கிளாம்பாக்கத்தில் என்னங்க இது? கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் இது வேறயா? ஸ்டேஷன் வாசலில் குழம்பிய ஜனம்
சென்னை: கிளாம்பாக்கத்தில் ஒருவழியாக எல்லா பிரச்சனையும் முடிந்துவிட்டது என்று இன்னொரு பிரச்சனை முளைத்துள்ளன.. இது தொடர்பான கோரிக்கை தமிழக அரசுக்கு சென்றுள்ளது. என்னவாம்?
ஊரப்பாக்கம்: ஜிஎஸ்டி சாலையில், கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டிலேயே, புதிய காவல்நிலையம் சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.. ஊரப்பாக்கத்தின் ஒரு பகுதி, ராம் நகர், செல்லியம்மன் நகர், கிளாம்பாக்கம், ஐயஞ்சேரி, காரணைப்புதுச்சேரி, காட்டூர், பெரியார் நகர், விநாயகபுரம், கோகுலம் காலனி, அண்ணா நகர், கொளப்பாக்கம், வண்டலூர், ஊனைமாஞ்சேரி போன்ற பகுதிகள் இந்த காவல்நிலைய கட்டுப்பாட்டில் வருகிறது.

ஆனாலும், கிளாம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் FIR பதிவு செய்யும் வசதி இல்லையாம். இதனால், அப்பகுதி மக்கள் அவதிக்கு ஆளாகி வருகிறார்களாம்.. இந்த போலீஸ் ஸ்டேஷ்ன் திறக்கப்பட்டு இரண்டரை மாதம் ஆகியும், எப்ஐஆர் வழக்குப்பதிவு செய்யும் வசதி இல்லாமல் இருப்பது, மிகவும் சிக்கலை தந்துள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்..
வசதியில்லை: ஏற்கனவே ஓட்டேரி, கூடுவாஞ்சேரி காவல் நிலைய கட்டுப்பாட்டில் இருந்த கிராமங்களையும், புதிதாக திறக்கப்பட்ட இந்த கிளாம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனுடன் இணைக்கப்பட்டுவிட்டது, கூடுதல் குழப்பத்தை தந்துவருகிறதாம்.
இதன்காரணமாக, கொலை, கொள்ளை, அடிதடி, திருட்டு, வழிப்பறி என எந்த புகாராக இருந்தாலும், பாதிக்கப்பட்டவர்களால், கிளாம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று புகார் கொடுக்க முடியவில்லையாம்.
அப்படியே, புகார் கொடுக்க போனாலும், அங்குள்ள போலீசார், "FIR பதிவு செய்யும் அதிகாரம் எங்களுக்கு இன்னும் தரவில்லை, அதனால், ஏற்கனவே எந்த ஸ்டேஷனில் புகார் தந்தீர்களோ, அங்கேயே போங்கள்" என்று சொல்லி பாதிக்கப்பட்டவர்களை ஓட்டேரி மற்றும் கூடுவாஞ்சேரி போலீஸ் ஸ்டேஷனுக்கு திருப்பி அனுப்புகிறார்களாம்.
வேண்டுகோள்: இதனால், பாதிக்கப்பட்டவர்கள் நொந்துபோய், எங்கே போய் புகாரை தருவது என்று தெரியாமல் விழிக்கிறார்களாம். இது மிகப்பெரிய மன உளைச்சலையும், அலைச்சலையும் தருவதாக புலம்புகிறார்கள்.. அதனால், தமிழக அரசு இதில், தலையிட்டு, உடனடியாக காவல் நிலையத்தை, முழு செயல்பாட்டிக்கு கொண்டு வரவேண்டும், பொதுமக்களின் புகார்களை பெறுவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications