பிஎம் கிசான் "ஜாக்பாட்".. விவசாயிகளுக்கு ரூ. 2000 எப்போது தெரியுமா? PM கிசான் தவணை பெற இது முக்கியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மக்களவை தேர்தல் முடிந்து, புதிய ஆட்சி அமைந்ததுமே PM-Kisan திட்டத்தின் தவணை தொகை வெளியிடப்படும் என்று தகவல்கள் பரபரத்தன. இந்நிலையில், பிஎம் கிசான் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

நாட்டின் முதுகெலும்பாக கருதப்படும் விவசாயிகளின் பொருளாதார வளர்ச்சிக்காகவும், குறைந்த நிலத்தில் விவசாயம் செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கவும் நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் உள்ள விவசாயிகளுக்காக கொண்டுவரப்பட்ட திட்டம்தான், பிஎம் கிசான் எனப்படும் "பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா" திட்டமாகும்.

PM Kisan Yojana

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பதற்காகவே மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட திட்டமாகும். பிரதம மந்திரி கௌரவ நிதி உதவித்திட்டம் என்றும் இந்த திட்டத்தை அழைப்பார்கள்.

விவசாயிகள் : இந்த திட்டத்தின்கீழ், நாட்டிலுள்ள விவசாயிகளுக்கு பண உதவியை மத்திய அரசு வழங்கி வருகிறது.. ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம், ஒரு வருடத்துக்கு மொத்தம் ரூ.6000 பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாகவே டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த பணத்தில், விவசாயிகள் தங்கள் மானிய விலையில் விவசாயத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொள்ளலாம்..

இந்த திட்டத்தில் 2 ஹெக்டேருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளும் பயன்பெற முடியும் என்பது மிக முக்கியமான அம்சமாகும். அதேபோல, கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும், பயிரிடும் நிலங்களைத் தங்கள் பெயர்களில் வைத்திருக்கும் விவசாயிகள் இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.

அடுத்த தவணை: அந்தவகையில், இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் இருக்கும் கோடிக்கணக்கான சிறு, குறு விவசாயிகள் ஆண்டுதோறும் பயனடைந்து வருகின்றனர். இப்போது, இதுவரை விவசாயிகளுக்கு 17 தவணைகளை மத்திய அரசு கொடுத்துள்ளது. இந்த 17வது தவணை தொகை கடந்த ஜூன் மாதம் வழங்கப்பட்டது.

18வது தவணைத் தொகை எப்போது வரும் என்று விவசாயிகள் காத்திருக்கின்றனர்.. அநேகமாக அக்டோபர் 2024ல் 18வது தவணைத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திட்டவட்டம்: ஆனாலும், குறிப்பிட்ட சில விஷயங்களை செய்த விவசாயிகளுக்கு மட்டுமே இந்த 18வது தவணைத் தொகை கிடைக்கும் என்று ஏற்கெனவே மத்திய அரசு திட்டவட்டமாக கூறியிருந்தது. அதன்படி, ஆவணப் பதிவேற்றம் மற்றும் நில சரிபார்ப்பு ஆகியவற்றை விவசாயிகள் செய்திருப்பதோடு, e-KYC ஐ ஆன்லைன் அல்லது ஆஃப்லைனில் கட்டாயம் செய்திருக்க வேண்டும். இவர்களுக்கு மட்டுமே, பிஎம் கிசான் சம்மன் யோஜனா திட்டத்தின் 18வது தவணைத் தொகை விவசாயிகளுக்கு கிடைக்கும்.

பிஎம் கிசான் திட்டத்தில் தங்களின் பெயர் இருக்கிறதா, இல்லையா? என்பதை விவசாயிகள் (https://pmkisan.gov.in) என்ற இணையதள பக்கத்தில் பரிசோதித்து கொள்ளலாம்..

புகார்கள்: ஒருவேளை விண்ணப்பித்த விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் வரவில்லையெனில், பிரச்னை என்ன என்பதை pmkisan.gov.in என்ற வலைதளப் பக்கத்தில் பார்க்கலாம். அதேபோல, பிரதம மந்திரி கிசான் கட்டணமில்லா தொலைபேசி எண் 18001155266, பிரதான் மந்திரி கிசான் ஹெல்ப்லைன் எண்கள் 155261, 011-24300606, 0120-6025109 மற்றும் லேண்ட் லைன் எண்களை 011-23381092, 23382401 தொடர்பு கொண்டு புகாரை தெரிவிக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+