கிளாம்பாக்கம் vs சென்ட்ரல்.. சென்னைக்கு முதல் முறையாக வரும் மக்கள் அறிய வேண்டிய முக்கியமான வசதிகள்
சென்னை : சென்னைக்கு வேலை காரணமாக வரும் பலர் எங்கு தங்குவது.. எவ்வளவு ரூபாய் செலவாகும் என்பது குறித்த சந்தேகங்கள் இருக்கும்.. அதேபோல் ஒரே ஒரு நாள் வந்து செல்பவர்கள் அதிகம்.. 200 ரூபாய் முதல் 500 ரூபாய் செலவு செய்து பேருந்து மற்றும் ரயில்களில் ஏறி வரும் சாமானிய மக்கள் அறை எடுத்து தங்குவதற்கு, கிளாம்பாக்கம் மற்றும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையங்களில் குறைந்த செலவில் வசதிகள் உள்ளன. அவற்றின் விவரங்களை இந்த பதிவில் பார்ப்போம்.
சென்னையில் இருந்து பேருந்தில் வந்தால், பலரும் கிளாம்பாக்கத்தில் தான் இறங்குவார்கள்.. அவர்கள் மிக குறைந்த செலவிலேயே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தங்கி கொள்ள முடியும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தங்குவதற்கு 12 மணி நேரத்திற்கு ₹200 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. பேருந்து நிலையத்தின் முதல் தளத்தில் இதற்கான வசதிகள் உள்ளன.

கிளாம்பாக்கம் படுக்கை வசதி
வசதிகளை பொறுத்தவரை ஆண்களுக்கான தங்கும் இடம் தனியாக இருக்கிறது. பெண்களுக்கும் தனியான தங்கும் பகுதி இருக்கிறது. இங்கு கழிப்பறைகள் மிகவும் சுத்தமாகவும் பராமரிக்கப்படுவதாக பயணிகள் கூறுகிறார்கள். தூங்கும் படுக்கைகள் சுத்தமாகவும் ஒழுங்காகவும் இருப்பதாக பயணிகள் ஆச்சரியப்படுகிறார்கள். சுமார் 50க்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ளதாக கூறப்படுகிறது.
எப்படி அணுகுவது
எனவே முதலில் கேட்பவர்களுக்கே இந்த வசதி கிடைக்கும் அறைகளில் தங்க ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ் என ஏதாவது அடையாள அட்டையை கண்டிப்பாக கட்டாயம் காட்ட வேண்டும். ஆனால் பெரும்பாலான படுக்கைகளில் விசிறியும் சார்ஜிங் பாயிண்டும் உள்ளதாக பயணிகள் தெரிவிக்கிறார்கள். துணி துவைக்க அனுமதி இல்லை என்கிறார்கள். எப்பொழுதும் வந்து தங்கிக்கொள்ளலாம் (24x7 திறந்துள்ளது) என்கிறார்கள். ஆனால் அறையில் காலி இருந்தால் கிடைக்கும்.
சென்னை சென்ட்ரல்
அடுத்ததாக ரயில்களில் வருவோர், எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்களில் இறங்குவார்கள்.. அவர்கள் சென்ட்ரலில் ரயில் டிக்கெட்டை காண்பித்து தங்கி கொள்ளும் வகையில் வசதிகள் உள்ளன. 250 ரூபாய் முதல் கட்டணத்தில் தங்கும் வசதிகள் உள்ளதாக பயணிகள் தெரிவிக்கிறார்கள். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளுக்காக மிகச் சிறந்த ஏசி Dormitory வசதி வழங்கப்படுகிறது. 12 மணி நேரம் தங்க ₹265 கட்டணம் ஆகும். 24 மணி நேரம் தங்க ₹600 வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
ஐஆர்சிடிசி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஓய்வறைகள் மற்றும் டார்மெட்ரி ஆகியவை இந்திய இரயில்வேயின் உணவு மற்றும் சுற்றுலா கழகமான ஐஆர்சிடிசி மூலம் பராமரிக்கப்படுகிறது. இவை தனி அறைகளாக அல்லது கூட்டாகத் தங்கும் அறைகளாக இருக்கின்றன. குடும்பமாகத் தங்குவதற்கும் அறைகள் இருக்கிறது. குறைந்தபட்சம் 3 மணிநேரம் முதல் அதிகபட்சமாக 48 மணிநேரம் வரை தங்க முடியும்.
முன்பதிவு எப்படி
அதேநேரம் இந்த ஓய்வறைகளைப் பயன்படுத்த, உங்களிடம் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்து சேரும் அல்லது சென்ட்ரலில் இருந்து புறப்படும் உறுதிசெய்யப்பட்ட (Confirmed) அல்லது ஆர்.ஏ.சி. (RAC) ரயில் டிக்கெட் இருக்க வேண்டியது அவசியம் ஆகும். IRCTC-இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியும்.
ஸ்லீப்பிங் பாட்ஸ்
அதேபோல் ஸ்லீப்பிங் பாட்ஸ் என்ற வசதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளது. இது தனியாக தூங்க வேண்டும் என்பவர்களுக்காகவே உள்ள படுக்கை வசதி கொண்ட பெட்டி போன்ற அமைப்பாகும். குறைந்த கட்டணத்தில் சிறிது நேரம் ஓய்வெடுக்க விரும்புவோருக்கு இது சிறந்தது என்கிறார்கள் பயணிகள். ஒரு சில மணிநேரங்களுக்குக் (உதாரணமாக 6 அல்லது 12 மணி நேரம்) குறைந்த வாடகையில் இந்த ஸ்லீப்பிங் பாட்களைப் பயன்படுத்த முடியும்.
என்னென்ன வசதிகள்
எக்ஸிக்யூட்டிவ் லவுஞ்ச் வசதியும் சென்ட்ரலில் உள்ளது. விமான நிலையங்களில் உள்ளதைப் போல, சொகுசு வசதிகளுடன் கூடிய ஓய்வறையும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருக்கிறது. கட்டணம் அதிகமாக இருக்கும். இங்கு வசதியான சோபாக்கள், சாய்வு நாற்காலிகள், கழிவறை மற்றும் குளியலறை வசதி, இலவச வைஃபை, இலவச தேநீர்/காபி மற்றும் கட்டணத்துடன் கூடிய உணவு (பஃபே) வசதிகள் இருக்கும்.இந்த இடத்தை பொறுத்தவரை ரயில் வரும் வரை சிறிது நேரம் ஓய்வெடுக்க விரும்புவோர் அல்லது குளித்து உடை மாற்ற விரும்புவோர் ஒரு மணிநேர அடிப்படையில் நுழைவுக் கட்டணம் செலுத்திப் பயன்படுத்த முடியும்.. கட்டண விவரங்களை நேரில் சென்று அறிய வேண்டும். ஆனால் இந்த ஓய்வறைகளைப் பயன்படுத்துவதற்கு முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட் இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.
-
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுமா? சென்னையில் பீதி.. பொது சுகாதாரத்துறை விளக்கம் -
ரயில்கள் மீது கல் வீசினால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை.. சென்னை ரயில்வே கோட்டம் கடும் எச்சரிக்கை! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications