்தடத்தில் 20 இடங்கள் விபத்து ஏற்படும் பகுதியாக உள்ளது. இந்த இடங்களில் மேம்பாலங்கள், சுரங்கப் பாதை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது..
அதேபோல, மாமண்டூர், மதுராந்தகம், படாளம் சந்திப்பு, கருங்குழி சந்திப்பு, சாரம் கிராமம் பகுதிகளில் 6 வழிச்சாலையுடன் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கவும் திட்டம் முன் மொழியப்பட்டு இருக்கிறது. மேல்மருவத்தூர், + அச்சரப்பாக்கத்தில் சுரங்கப்பாதைக்கு மேல், உயர்த்தப்பட்ட சாலை அமைக்கவும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முன் மொழிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, கிளாம்பாக்கம் பஸ் முனையத்திலிருந்து சென்னை மாநகர பேருந்துகள் போக்குவரத்து நெரிசலின்றி செல்ல 2 வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன..
2 வழித்தடம்: அதாவது, வண்டலூர் - கேளம்பாக்கம் சாலை - போலீஸ் அகாடெமி சாலை - நல்லம்பாக்கம் சாலை - ஊனமாஞ்சேரி - ஜி.எஸ்.டி சாலை ஊரபாக்கம் வழியாகவும் மற்றும் கூடுவாஞ்சேரி - மாடம்பாக்கம் சாலை - ஆதனுர் நெடுஞ்சாலை முதல் மாடம்பாக்கம் சாலை - யூனியன் சாலை - வண்டலுர் - வாலாஜாபாத் சாலை வழியாகவும் பேருந்துகள் செல்வது தொடர்பான ஆலோசனைகள் சமீபத்தில் முடிந்துள்ள நிலையில், அது தொடர்பான அடுத்தக்கட்ட நகர்வும் ஆரம்பமாகி உள்ளனவாம்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications