அடடே சூப்பர்! இத்தனை நாளா இது தெரியாம போச்சே! கிளம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் இப்படி ஒரு வசதியா?
சென்னை: சென்னையில் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக மாறி உள்ளது கிளாம்பாக்கம் பேருந்து நிலையம். இங்கு நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் வெளியூர் பயணிகள் தங்குமாறு வகையில் அங்கு பேருந்து நிலையத்தின் முதல் தளத்திலேயே மிகக் குறைந்த செலவில் தங்குமிடம் அமைக்கப்பட்டு இருக்கிறது. வெறும் 200 ரூபாய் செலவில் அங்கு பயணிகள் ஓய்வெடுக்கலாம். சென்னைக்கு வருவோர் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர் போக்குவரத்துக் கழகத்தினர்.
சென்னை நகரில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்குச் செல்லும் அரசுப் பேருந்துகள் பெரும்பாலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படுகின்றன. ஆயிரக்கணக்கான பயணிகள் தினமும் இந்த நிலையத்தை பயன்படுத்துகின்றனர்.
சில நேரங்களில் பேருந்து தாமதமாக வந்தால் அல்லது அடுத்த பயணத்திற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். மேலும், இரவு நேரத்தில் தங்கும் இடம் தேவைப்படும் நிலையும் உருவாகலாம். இப்படிப்பட்ட சூழலில் பயணிகளுக்கு பெரும் நிம்மதியை அளிக்கக் கூடிய முக்கியமான வசதி தான் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள Dormitory (தங்கும்) இடம் ஆகும்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
இந்த Dormitory நிலையத்தின் முதல் தளத்தில் அமைந்துள்ளது. மிக குறைந்த கட்டணத்தில் பயணிகள் இங்கு தங்கும் வசதியைப் பெறலாம். 12 மணி நேரத்திற்கு வெறும் ₹200 மட்டுமே செலுத்தினால் போதுமானது. இது குறைந்த செலவில் பாதுகாப்பான தங்கும் இடத்தை தேடுபவர்களுக்கு மிகப்பெரிய வரப் பிரசாதமாகும். பயணிகளின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தங்கும் பகுதிகள் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளன. இதனால் குடும்பங்களும், தனிப்பட்ட பயணிகளும் எந்த தயக்கமுமின்றி இங்கு தங்க முடியும்.
கிளாம்பாக்கம் தங்குமிடம்
இங்குள்ள கழிப்பறைகள் மிகச் சுத்தமாகவும் நன்கு பராமரிக்கப்பட்டும் உள்ளன. தூங்கும் படுக்கைகள் சுத்தமாகவும் ஒழுங்காகவும் வைக்கப்பட்டுள்ளன. சுமார் 50க்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ளதால், அதிகமான பயணிகளும் வசதியாக தங்க முடியும். பெரும்பாலான படுக்கைகளில் மின்விசிறி மற்றும் மொபைல் சார்ஜிங் பாயிண்ட் வசதிகள் உள்ளன. சில படுக்கைகளில் இந்த வசதிகள் இல்லாவிட்டாலும், மொத்தத்தில் தங்கும் இடம் வசதியாக இருக்கும்.'
24 மணி நேர தங்குமிடம்
முக்கியமாக, தங்கும் முன் அடையாள அட்டை (ID Proof) காட்டுவது கட்டாயம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த Dormitory 24x7 திறந்தே இருப்பதால், எந்த நேரத்திலும் வந்து தங்க முடியும். பேருந்து நேரம் நள்ளிரவில் இருந்தாலும், காலை நேர பயணத்திற்காக முன்னதாக வந்தாலும், எந்த சிரமமும் இல்லாமல் தங்க முடியும். குறைந்த செலவில் சுத்தமான, பாதுகாப்பான மற்றும் நம்பகமான தங்கும் இடத்தைத் தேடுகிறவர்களுக்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலைய Dormitory சிறந்த தேர்வாக இருக்கும்.
பயணிகள் வசதி
குறிப்பாக கிராமப்புறங்கள் அல்லது பிற மாவட்டங்களிலிருந்து வரும் பயணிகளுக்கு இது மிகப் பயனுள்ளதாகும். அதனால், இனி நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியபோது அல்லது இரவு நேரத்தில் தங்க வேண்டிய சூழலில், அருகில் ஹோட்டல் தேடி அலைய வேண்டியதில்லை. கிளாம்பாக்கம் பேருந்து நிலைய Dormitory - பயணிகளின் வசதிக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சிறந்த மற்றும் சுலபமான தீர்வு என்கின்றனர் பயணிகள்.












Click it and Unblock the Notifications