கோயம்பேடு மீண்டுமா? இனி கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு கிடையாதா? தமிழக அரசு முடிவு? "ஆதங்கத்தில் ஆம்னி"

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு, கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு விவகாரம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், நீதிமன்ற தீர்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கின்றன தனியார் பேருந்து நிறுவனங்கள். இதுகுறித்து இன்றைய தினம் தமிழக அரசு என்ன முடிவெடுக்க போகிறது?

சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பஸ் ஸ்டாண்டிலிருந்துதான், தென் ...மாவட்டங்களுக்கு செல்லும் தனியார் பஸ்களை இயக்க வேண்டும் என்று கடந்த 24ம் தேதி, போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவிட்டார்.

Kilambakkam Bus Stand and whats the TN Government explanation about Omni private buses from koyambedu

ஆனால், இதற்கு ஆம்னி பஸ் தரப்பில் ஒப்புக் கொள்ளவில்லை.. எனவே, இதை எதிர்த்து, ஆம்னி பஸ் நிறுவனமான, "ஒய்.பி.எம்., டிராவல்ஸ்" சென்னை ஹைகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தது.

மனு தாக்கல்: அந்த மனுவில், "கடந்த 2002ல் கோயம்பேடில் பஸ் நிலையம் கட்டப்பட்ட பின், அங்கிருந்து தான் அனைத்து ஆம்னி பஸ்களையும் இயக்க வேண்டும் என, போக்குவரத்து ஆணையர் மற்றும் மாநகர போலீஸ் ஆணையர் உத்தரவிட்டனர். இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அரசு உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

அதன்படி, சென்னைக்குள் ஆம்னி பஸ்கள் நுழைய அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது, கிளாம்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பஸ் நிலையத்தில் இருந்துதான், தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்களை இயக்க வேண்டும் என்ற உத்தரவால், பயணியர் மட்டுமின்றி, பஸ் நிறுவனங்களுக்கும் அசவுகரியம் ஏற்பட்டுள்ளது.

ஆம்னி பஸ்கள்: சென்னை நகருக்குள் ஆம்னி பஸ்கள் நுழைய தடை விதிப்பது, 2003ல் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறுவதாகும். எனவே, போக்குவரத்து துறை ஆணையரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.. கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பயணியரை ஏற்றி, இறக்க அனுமதிக்க வேண்டும்" என்று மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனுவானது, நீதிபதி மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, ''இரண்டு நாட்களில் போக்குவரத்து ஆணையரின் உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த வழக்கின் விசாரணை முடியும் வரை, கோயம்பேடில் இருந்து ஆம்னி பஸ்களை இயக்கஅனுமதிக்க வேண்டும்'' என்றார்.

விசாரணை: அதற்கு நீதிபதி, "போக்குவரத்து ஆணையரின் உத்தரவை, சில வாரங்களுக்கு நிறுத்தி வைக்கலாமே" என்றார் நீதிபதி. அதற்கு, அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், ''இது குறித்து அரசிடம் விளக்கம் பெற அவகாசம் வேண்டும், அதற்கு ஒருநாள் தேவை'' என்றார். அதைத் தொடர்ந்து, விசாரணையை இன்றைக்கு அதாவது பிப்ரவரி 1ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்திருக்கிறார்..

இன்றைய தினம், இந்த வழக்கின் முடிவு எப்படி இருக்க போகிறது தெரியவில்லை.. காரணம், கடந்த 2003ம் ஆண்டு கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு ஆரம்பித்தபோதும், இதுபோலவே, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.. அப்போதும் இதுபோலவே, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.. அந்த வழக்கில், அரசின் கட்டுப்பாடுகளுக்கு எதிராக உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது..

சுப்ரீம் கோர்ட்: உடனே இந்த உத்தரவை எதிர்த்து, அரசு தரப்பில் சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல் செய்திருக்கிறார்கள்.. ஆனால், உயர்நீதிமன்ற உத்தரவையே, உச்ச நீதிமன்றமும் உறுதி செய்திருந்தது.

இந்த சம்பவத்தையும் ஆம்னி தரப்பினர் தங்கள் மனுவில் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.. அதுதமட்டுமல்ல, கிளாம்பாக்கம் வரை மட்டுமே பஸ்களை இயக்க வேண்டும் என்ற உத்தரவு காரணமாக பயணிகள் மட்டுமல்லாமல், தனியார் பேருந்து நிறுவனங்களும் அசௌகரியத்துக்கு ஆளாகியிருப்பதாகவும் நீதிமன்றத்தில் எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது.

எதிர்பார்ப்பு: அனைத்துக்கும் மேலாக, கிளாம்பாக்கம் செல்லும் மக்களுக்கு போதுமான ஏற்பாடுகள் இல்லை, இணைப்பு வசதிகள் என்பது தனியார் பேருந்துகளின் வாதமாகவும் இருக்கிறது.. மெட்ரோ, ரயில் நிலையம் போன்ற வசதிகள் வந்த பிறகு கிளாம்பாக்கத்தில் பேருந்துகள் இயக்கப்படும் என்று ஆம்னி தரப்பினரும் பிடிவாதமாக இருப்பதால் இன்றைய தினம் கோர்ட் தீர்ப்பு எப்படி இருக்க போகிறதோ? என்ற எதிர்பார்ப்பு எழுந்துவருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+