கிளாம்பாக்கத்துக்கு "யோகம்" வந்தாச்சு.. வண்டலூர் டூ பெருங்களத்தூர் மாறுது.. குஷியில் துள்ளும் சென்னை
சென்னை: பொதுமக்கள் ஆவலுடன் எதிர்நோக்கி கொண்டிருக்கும், கிளாம்பாக்கம் பேருந்து முனையம் நாளைய தினம் திறந்து வைக்கப்படுகிறது.. முதல்வர் ஸ்டாலின் நாளை காலை இந்த பேருந்து முனையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கிறார்.
கோயம்பேடு பஸ் நிலையத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், புதிய பஸ் நிலையம் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.

வசதிகள்: இந்த பஸ் முனையத்தில் செய்யப்பட்டுள்ள வசதிகள் என்னென்ன தெரியுமா? சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வசதியாக 3,500 மாநகர பஸ்கள் வந்து செல்ல மேற்கூரையுடன் கூடிய நடைமேடை அமைக்கப்பட்டிருக்கிறது.
மொத்தம் 6 லட்சத்து 40 ஆயிரம் சதுர அடியில் நவீன தொழில் நுட்பத்தில் 2 அடிததளங்கள் தரை தளம், முதல் தளத்துடன் நவீன வசதிகளுடன் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
பைக்குகள்: அடித்தளத்தில் 260 கார்கள், 568 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையிலும், 2-வது அடித்தளத்தில் 84 கார்கள், 2 ஆயிரத்து230 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவுக்கு வசதிகள் உள்ளன. இது தவிர கடைகள், உணவகங்கள், துரித உணவகங்கள், பயணச்சீட்டு வழங்கும் இடங்கள், மருத்துவ மையம்,தாய்ப்பால் ஊட்டும் அறை, ATM மையம், பொருட்கள் பாதுகாப்பு அறை, சிசிடிவி கேமராக்கள், விசாலமான கழிப்பறைகள், டிரைவர், கண்டக்டர்கள் ஓய்வெடுக்கும் அறையும் அமைக்கப்பட்டிருக்கிறது.
முழுவதும் குளிர்சாதன வசதி, மழை நீர் வடிகால்கள், சூரிய தகடுகள், 2285 பார்க்கிங் வசதிகள், 500 தனியார் பேருந்துகளை நிறுத்துமிடங்கள், உள்ளிட்ட வசதிகளும் உள்ளன.
ஊரப்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனை அடையும் வகையில் நடைமேம்பாலம் எனப்படும் ஸ்கைவாக் அமைக்கப்படுகிறது. கண் பார்வையற்றவர்களும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் பிரெய்லி பலகைகள் வைக்கப்படுகின்றன. கியூஆர் கோடு டிக்கெட்டுகளும் வழங்கப்பட உள்ளன.
வடிகால் வசதி: தனியாக காவல் நிலையமும் அமைக்கப்படுகிறது.. இதைத்தவிர, புயல் வெள்ளக் காலங்களில் மழை நீர் தேங்காமல் வெள்ள நீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளன.. எல்லாவற்றையும்விட முக்கியமாக, பஸ் நிலையத்தின் உள்ளே முகப்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையும் வைக்கப்பட்டிருக்கிறது.
இத்தனை வசதிகள் கொண்ட, இந்த கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் நாளை அதாவது 30ம் தேதி காலை 11 மணிக்கு திறந்து வைக்கிறார்... இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர்பாபு முன்னிலை வகிக்கிறார்கள். வீட்டு வசதி நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர்சி.சமயமூர்த்தி வரவேற்க, சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா நன்றியுரை நிகழ்த்த உள்ளார்..
பிளான் இதுதான்: பஸ் நிலையத்தை திறந்து வைக்கும் முதல்வர் ஸ்டாலின், அங்கு நிறுவப்பட்டிருக்கும் கலைஞர் சிலையையும் திறந்து வைத்து மரியாதை செலுத்துகிறார். பின்னர், பேட்டரி கார் மூலம் பஸ் நிலையத்தின் உட்புற பகுதிகளை சுற்றிப்பார்க்க உள்ளார்..
நாளைய தினம் முதல்வர் ஸ்டாலின், கிளாம்பாக்கத்துக்கு நேரில் செல்வதால், வழி நெடுக அவருக்கு மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இந்த பஸ் ஸ்டாண்டு மட்டும் பயன்பாட்டுக்கு வந்துவிட்டால், பொதுமக்களுக்கு மிகுந்த வசதியாக இருக்கும்.. ஊரப்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் போவதானாலும், கிளாம்பாக்கத்திலிருந்து 1 கிலோமீட்டர்தான்... ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசலும் குறையும். மேலும், வெளிப்புற வட்ட சாலை, ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் வகையில் போக்குவரத்து அமைத்தால் முதலீட்டாளர்களுக்கும் வசதியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications