கிளாம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் இப்படித்தான் இருக்குமாம்.. அதென்ன ஸ்டேஷனுக்கு "மேல" நீளமா? வாவ் சென்னை

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு இழுபறியாக சென்று கொண்டிருக்கும் நிலையில், கிளாம்பாக்கத்தில் ரயில்வே ஸ்டேஷன் அமைய போவதாக சொல்லப்பட்டு வரும் நிலையில், அந்த ரயில்வே ஸ்டேஷன் எப்படி இருக்க போகிறது என்கிற சிறப்பு தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமல்லாமல், பயணிகளின் வசதிக்காக இன்னொரு அதிரடியையும் அதிகாரிகள் கையில் எடுத்துள்ளனர்.

கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு இன்னும் திறக்கப்படவில்லை.. இப்போதைக்கு திறக்கப்படும் சூழலும் இல்லை என்றே தெரிகிறது.. கட்டுமானப்பணிகள் மொத்தமும் முடிந்து திறப்புவிழாவுக்கு தயாரானபோதுதான், மழை நேரத்தில் பஸ் ஸ்டாண்டு முழுக்க தண்ணீர் தேங்கி நிற்பது தெரியவந்துள்ளது.

Kilambakkam Bus Terminus and Do you Know What are Kilambakkam railway stations Facilities

மழைநீர்: அதாவது, தேசிய நெடுஞ்சாலையைவிட, இந்த பஸ் பஸ்டாண்டு, 2 அடி உயரத்துக்கு கீழே இருக்கிறது.. அதனால்தான், தேசிய நெடுஞ்சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் நீர், இந்த பஸ் ஸ்டாண்டுக்குள் புகுந்து வந்து தேங்கி நின்றுவிடுகிறது. இதற்கு பிறகுதான், கால்வாய் அமைக்கும் பணி துரிதமாக ஆரம்பமாகி உள்ளது..

கிளாம்பாக்கத்தில் வடிகால் வசதி பணிகள் நடந்து கொண்டிருப்பதால், பஸ் ஸ்டாண்டு திறப்பது தள்ளிப்போயுள்ளது.. மற்றொருபக்கம், கிளாம்பாக்கத்தில் ரூ.20 கோடி செலவில் புதிய ரயில் நிலையம் அமைக்கும் பணி 4 மாதங்களில் தொடங்கப்போவதாகவும் அறிவிப்பு வெளியானது. கிட்டத்தட்ட 3 நடைமேடை கொண்ட கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தின் கட்டுமான பணிகளை, ஒரு வருடத்துக்குள் முடிக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.

ரயில்வே ஸ்டேஷன்: சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் புறநகர் ரயில்கள், இந்த ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, ரயில் நிலைய பணிக்கு முதற்கட்டமாக ரூ.40 லட்சம் நிதியை ரயில்வே நிர்வாகத்திற்கு, சிஎம்டிஏ வழங்கியிருப்பதாகவும் தகவல்கள் கூறியிருக்கின்றன.

இந்நிலையில், இதற்கான வரைவு அறிக்கையை தெற்கு ரயில்வே தயாரித்து, அதனை சென்னை ஒருங்கிணைந்த மாநகர போக்குவரத்து கழகத்திடம் அளித்திருக்கிறது. அதில், பேருந்து நிலையத்திலிருந்து, ரயில் நிலையம் வரை, தி.நகரில் இருப்பதை போலவே நடைமேம்பாலம் அமைக்கும் திட்டம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Kilambakkam Bus Terminus and Do you Know What are Kilambakkam railway stations Facilities

ரயில் பெட்டிகள்: இதுகுறித்து சென்னை ஒருங்கிணைந்த மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் சொல்லும்போது, "3 நடைமேடைகளை கொண்ட 12 ரயில் பெட்டிகள் நிற்கும் வசதியுடன் ரயில் நிலையம் அமைய போகிறது. ரயில் நிலையத்திலிருந்து மேம்பாலம் மூலம் மக்கள் எளிதாக எந்த சிரமமுமின்றி பஸ் ஸ்டாண்டுக்கு செல்வதற்கு வசதி ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஒருவேளை மேம்பாலம் நடைமேமைடயில் தரையிறங்குவதற்கான வடிவமைப்பு இல்லாவிட்டால், அதற்கேற்ப நடைமேடைகளை மாற்றி வடிவமைக்கவும் முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.

மேம்பாலம்: புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து நடை மேம்பாலம்தான் மிக முக்கிய வசதியாக கருதப்படுகிறது.. இப்போதைக்கு விரைவு ரயில்கள் நின்று செல்வதற்கான வசதி ஏற்படுத்தப்படாது, 4வது நடைமேடை ஏற்படுத்தப்பட்டால், அங்கிருந்தும் நடைமேம்பாலத்தை இணைப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தி வைக்கப்படும்" என்றனர்.

இதற்கு முன்புவரை, பஸ் ஸ்டாண்டு மட்டும் கணக்கில் இருந்ததால், ரயில்வே ஸ்டேஷனும் இங்கு தேவை என்ற வலியுறுத்தல்கள் மட்டுமே வந்துகொண்டிருந்தன. ஆனால், ரயில்வே ஸ்டேஷன் வருவது உறுதியாகிவிட்டதால், பஸ் ஸ்டாண்டுக்கும் - ரயில்வே ஸ்டேஷனுக்குமான "இணைப்பு" தேவையாக இருக்கிறது.. அதற்காகத்தான், கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டையும், ரயில்வே ஸ்டேஷனையும் இணைக்கும் வகையில் நவீன ஸ்கைவாக் அமைக்கப்பட உள்ளார்களாம்..

Kilambakkam Bus Terminus and Do you Know What are Kilambakkam railway stations Facilities

அதாவது, 450 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலத்தில், ஒரு மணி நேரத்தில் 5,000 பேர் செல்லும் வகையில் இந்த ஸ்கைவாக் தயாராக போகிறதாம். ஜிஎஸ்டி ரோடு, ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டு, மாநகர பஸ்கள் நிறுத்துமிடம் என பல்வேறு பகுதிகளிலும், இறங்கும் வகையில் ஸ்கைவாக் வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.

வேற லெவல்: ஆக, ஒருபக்கம் வடிகால் பணிகள், இன்னொரு பக்கம் ரயில்வே ஸ்டேஷன், இதற்கு நடுவில் ஸ்கைவாக் என பட்டையை கிளம்பி கொண்டிருக்கிறது கிளாம்பாக்கம் ஏரியா..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+