கிளாம்பாக்கத்தில் வண்டியை எடுங்க.. இன்றே கடைசி - கெடு வைத்த தமிழக அரசு..கெத்து காட்டும் ஆம்னி பஸ்கள்
தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு விரைவு பஸ்கள் கிளாம்பாக்கத்தில் இருந்தே கிளம்பி வருகின்றன. வரும் 24 ஆம் தேதிக்குக் பிறகு ஆம்னி பஸ்களும் கிளாம்பாக்கத்தில் இருந்தே கிளம்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு கூறியிருந்தார்.

தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்கள் கிளாம்பாக்கம் நிலையத்தில் தான் பயணியரை ஏற்றி, இறக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை மீறி செயல்படும் ஆம்னி பஸ்களின் உரிமத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து ஆணையரகம் ஏற்கனவே எச்சரித்திருக்கிறது.
உரிமையாளர்கள்: ஆனால், இதனை ஆம்னி பஸ் உரிமையாளர்கள் ஏற்க மறுக்கிறார்கள். முடிச்சூர் வரதராஜபுரத்தில் ஒதுக்கப்பட்ட இடத்தில் நிலையம் கட்டி முடிக்க 9 மாதங்களாகும். அதுவரை பஸ்களை எங்கே நிறுத்த முடியும்? என்று கேள்வி எழுப்புகிறார்கள்..
நேற்றுமுன்தினம் இதுகுறித்து தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் சொல்லும்போது, "கிளாம்பாக்கத்திற்கு பொதுமக்கள் வந்து செல்ல மெட்ரோ ரயில், புறநகர் ரயில், பஸ் வசதிகள் இல்லை. ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்களை, கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டுக்குள் நிறுத்தும் அளவுக்கு பணிமனை கிடையாது.
கோயம்பேடு: பகுதி, பகுதியாக கிளாம்பாக்கத்துக்கு மாற அனுமதிக்க வேண்டும் எனறு முன்பே கோரிக்கை வைத்தோம். ஆனால், உடனடியாக மாற வேண்டுமென உத்தரவிடுகின்றனர். ஆம்னி பஸ்கள் நகருக்குள் வந்து செல்ல தடையில்லை என சுப்ரீம்கோர்ட் உத்தரவுள்ளது.. அதனால், அனைத்து வசதிகளும் வரும் வரை கோயம்பேடில் இருந்துதான், ஆம்னி பஸ்கள் புறப்பட்டு கிளாம்பாக்கம் சென்று பயணியரை ஏற்றிச் செல்ல திட்டமிட்டுள்ளோம்" என்று அதிரடியாக அறிவித்தனர்.
இந்நிலையில், ஆம்னி பஸ்களை, இன்று முதல் அதாவது 24ம் தேதி முதல், கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்காவிட்டால் நடவடிக்கை
கிளாம்பாக்கம் : இதற்கு காரணம், நாளை 25, 26 ஆகிய நாட்கள் அரசு விடுமுறை வருகிறது.. அதனை தொடர்ந்து சனி, ஞாயிறு வழக்கமான விடுமுறை நாட்கள் வருவதால் மொத்தம் 4 நாட்கள் தொடர் விடுமுறையாக உள்ளது. இதனால் வெளியூர் பயணம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதனால், சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தவிர்க்க அரசு அறிவித்தபடி, ஆம்னி பஸ்களை, நாளை முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக போக்குவரத்து ஆணையர் தனியார் ஆம்னி பஸ் ஆபரேட்டர்களுக்கு ஒரு சுற்றறிக்கையும் அனுப்பியிருக்கிறார். அதில் "கிளாம்பாக்கத்தில் அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. அதனால் அங்கிருந்து பஸ்களை இயக்க வேண்டும், அரசின் உத்தரவை பின்பற்றாமல் இயக்இயக்கினால் போக்குவரத்து சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அந்த மீண்டும் ஒருமுறை எச்சரிக்கை தரப்பட்டிருக்கிறது.
எச்சரிக்கை: இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டும்கூட, ஆம்னி பஸ் உரிமையாளர்கள், தங்கள் முடிவில் உறுதியாக உள்ளனர்.. இன்று கிளாம்பாக்கத்தில் இருந்து பஸ்களை இயக்க வாய்ப்பு இல்லை என்றும், கோயம்பேட்டில் இருந்து தான் பஸ்களை இயக்குவோம் என்றும் உறுதியாக கூறுகிறார்கள்..
குழம்பும் பயணிகள்: ஆக, இரு தரப்பிலுமே இப்படி கறார் மற்றும் பிடிவாதம் காட்டிவருவதால், இதனால், இன்று பயணம் செய்ய, ரிசர்வ் செய்யப்பட்டு காத்திருக்கும் ஆயிரக்கணக்கான பயணிகள், கிளாம்பாக்கம் செல்ல வேண்டுமா? கோயம்பேடு போக வேண்டுமா? என்று தெரியாமல் குழம்பி போய் உள்ளனர்.












Click it and Unblock the Notifications