Kilambakkam Skywalk: கிளாம்பாக்கத்தில் இருக்க ஒரு குறையும் தீரப்போகுது.. பயணிகளின் நீண்ட கால ஏக்கத்துக்கு முடிவு?
சென்னை: கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்ட நிலையில் பயணிகள் பலரும் சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து விரைந்து வருவதற்கு ஏதுவாக கிளாம்பாக்கத்தில் புறநகர் ரயில் நிலையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இப்போது ரயில் நிலையம் அமைக்கப்பட்டு திறப்பு விழாவுக்கு தயாராக உள்ள நிலையில் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்தை இணைக்கும் ஆகாய நடைமேம்பாலம் பணிகள் நடந்து வருகின்றன.
இந்த பணிகள் இன்னும் 10 சதவீதம் மட்டுமே பெண்டிங் இருப்பதாகவும், இன்னும் ஒரு மாதத்திற்குள் முழு பணிகளும் முடிந்து மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகள் சென்று வந்ததால் நகருக்குள் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், சென்னையை அடுத்த வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கபட்டது.
கடந்த 2024 ஆம் ஆண்டு இறுதியில் இந்த பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்துதான், வெளியூர்களுக்கு செல்லும் அனைத்து அரசு மற்றும் ஆம்னி பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எப்போதும் பரபரப்பான இடங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
திறப்பு விழாவுக்கு தயார் நிலையில்
பயணிகளுக்கு தேவையான நடவடிக்கைகள் கிளாம்பக்கம் பேருந்து நிலையத்தில் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகின்றன. சென்னை சிட்டிக்குள் இருந்து கிளாம்பாக்கத்திற்கு பேருந்தில் வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கும் மேலாகிறது. கடுமையான போக்குவரத்து நெரிசலில் பயணித்து கிளாம்பக்கம் வந்து சேருவதற்குள் பயணிகள், கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.
இதனை கருத்தில் கொண்டு கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையமும் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு நடைமேடை அமைத்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடிந்து திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ளன. ரயில் நிலையத்தில் இருந்து பயணிகள் நேரடியாக கிளாம்பாக்கம் செல்வதற்கு வசதியாக ஆகாய நடைமேடை அமைக்கப்பட்டு வருகிறது.
10 சதவீத பணிகள் மட்டுமே பெண்டிங்
இந்த பணிகள் முடிந்து பொங்கலுக்குள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படது. ஆனால், தாமதம் ஆகிக்கொண்டே போவதால் பயணிகளுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. ரூ.79 கோடி மதிப்பீட்டில் 200 மீட்டர் தூரம் கட்டப்பட்டு வரும் இந்த பணியில் நிலம் கையகப்படுத்தல் காரணமாக சிறிது தாமதம் ஏற்பட்டது.
நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிவடைந்து பணிகள் வேகமாக தொடங்கி நடந்து வருகின்றன. பெரும்பாலான பணிகள் முடிந்து விட்ட நிலையில் இன்னும் 10 சதவீத பணிகள் மட்டுமே முடியாமல் உள்ளது. தற்போது கிளாம்பாக்கம் பேருந்து நிலைய முனையத்தில் தொடங்கி ஜி.எஸ்.டி. சாலையில் தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கத்தில் பணிகள் முடிந்து மேல்பகுதியில் தளம் பொருத்தப்பட்டு விட்டது.
அதிகாரிகள் விளக்கம்
ரயில் நிலையத்தில் இருந்து வரும் பகுதியில் செங்கல்பட்டு - தாம்பரம் மார்க்கத்தில் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிந்ததும் நடைமேம்பாலத்தை இணைக்கும் வேலை நடைபெறும். நடைமேம்பாலம் பணியை பிப்ரவரி மாதம் இறுதிக்குள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
கிளாம்பாக்கம் ரயில் நிலையம் மற்றும் உயர்மட்ட நடைமேம்பாலம் ஆகியவை இணைந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதுதொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், "கிளாம்பாக்கம் ரயில் நிலையம் - பேருந்து நிலையத்தை இணைக்கும் உயர்மட்ட நடைமேம்பாலம் பணி ரூ.79 கோடி மதிப்பீட்டில் 200 மீட்டர் தூரம் 3 கட்டங்களாக நடந்து வருகிறது.
இன்னும் ஒரு மாதத்திற்குள்
இதன் மூலம் பயணிகள் சாலையை கடக்காமல் பேருந்து நிலையத்தில் இருந்து நடைமேம்பாலம் வழியாக நேராக ரயில் நிலையத்துக்கு செல்லலாம். இதே போல் சென்னை, செங்கல்பட்டு போன்ற பல்வேறு இடங்களில் இருந்து வரக்கூடிய பயணிகள் நேராக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கும் செல்ல இந்த நடைமேம்பாலம் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.
அடுத்த மாதத்திற்குள் நடைமேம்பாலம் பணி முடிக்கப்படும். இருபுறமும் லிப்ட் வசதி ஏற்படுத்தப்படும் என்றார். இன்னும் ஒரு மாதத்திற்குள் பணிகள் முடிந்துவிடும் என்று சொல்லப்படுவதால் பயணிகளுக்கு இந்த தகவல் நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications