"எடப்பாடியை காலி செய்து.. சுடக்கு போட்டு.. அதிமுகவினர் சப்பைகளா?".. பகீரை கிளப்பிய கிஷோர் கே. சாமி
அதிமுக ஆதரவாளர் கிஷோர் கே சாமி 2 ட்வீட்களை பதிவிட்டு பரபரப்பை கிளப்பி உள்ளார்
சென்னை: "கமலாலயத்தில் நடந்த கட்சிக்கூட்டத்தில் மத்தியில் இரட்டை இலையை முடக்கி விடுவேன் எடப்பாடியாரை ஒருமையில் பேசி, காலி செய்துவிடுவேன் என்றெல்லாம் அண்ணாமலை பேசியதை வேடிக்கை பார்க்க அண்ணா திமுகவினர் சப்பைகளா??? என்று கேள்வி எழுப்பி உள்ளார் கிஷோர் கே சாமி. இதனால் பலரும் குழம்பிபோன நிலையில், திரண்டு வந்து பதிலடிகளை தந்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழகத்தில் இந்த முறை குறைந்தது 25 சீட்டுகளையாவது வெல்ல வேண்டும் என்ற ஆர்வத்திலும் முனைப்பிலும் பாஜக உள்ளதாக தெரிகிறது.. அந்தவகையில், குறிப்பிட்ட சில தொகுதிகளிலும் தேர்தல் பணிகள் சைலண்ட்டாக வேகம் எடுத்துள்ளன..
அதிமுக மேலும் பலவீனப்பட்டுள்ள நிலையில், கட்சியே 4 ஆக உடைந்துள்ளது.. ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தந்து அவரை எடப்பாடி பழனிசாமி அரவணைத்து செல்வாரா? என்பது சந்தேகமாகவே உள்ளது..

பிடிவாதம்
இப்போது போலவே பிடிவாதம் தொடர்ந்தால், எடப்பாடி டீம் இல்லாமலேயே 3வது அணி அமைத்து பாஜக போட்டியிட்டாலும், ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.. காரணம், எடப்பாடி பொறுப்பில் இருந்தவரை, பாஜகவுக்கு பெருமளவு சீட்டுகளையோ, தொகுதிகளையோ தந்ததில்லை.. மறைமுக எதிர்ப்பு அரசியல் காரணமாக பாஜகவுக்கான ஓட்டுக்களும் குறைந்துவிட்டதாகவே பாஜக நினைக்கிறது. எனவே 3வது அணி அமைக்கவும் வாய்ப்புள்ளது என்றாலும், முடிந்தவரை எடப்பாடி தரப்பை சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கி வருகிறது.

ஹோப் வானதி
அதுமட்டுமல்ல, அதிமுக விவகாரங்களில், இரட்டை இலையை முடக்கினாலும், தங்களுக்கு ஒருவகையில் அது நல்லது என்றே பாஜக நினைக்கிறதாம். கொங்கு மண்டலத்தில் பாஜக ஓரளவு வலுவுள்ள நிலையில், எல்.முருகன், அண்ணாமலை, வானதி சீனிவாசன் போன்றோர் கொங்குவை தாங்கி பிடிக்கும் நிலையில், தென்மண்டல வாக்குகளை வளைத்து போடுவதற்காகவே ஓபிஎஸ் + சசிகலா + டிடிவி தினகரன் போன்றோரே போதும் என்று பாஜக கணக்கு போடுவதாக தெரிகிறது.

அதிருப்தி
அதற்கேற்றவாறு, தமிழகத்தில் 25 தொகுதிகளை பாஜக கைப்பற்றும் என்று மாநில தலைவர் அண்ணாமலை அடிக்கடி சொல்லி வருகிறார். இது அதிமுகவுக்கு மேலும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாகவே தெரிகிறது.. அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகுமா? அல்லது உடையுமா? என்ற சந்தேகங்கள் நிலவிவதும் நிலையில், அதிமுக ஆதவராளரான கிஷோர் கே சாமி முக்கிய தகவல் ஒன்றை கூறி பரபரப்பை கிளப்பி உள்ளார். இது தொடர்பாக 2 ட்வீட்டுகளையும் அவர் பதிவிட்டுள்ளார்.

சப்பைகளா
அதில், "கமலாலயத்தில் நடந்த கட்சிக்கூட்டத்தில் மத்தியில் இரட்டை இலையை முடக்கி விடுவேன், எடப்பாடியாரை ஒருமையில் பேசி, காலி செய்துவிடுவேன் என்றெல்லாம் அண்ணாமலை பேசியதை வேடிக்கை பார்க்க அண்ணா திமுகவினர் சப்பைகளா ??? என்று கேள்வி எழுப்பி உள்ளார் கிஷோர் கே சாமி. அதேபோல, இன்னொரு பதிவில், இரட்டை இலையை முடக்குவேன் , எடப்பாடியாரை காலி பண்ணிடுவேன்னு கமலாலாயத்துல பூட்டின கதவுக்குள்ள சுடக்கு போடக்கூடாது மிஸ்டர் அண்ணாமலை, முதுகெலும்பிருந்தால் துணிச்சலா பொதுவெளியில் சொல்லணும், சொல்லிட்டு நீங்க தேர்தலில் டெப்பாசிட் வாங்கி காட்டுங்க, திறந்த நிலை சவால்" என்று பதிவிட்டுள்ளார்.

காலி பண்ணிடுவேன்
கிஷோர் கே சாமியின் இந்த 2 ட்வீட்களும் பாஜக நிர்வாகிகள் மத்தியில் பெருத்த பரபரப்பையும் சலசலப்பையும் உண்டுபண்ணி வருகிறது. இதற்கு பலரும் திரண்டு வந்து சந்தேகங்களை கேட்டு, பதிலடிகளையும் தந்து வருகிறார்கள்.. "வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேச வேண்டாம். ஆதாரத்தை எடுத்து வைத்துவிட்டு பிறகு பேசுங்கள், கமலாயத்துக்கு ஏன் அதிமுககாரர்கள் போக போறார்கள்? ஏன் அதிமுக மீதும் தலைவர்கள் மீதும் இந்த அளவுக்கு வன்மம் கொட்டப்படுகிறது? அருவருப்பான அநாகரிகமான முறையில் மீம்ஸ்கள் பரப்பப்பட்டு வருகின்றன? எல்லாம் எல்லை மீறி போய்க் கொண்டு இருக்கிறது" என்றெல்லாம் கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.
-
தொகுதி மறுவரையறை! சண்டை செய்யும் திமுக.. வேடிக்கை பார்க்கும் அதிமுக! என்னதான் பிரச்சனை? -
பச்சைத் துண்டு எடப்பாடி பழனிசாமி ஒரே போடு.. நிலமே இல்லாமல் விவாதமாகும் அசையா சொத்து விவரம் -
லட்டு மாதிரி கிடைத்த வாய்ப்பு.. கையில் இருந்த தங்கத்தை மிஸ் பண்ணிட்டாரே.. எடப்பாடி பழனிசாமி! -
அண்ணனின் 5 சவரன் தங்கம் அதிரடி ஆஃபர்.. ஆடிப்போன போடி களம்! ஓபிஎஸ் போட்ட தேனி கணக்கு செட்டாகுமா? -
எடப்பாடியில் குமுறும் "குக்கர்.." கடைசி நேரத்தில் விஐபி தொகுதியில் விரிசல்? அதிர்ச்சியில் இபிஎஸ் -
ரூ.8000 கூப்பன் கொடுத்து.. வாக்கு கேட்ட திமுக வேட்பாளர் செந்தில்! கொந்தளிக்கும் அதிமுக -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவோம்.. பாஜக வாக்குறுதியை சொல்லி வாக்கு சேகரித்த ராஜன் செல்லப்பா! -
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மண்டலம் வாரியான விவரம்.. திமுக ஜெயிக்க மூன்று காரணங்கள் -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி












Click it and Unblock the Notifications