கிளாம்பாக்கம் ரூட்டே மாறுது..வெளியூர் பஸ்கள் எந்த வழியாக போகும் தெரியுமா? அப்ப ஆம்னி? இனி இதான் வழி
சென்னை: கிளாம்பாக்கம் பஸ் முனையத்தில் வடிகால் அமைக்கும் பணிகள் துரிதமாகி உள்ள நிலையில், விரைவில் பஸ் ஸ்டாண்டு திறக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வரும்நிலையில், அரசியல் ரீதியாகவும் இந்த பிரச்சனை வெடித்து கிளம்பி உள்ளது.
கிளாம்பாக்கத்தில் சுமார் 59.86 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 393.74 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து முனையத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து முடிந்துள்ளன.
இதையடுத்து, கடந்த ஜுன் மாதமே, "கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்" என்ற பெயரில் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படவிருந்தது. ஆனால், நடைமுறை சிக்கல்கள் இங்கு கிளம்பியதால், இதை திறந்து வைப்பது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மழைநீர் வடிகால்: காரணம், "புதிதாக கட்டப்பட்டுவரும் கிளாம்பாக்கம் பஸ் முனையம், போக்குவரத்தை கணக்கில் கொள்ளாமலும், மக்களுடைய அடிப்படை தேவைகள் எதையும் கணக்கிடாமலும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த பேருந்து நிலையத்தில் மழைநீர் வடிகால் பணிகள் முறையாகச் செய்யப்படவில்லை. சிறுமழைக்கே பெருமளவிலான நீர் தேங்குகிறது" என்று அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதற்கேற்றாற்போல, சமீபத்தில் பெய்த மழையால், இந்த பஸ் ஸ்டாண்டு பகுதியில், மழைநீர் தேங்குவது, மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்தது.. கட்டுமான பணிகளின்போது, இந்த சிக்கல் தெரியாமல் இருந்த நிலையில், சென்னையில் பெய்த கோடை மழையால், பஸ் ஸ்டாண்டு பகுதி முழுவதுமே நீரில் மிதந்தது..
எனவே, தேங்கி நிற்கும் நீரை மறுபுறம் கொண்டு செல்ல ஜிஎஸ்டி சாலையின் குறுக்கே குழாய் அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர்.. அதேபோல, பஸ்கள், எளிதாக சென்று வரும் வகையில் கிளாம்பாக்கத்தை சுற்றி சாலை அமைக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.. மேலும், பஸ்நிலைய மேற்கூரை பணிகள், பயணிகள் வந்து தங்குவதற்கான தங்குமிடம், உணவகம், கடைகள் பணிகளும் நிறைவடையாமல் இருக்கிறது.
பஸ் நிறுத்தம்: இந்த பணிகளை அநேகமாக இந்த மாதத்திற்குள் முடித்துவிட முடியாது என்பதால்தான், கிளாம்பாக்கம் பஸ்நிலைய திறப்பு தள்ளிப்போகும் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.. மற்றொருபுறம், ஆம்னி பஸ் நிறுத்தம் விவகாரம் விஷயத்திலும், அரசு சுமூக முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே, இது தொடர்பான ஆய்வுப்பணிகளும் வேகம் எடுத்து வருவதால், பஸ் முனையம் திறப்பது தள்ளிப்போயுள்ளதாக தெரிகிறது.
இப்படிப்பட்ட சூழலில்தான், அமைச்சர் சேகர்பாபு கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்து ஒரு பேட்டி தந்திருந்தார்.. அப்போது, "கொஞ்சம் மழை வந்தாலும், இடுப்பளவு மழைநீர் தேங்குவதால், மழைநீர் வடிகால்வாய் அமைக்க 13 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன..
கடந்த ஆட்சிக்காலத்தில் திட்டமிடாமல் பணிகளை மேற்கொண்டதால், ஒதுக்கீடு செய்ததைவிட கூடுதலாக 25 சதவிகித தொகையைச் செலவு செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அனைத்து பணிகளும் முடிந்து விரைவில் பேருந்து நிலையம் திறக்கப்படும்" என்று கூறியிருந்தார்.
செயல் திட்டம்: இந்நிலையில், கிளாம்பாக்கம் பஸ் முனையத்தை பயன்படுத்துவதற்கான செயல் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது... இதுகுறித்து, போக்குவரத்து துறை அதிகாரிகள் சொல்லும்போது, "இந்த பஸ் முனையத்தை திறக்கும்போது, எந்தெந்த வாயில்களை எந்தெந்த வாகனங்கள் பயன்படுத்த வேண்டும் என்பது வரையறுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பேருந்து நிலையத்தில் அடித்தள 'பார்க்கிங்' பகுதிக்கு செல்லும் தனியார் வாகனங்களுக்கு நுழைவு, வெளியேற தனி வாயில்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதேபோன்று, பிரதான கட்டடத்தின் முகப்பு பகுதியில் பயணிகளை இறக்கிவிடவும், மறுபடியும் ஏற்றி செல்லவும் வரும் தனியார் வாகனங்களுக்கு, தனி நுழைவாயில்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
நுழைவாயில்கள்: நடந்து செல்வோருக்கும், பைக்குகளில் தனி நுழைவாயில் ஒதுக்கப்படுகிறது. வெளியூர் பஸ்கள் உள்ளே வர, ஜிஎஸ்டி சாலையில் ஒரு நுழைவாயில் ஒதுக்கப்படும். இந்த பஸ்கள் வெளியேற, பின்புறத்தில் அயஞ்சேரியை ஒட்டிய நுழைவாயில் ஒதுக்கப்படும். இதில், ஆம்னி பஸ்களுக்கென்று தனியாக எந்த நுழைவாயிலும் ஒதுக்கப்படவில்லை.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 'பார்சல்' சேவையை செயல்படுத்த, போக்குவரத்துக் கழகங்கள் அனுமதிக்கப்படும். ஆனால், இரவு 11:00 மணி முதல் காலை 5:00 மணி வரையே இதற்கான பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும். பார்சல் சேவையில் பயன்படுத்தப்படும் பொருட்களை அப்புறப்படுத்த, கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த செயல்திட்டம் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
எனினும் ஆம்னி பஸ்கள் விவகாரம் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது.. ஏற்கனவே, ஆம்னி பஸ் நிறுத்தத்திற்கான இடத்தை படப்பை அருகில் தேர்வு செய்து இருந்தனர்.
அந்த இடத்தை ஆய்வு செய்தபோது ஆம்னி பஸ்கள் கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு வரும்போதும், பயணிகளை ஏற்றி செல்லும்போதும், 2 முறை டோல்கேட்டுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கிறதாம். அதனால், ஆம்னி பஸ் நிலைய இடத்தையும், வேறு இடத்தையும் ஆய்வு செய்து கொண்டு இருப்பதாக சொன்னார்கள்.
ஆம்னி பஸ்: இப்போதும், ஆம்னி பஸ்களுக்கென்று தனியாக நுழைவாயில் ஒதுக்கப்படாத நிலையில், விரைவில் அதற்கும் முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இந்த பஸ் முனையத்தை திறக்க நாட்கள் ஆகும் என்று சொல்லப்பட்ட நிலையில், செயல்வடிவமும் இப்போது வெளியாகி உள்ளதால், விரைவில் பஸ் முனையம் திறக்கப்படும் என்றும் நம்பப்படுகிறது.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications