வண்டலூர் + ஜிஎஸ்டி ரோட்டில் அதிரடி.. கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டை சுற்றிலும் இப்படியா.. வரப்பிரசாதம்
சென்னை: கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு விரைவில் திறக்கப்பட உள்ள நிலையில், அது தொடர்பான சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.. இதனால் சென்னையே மகிழ்ச்சியாக உள்ளது.
கிளாம்பாக்கத்தில் வடிகால் வசதி பணிகள் நடந்து கொண்டிருப்பதால், பஸ் ஸ்டாண்டு திறப்பது தள்ளிப்போயுள்ளது.. ஜிஎஸ்டி சாலையில், புதிதாக கால்வாய் மற்றும் கல்வெட்டு அமைப்பதற்கான பணிகளை ரூ.17 கோடியில் செயல்படுத்தும் பணி துரிதமாகி உள்ளது..

ஜிஎஸ்டி ரோடு: அதேபோல, இந்த பஸ் ஸ்டாண்டிலிருந்து வெளியேறும் மழைநீர் சுமார் 180 அடிநீளமுள்ள ஜிஎஸ்டி சாலையை கடந்து கிளாம்பாக்கம் ஏரி, மற்றும் வண்டலூர் ஏரிகளுக்கும் செல்லும் வகையில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.
இதைத்தவிர, பஸ் ஸ்டாண்டு அருகில், சுமார் 1 மீட்டர் அகலம் உள்ள மழைநீர்கால்வாயை 2 மடங்கு அகலப்படுத்துவதுடன், புதிதாக 1180 மீட்டர் நீளத்தில் புதிய கால்வாய் அமைக்கவும், தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே சுமார் 65 மீட்டர் நீளத்தில் சுரங்கப்பாலம் அமைக்கும் பணிகளை தொடங்கவும் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்துக்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் அனுமதி கோரப்பட்டிருக்கிறது.
ரயில்வே ஸ்டேஷன்: மற்றொருபக்கம், கிளாம்பாக்கத்தில் ரூ.20 கோடி செலவில் புதிய ரெயில் நிலையம் அமைக்கும் பணியும் ஆரம்பமாக போகிறது.. கிட்டத்தட்ட 3 நடைமேடை கொண்ட கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தின் கட்டுமான பணிகளை, ஒரு வருடத்துக்குள் முடிக்க ரெயில்வே திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக ரூ.40 லட்சம் நிதியை ரெயில்வே நிர்வாகத்திற்கு, சிஎம்டிஏ ஒதுக்கியிருக்கிறது.
கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு மட்டுமே வரப்போவதாக சொல்லிவரும்நிலையில், ரயில்வே ஸ்டேஷன் வருவதும் உறுதியாகிவிட்டது.. அப்படியானால், பஸ் ஸ்டாண்டுக்கும் - ரயில்வே ஸ்டேஷனுக்குமான "இணைப்பு" தேவையாக இருக்கிறது.. அதற்காகத்தான், கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டையும், ரயில்வே ஸ்டேஷனையும் இணைக்கும் வகையில் நவீன ஸ்கைவாக் அமைக்கப்பட உள்ளார்களாம்..
அதாவது, 450 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலத்தில், ஒரு மணி நேரத்தில் 5,000 பேர் செல்லும் வகையில் இந்த ஸ்கைவாக் தயாராக போகிறதாம். ஜிஎஸ்டி ரோடு, ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டு, மாநகர பஸ்கள் நிறுத்துமிடம் என பல்வேறு பகுதிகளிலும், இறங்கும் வகையில் ஸ்கைவாக் வடிவமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
கிளாம்பாக்கம்: இந்நிலையில், ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமும் செயலாளர் ஜெயக்குமார், பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டி தந்துள்ளார். அந்த பேட்டியில், கிளாம்பாக்கம் குறித்த பல்வேறு திட்டங்களை வெளிப்படுத்தி உள்ளார்.
"வண்டலூர் - ஊரப்பாக்கம் நடுவில் புறநகர் ரயில்நிலையம் உருவாக்க முயன்று வருகிறோம்.. ரயில்வே நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டுவரை ஸ்கைவாக் போடப்படும்.. எஸ்கிலேட்டர், லிப்ட் வசதி போன்றவைகளுடன், கிட்டத்தட்ட 550 முதல் 600 மீட்டருக்கு இது நிறுவப்பட உள்ளது.. அநேகமாக அடுத்த செப்டம்பருக்குள் ரயில்வே ஸ்டேஷன், ஸ்கைவாக் இரண்டுமே கிளாம்பாக்கத்தில் ரெடியாகிவிடும்.. அப்போது சென்னையில் ஆவடி உட்பட எங்கிருந்தும் புறநகர் பஸ் ஸ்டாண்டுக்கு எளிதாக வந்து செல்ல முடியும்.
ஏர்போர்ட் மெட்ரோ: அதேபோல, ஏர்போர்ட் மெட்ரோ ரயிலை, கிளாம்பாக்கம்வரை விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளோம். அந்த நடவடிக்கையும் விரைவில் எடுக்கப்பட்டுவிடும். இந்த மெட்ரோவும் வந்துவிட்டால், புறநகர் மக்களுக்கு பெரும் உதவியாக இருந்துவிடும்.
நெரிசல் தவிர்க்கப்படும்: இதற்கு நடுவில், சாலை போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாநகர பேருந்துகளை இயக்க சில திட்டங்களை வைத்துள்ளோம்.. குறிப்பாக, கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டிலிருந்து வண்டலூர் - கேளம்பாக்கம் சாலை - ஜிஎஸ்டி சாலை - ஊரப்பாக்கம் வழித்தடத்திலும், அதேபோல கூடுவாஞ்சேரி, ஆதனூர் நெடுஞ்சாலை - வண்டலூர்- வாலாஜாபாத் சாலை வழித்தடத்திலும், என மொத்தம் இரண்டு வழித்தடத்திலும் மாநகர பேருந்துகளை இயக்க திட்டமிட்டிருக்கிறோம்" என்றார்.












Click it and Unblock the Notifications