Kilambakkam Railway Station: கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது திறக்கப்படும்? பயணிகளுக்கு குட் நியூஸ்! தெற்கு ரயில்வே
சென்னை: கிளாம்பாக்கம் ரயில் நிலையம் (Kilambakkam Railway Station) எப்போது திறக்கப்படும் என்ற அப்டேட்டை ரயில்வே துணை மேலாளர் வெளியிட்டுள்ளார். ரயில்வே பாதுகாப்பு ஆணையர் இம்மாதத்தில் கிளாம்பாக்கம் ரயில்வே வழித்தடத்தை ஆய்வு செய்வார் என்றும், ரயில்வே துணை மேலாளர் ஆய்வுக்குப் பின் பறக்கும் ரயில் திட்டத்தில் வேளச்சேரி - பரங்கிமலை வழித்தடம் மார்ச்சில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் ரயில்வே துணை மேலாளர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக கோயம்பேட்டில் இயங்கி வந்த பேருந்து நிலையம் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டது. கடந்த 2024 ஆம் ஆண்டு இறுதியில் திறக்கப்பட்ட இந்த பேருந்து நிலையத்தில் இருந்துதான் வெளியூர்களுக்கு செல்லும் பெரும்பாலான பேருந்துகள் புறப்பட்டு செல்கின்றன.

கிளாம்பாக்கம் ரயில் நிலையம்
தனியார் ஆம்னி பேருந்துகளும் இங்கிருந்தே செல்கின்றன. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் இந்த பேருந்து நிலையம் சென்னையில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதனால் நகருக்குள் இருந்து கிளாம்பாக்கம் செல்ல வேண்டும் என்றால் பேருந்துகளில் 1.30 மணி நேரத்திற்கும் மேலாகிறது.
அதுவும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக நேரம் என்றால் 2 மணி நேரத்திற்கும் மேல் ஆகும். இதனால், பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். இதற்கு தீர்வு காணும் விதமாகத்தான், சென்னை கிளாம்பக்கத்தில் ரயில் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஒப்புதலும் ரயில்வே வாரியம் அமைத்த நிலையில், கிளாம்பாக்கத்தில் புறநகர் மின்சார ரயில்கள் நின்று செல்ல ஏதுவாக கட்டமப்பு பணிகள் தொடங்கப்பட்டன.
எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து நிலையத்திற்கு நேரடியாக செல்ல ஸ்கைவாக் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் முடிந்து ரயில் நிலையம் திறக்கப்பட்டால் சென்னை நகருக்குள் இருந்து கிளாம்பாக்கம் வந்து செல்வது எளிதாகும் என்பதால் பயணிகள் இந்த ரயில் நிலையம் எப்போது திறக்கப்படும் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர்.
கடந்த ஆண்டே ரயில் நிலையம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கபப்ட்ட நிலையில் ஸ்கைவாக் பணிகள் தாமதம் உள்ளிட்டவற்றால் ரயில் நிலையம் பயன்பாட்டுக்கு வருவதும் தாமதம் ஆகிக்கொண்டே செல்கிறது. இந்த நிலையில்தான் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது திறக்கப்படும் என்ற கேள்விக்கு ரயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங் பதிலளித்துள்ளார்.
வரும் மார்ச் முதல் வாரத்தில்..
ஆர் என் சிங் கூறியதாவது:- கிளாம்பக்கம் ரயில் நிலையம் மார்ச் மாதம் முதல் வாரத்தில் செயல்பட தொடங்க வாய்ப்புள்ளது. ரயில்வே பாதுகாப்பு ஆணையர் இம்மாதத்தில் கிளாம்பாக்கம் ரயில்வே வழித்தடத்தை ஆய்வு செய்வார். ரயில்வே துணை மேலாளர் ஆய்வுக்குப் பின் பறக்கும் ரயில் திட்டத்தில் வேளச்சேரி - பரங்கிமலை வழித்தடம் மார்ச்சில் பயன்பாட்டுக்கு வரும். என்று கூறினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications