Kilambakkam: கிளாம்பாக்கத்தில் சீக்கிரமே முடிய போகுது திண்டாட்டம்! கோடையில் பயணிகளுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து ரயில் நிலையத்திற்கு செல்லும் வகையில் ஜிஎஸ்டி சாலையில் அமைக்கப்பட்டு வரும் ஆகாய நடைமேம்பாலம் எப்போது திறக்கப்படும் என்பது தொடர்பான அப்டேட் வெளியாகியுள்ளது. பணிகள் இறுதி கட்டத்தை எட்டிவிட்ட நிலையில், திறப்பு எப்போது என்பது குறித்து அதிகாரிகள் கூறிய தகவலை பார்க்கலாம்.

சிவில் மற்றும் சில பினிஷிங் பணிகள் மட்டும் கொஞ்சம் பாக்கியுள்ளது. கான்கிரிட், தளம் அமைத்தல், மேற்கூரை போன்ற கடைசி கட்ட பணிகள் மட்டுமே உள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Kilambakkam Skywalk

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்

சென்னை வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. 88.52 ஏக்கர் பரப்பளவில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த பேருந்து நிலையம் பயணிகளுக்கு தற்போது பெரும் வரப்பிசதாமாக உள்ளது. பேருந்து நிலையம் கடந்த 2023 டிசம்பரில் திறக்கப்பட்டது. சென்னை கோயம்பேட்டில் இருந்து அதுவரை வெளியூர் செல்லும் பேருந்துகள் சென்று வந்தன.

கிளாம்பாக்கத்தில் இருந்து பேருந்துகள் இயங்க தொடங்கிய போது ஆரம்பத்தில் பயணிகள் கொஞ்சம் சிரமத்தை சந்தித்தனர். சென்னையில் இருந்து இவ்வளவு தொலைவில் பேருந்து நிலையமா? என்று பயணிகள் தங்கள் அதிருப்தியை காட்டினர். ஆனால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு உள்ள வசதிகள் மற்றும் சுத்தமான பராமரிப்பு போன்றவை பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

வரும் மே மாதம் திறக்கப்படும்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு இன்னும் ஒரே ஒரு குறையாக மக்கள் பார்ப்பது புறநகர் மின்சார ரயில் சேவை இல்லாததுதான். இதனை கருத்தில் கொண்டு வண்டலூரில் இருந்து ஊரப்பாக்கம் செல்லும் வழியில் புறநகர் மின்சார ரயில் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்றது. ரயில் நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வருவதற்கு ஆகாய நடைபாதையும் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைய உள்ளன. கடந்த ஆண்டே திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த ஆகாய நடைமேம்பாலம் திறப்பு தாமதம் ஆனது. இந்தநிலையில் தற்போது பணிகள் இறுதி கட்டத்தை எட்டிவிட்ட நிலையில், கிளாம்பாக்கம் ஆகாய நடைமேம்பாலம் வரும் மே மாதம் திறக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

20 நாட்களுக்குள் முடிந்துவிடும்

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது:- சிவில் மற்றும் சில பினிஷிங் பணிகள் மட்டும் கொஞ்சம் பாக்கியுள்ளது. கான்கிரிட், தளம் அமைத்தல், மேற்கூரை போன்ற கடைசி கட்ட பணிகள் மட்டுமே உள்ளன. 275 மீட்டர் நீளம் கொண்ட இந்தபாலம் மூன்றுகட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மீதமுள்ள பணிகள் இன்னும் 15 முதல் 20 நாட்களுக்குள் முடிந்துவிடும். பணிகளை துரிதப்படுத்தியுள்ளோம்.

ஜிஎஸ்டி சாலையில் உள்ள பணிகள் முடிந்த உடன் இரண்டாவது கட்டத்துடன் பாலம் இணைக்கப்படும்" என்று தெரிவித்தனர். ரூ.20 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் இந்த ஆகாய நடைமேம்பாலம், பயன்பாட்டுக்கு வந்த பிறகு கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து நிலையத்திற்கு பணிகள் எளிதாக செல்ல முடியும். சென்னை சிட்டிக்குள் செல்வதற்கும் சிட்டியில் இருந்து வருவதற்கும் பயணிகளுக்கு எளிதாக இருக்கும் என்பதால் இந்த பாலம் எப்போது திறக்கப்படும் என்று பயணிகள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

பயணிகள் ஆர்வம்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்துதான் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் இயக்கப்படுகின்றன. திருச்சி, மதுரை, கோவை, சேலம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி என தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுகு செல்லும் பேருந்துகளும் இங்கிருந்தே செல்கின்றன. தினமும் பல ஆயிரக்கணக்கான பயன்படுத்தும் இந்த பேருந்து நிலையதிற்கு எளிதாக வந்து செல்லும் விதமாக இந்த நடைமேம்பாலம் இருக்கும் என்பதால் பயணிகள் திறப்பு தேதியை ஆர்வத்துடன் எதிர்பார்த்து உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+