கிசான் விகாஸ் பத்ரா திட்டம்.. நீங்க ரூ.200 தினமும் ஒதுக்கினாலே.. லட்சாதிபதிதான்.. பெஸ்ட் சேமிப்பு KVP
சென்னை: பணத்தை இரட்டிப்பாக்கித்தரும் கிசான் விகாஸ் பத்திரம் (KVP) கணக்கை முதிர்ச்சியடையும் முன்பே முன்கூட்டியே மூடலாமா? ஒருவர், இன்னொருவருக்கு கணக்கை மாற்றி தரலாமா? இந்த திட்டத்தின் பலன்கள் என்னென்ன?
நடுத்தர மற்றும் ஏழை மக்கள் தங்களுடைய சேமிப்பு பழக்கத்தை அதிகரித்து கொள்ளவும், தனி நபர்களிடையே ஆரோக்கியமான முதலீட்டு பழக்கத்தை ஊக்குவிக்கவும் தொடங்கப்பட்டதுதான், கிசான் விகாஸ் பத்ரா திட்டம்..

அஞ்சல் துறை: மத்திய அரசின் அஞ்சல் துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் கேவிபி எனப்படும் கிசான் விகாஸ் பத்ரா திட்டமானது, சிறுசேமிப்பு திட்டங்களிலேயே வாடிக்கையாளர்களின் அதிக ஆதரவை பெற்றதாகும். கடந்த 1988-ல் சிறிய சேமிப்பு சான்றிதழ் திட்டமாக தொடங்கப்பட்ட நிலையில், இன்று விவசாயிகளின் நலத்திட்டங்களுக்காகவே இந்த திட்டம் செயல்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் முக்கிய அம்சமே, இதன் அதிக வட்டி விகிதம்தான். இந்த திட்டத்தின் கீழ் முதலீட்டாளருக்கு 7.5 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்பட்டு வருவதே, பலரது ஆதரவை எளிதாக பெற முடிகிறது. அதாவது, ஆண்டுக்கு ஒரு முறை முதலீட்டுடன் வட்டி சேர்க்கப்படும்.
இரட்டிப்பு லாபம்: இந்த திட்டத்தில் சேர்வதற்கு குறைந்தபட்சமாக ரூபாய் 1000 போதும். அதிகபட்சமாக விருப்பப்பட்ட தொகையை நீங்கள் இந்த திட்டத்தில் சேமிக்க முடியும். 10 வருடங்களில், இரட்டிப்பு லாபத்துடன், முதலீடு செய்த தொகையை நீங்கள் பெறலாம். 9 வருடங்கள், 7 மாதங்கள் முதலீடு செய்த பிறகு, வெறும் 3 மாதங்களிலேயே அந்த இரட்டிப்பு லாபத்தை பெறலாம்... சான்றிதழ் வடிவில், இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
அதாவது ஒரு வருடத்திற்கு தொடர்ந்து தினமும் ரூ.200 முதலீடு செய்தால், 10 வருடத்துக்குள் உங்கள் முதலீடு இரட்டிப்பாகும்.. ஒரு வருடத்திற்கு ஒரு நாளைக்கு ரூ.200 முதலீடு செய்தால், அந்த ஆண்டுக்கான மொத்த முதலீடு ரூ.73,000 (200 * 365) ஆகும். இரட்டிப்பு காலம் 115 மாதங்களில், வருடாந்திர வட்டி விகிதத்துடன் உங்கள் முதலீடு, 9 ஆண்டுகள், 7 மாதங்களில் ரூ.1,46,000 ஆக இரட்டிப்பாகும்.
பங்கு சந்தை: பங்கு சந்தையில் காணப்படும் ஏற்ற தாழ்வுகளால் கிசான் விகாஸ் பத்ரா திட்டத்திற்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. இந்த திட்டத்திற்கு அரசாங்க உத்தரவாதமும் உண்டு. ஒருவர் எவ்வளவு தொகை முதலீடு செய்தாலும், அதற்குரிய பாதுகாப்பை மத்திய அரசு வழங்குகிறது. இந்த திட்டத்தின் கணக்கு 115 மாதங்களில் முதிர்ச்சியடைவதால், கணக்கிலிருந்து நீங்கள் பணத்தை எடுக்கும்வரை உங்களுக்கு வட்டி தொடர்ந்து கிடைக்கும்.
இந்த திட்டத்தில் ரூ.1,000, ரூ.5000, ரூ.10,000 மற்றும் முதலீட்டிற்கு ரூ.50,000 போன்ற மதிப்புகளில் கிடைக்கிறது. ரூ.50,000 மதிப்புள்ள மதிப்புகள் ஒரு நகரத்தின் தலைமை அஞ்சலகத்தில் மட்டுமே கிடைக்கும்..
கேவிபி விண்ணப்பம்: கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் நீங்க இணைய வேண்டுமானால், அருகிலுள்ள தபால் அலுவலகத்திற்கு நேரில் அணுகி இணையலாம்.. ஆதார் அட்டை, வயதுச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு போட்டோ, கேவிபி விண்ணப்பப் படிவம் போன்றவை கட்டாயம் தேவைப்படும்.
@@
கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். வயது வரம்பு எதுவுமே கிடையாது. ஒருவர் பெயரிலிருந்து இன்னொருவர் பெயருக்கு (நிபந்தனைக்குட்பட்டு), எத்தனை முறை வேண்டுமானாலும் கணக்கை மாற்றிக்கொள்ளவும் முடியும்..
கூட்டுக்கணக்கு: கிசான் விகாஸ் பத்திரம் (KVP) கணக்கை முதிர்ச்சியடையும் முன்பே முன்கூட்டியே மூடலாமா? KVP கணக்கு வைத்திருக்கும் தனி நபரின் மரணம் அல்லது கூட்டுக்கணக்கில் உள்ள அனைவருமே மரணமடைந்தால் மட்டுமே கிசான் விசான் பத்திர கணக்கை முதிர்வு காலத்திற்கு முன்னதாகவே மூட முடியும்.. அல்லது நீதிமன்றம் உத்தரவிட்டால் கணக்கு மூடப்படலாம்.
ஒருவேளை, கிசான் விகாஸ் பத்திரத்தை, ஒருவர் இன்னொருவருக்கு மாற்றிக் கொடுக்கலாம். ஆனால், ஒரு தபால் நிலையத்திலிருந்து மற்றொரு தபால் நிலையத்துக்குமட்டுமே மாற்ற முடியும்... கிசான் விகாஸ் பத்திரம் வாங்கப்பட்ட இரண்டரை வருடத்துக்கு பிறகே, பிறருக்கு மாற்றிக் கொடுக்கலாம். அதேபோல, பத்திரத்தை அடகு வைத்திருந்தால் கணக்கு மாற்றப்படலாம்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications