கிளாம்பாக்கத்தில் கவனிச்சீங்களா? கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு திறப்பு ஏன் தள்ளி போகுது தெரியுமா? ஓஹோஹோ
சென்னை: கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு குறித்த 2 மகிழ்ச்சி செய்திகள் வெளியாகி உள்ளன.. இது சென்னைவாசிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்துவருகிறது.
வண்டலூர் அருகே சுமார் 59.86 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 393.74 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து முனையத்தின் இறுதிக்கட்ட பணிகள் இத்தனை நாளும் நடந்து கொண்டிருந்த நிலையில், கடந்த ஜுன் மாதமே, "கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்" என்ற பெயரில் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படவிருந்தது. ஆனால், சில பணிகள் மீதமிருந்ததால், பஸ்முனையை திறப்பதில் தாமதம் ஏற்பட்டது.

ஜரூர் வேகம்: இப்போது, கிட்டத்தட்ட 99 சதவீத பணிகளும் முடிவடைந்து, திறப்பு விழாவுக்கு பேருந்து நிலையம் தயாராகி வருவதாக தெரிகிறது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்துப் பேருந்துகளும் இங்கிருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள்.
அதாவது, முதல்கட்டமாக திருநெல்வேலிக்கும், அடுத்து மதுரைக்கும், 3-வது கட்டமாக விழுப்புரத்துக்கும் பஸ்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பிறகு, படிப்படியாக பஸ் ஸ்டாண்டு முழுவதையும் பயன்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்து இருப்பதாகவும் தெரிகிறது.
கட்டுமான பணிகள்: இதனிடையே, கிளாம்பாக்கம் புதிய பஸ் முனையத்திலிருந்து பஸ்கள் போக்குவரத்து நெரிசலின்றி செல்வதற்காக சாலை பணிகள், மழைநீர் வடிகால் பணிகள், மருத்துவ வசதிகள் மற்றும் காவல் நிலையம் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் சேகர்பாபு தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
காரணம், இந்த பஸ் ஸ்டாண்டின் நுழைவாயலில், ஜிஎஸ்டி சாலையில் லேசாக மழை பெய்தாலும், 2 அடிக்கு மேல் தண்ணீர் தேங்குகிறது. இது சம்பந்தமான வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
வடிகால் வசதி: அதனால்தான், பேருந்து நிலையத்தின் நுழைவாயில் பகுதியில் தேங்கும் மழைநீரை ஊரப்பாக்கம் ஏரிக்கு அனுப்பும் வகையில், பிரமாண்ட வடிகால் அமைப்புகளை ஏற்படுத்த சிஎம்டிஏ முடிவு செய்தது. இதற்காக 17 கோடி ரூபாயில் மழைநீர் வடிகால் அமைப்புகளும் ஏற்படுத்தப்படும் என்று சேகர்பாபுவும் அறிவித்தார் எனினும், இதற்கான பணிகள் ஆரம்பமாகியும் இன்னும் முடியவில்லை.. வடிகால் கட்டுமான பணிகள் முடிந்தால்தான், பஸ் ஸ்டாண்டை திறக்க முடியும்.

இப்படிப்பட்ட சூழலில் கடந்த 2 நாட்களாகவே சென்னையில் மழை பெய்து வருகிறது.. வழக்கம்போல் கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு பகுதியிலும் மழைநீர் சூழ்ந்தது.. வழக்கம்போல் இந்த மழைநீர் வீடியோவும் வைரலானது. இதையடுத்து, வடிகால் வசதி பணிகள் மும்முரமாகி கொண்டிருக்கின்றன.
இதுதான் காரணம்: இந்நிலையில், சிஎம்டிஏ உறுப்பினர்கள் இதுகுறித்து சொல்லும்போது, "மழைநீர் வடிகால் அமைப்பதில் முதல் கட்ட பணிகள் ஆரம்பமாகிவிட்டன. ஆனால், ஜிஎஸ்டி சாலையின் குறுக்காக கால்வாய் அமைக்க வேண்டும்.. இந்த பணிக்கு, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அனுமதிக்காக காத்திருக்கிறோம். அனுமதி கிடைத்தவுடன் வடிகால் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படும்" என்றார். அந்தவகையில், கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறப்பு விழா இன்னும் தள்ளிப்போயுள்ளதாகவே கருதப்படுகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications