பாஜக குஷ்பு பலே விளம்பரம்.. "கிவி பழம் சாப்பிடுங்க.. விட்டமின் சி நிறைய இருக்கு".. வைரலாகும் பதிவு
கிவி பழத்தின் நன்மைகள் குறித்து குஷ்பு ட்வீட் பதிவிட்டுள்ளார்
சென்னை: கிவி பழத்தின் சிறப்பை சொல்லி, மத்திய அமைச்சரின் முயற்சியையும் பாராட்டி வாழ்த்து சொல்லி உள்ளார் பாஜகவின் குஷ்பு.
வடகிழக்கு மாநிலங்களின் பாஜகவின் நம்பிக்கையாக இருப்பவர் கிரண் ரிஜிஜூ... விளையாட்டுத் துறை இணை அமைச்சராக இருந்தவருக்கு திடீர் புரமோஷன் தரப்பட்டு மத்திய அமைச்சர் அந்தஸ்தும் வழங்கப்பட்டது.
இதற்கு பிறகு வடகிழக்கு மாநில மக்கள் நலனில் அதிக அளவில் அக்கறை காட்டி வருகிறார்.. அவர்களுடன் நெருங்கி பழகியே வருகிறார்..

டான்ஸ்
சில தினங்களுக்கு முன்புகூட, அருணாச்சல பிரதேசத்திலுள்ள கஜலாங் என்ற கிராமத்திற்கு சென்றிருந்தார்.,. அங்கு வசித்து வரும் சஜோலாங் இன மக்கள், கிரண் ரிஜிஜூவை தடபுடலாக வரவேற்றுள்ளனர்.. டான்ஸ் ஆடி, பாட்டு பாடி வரவேற்கவும், அமைச்சருக்கும் உணர்ச்சிவசப்பட்டு விட்டார்.. அவரும் அவர்களுடன் சேர்ந்து நாட்டுப்புறப் பாடல்களுக்கு டான்ஸ் ஆடினார்.. அமைச்சர் தங்களின் நடனத்தை ஆடியதுமே, அந்த மக்கள் கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர்.

கிராமம்
இந்த டான்ஸ் இணையத்தில் வெளியாகி பெரும் வைரலானது.. பிரதமர் மோடியும் இந்த டான்ஸை பாராட்டி இருந்தார்.. "நமது சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு நல்ல ஒரு டான்ஸர்.. அருணாச்சல பிரதேசத்தின் துடிப்பான மற்றும் புகழ்பெற்ற கலாச்சாரத்தை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது" என்று பதிவிட்டிருந்தார்... அதேபோல, தற்போதும் மக்களுக்கு உபயோகமான ஒரு விஷயத்தை அமைச்சர் சொல்லி உள்ளார்.

அருணாசல பிரதேசம்
அதாவது கிவி பழங்கள் அதிகமாக விளைவிக்கும் பகுதியாக வடகிழக்கு மாநிலங்கள் உள்ளன.. குறிப்பாக அருணாசல பிரதேசத்தில் இந்த பழம் அதிகமாக விளைகிறது.. இமாலய தட்பவெட்ப சூழ்நிலை கிவி உற்பத்திக்கு ஏற்ற வகையில் உள்ளது.. அதனால் அதிக விளைச்சல் தந்து கொண்டிருக்கிறது.. இந்த கிவி பழ உற்பத்தியை இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு விரிவுபடுத்த மத்திய அரசும் முயன்று வருகிறது.

சான்று
அந்த வகையில், நேற்று நடந்த விழாவில், "அருணாச்சல பிரதேசத்தில் இருந்து சான்றளிக்கப்பட்ட கிவி பழ ஆர்கானிக்கை டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்டது எனக்கு ஒரு சிறந்த தருணம்... அருணாச்சல பிரதேசத்தின் உயர்தர புதிய கிவி பழங்கள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் தனிநபர்களுக்கு வழங்குவதற்காக கிடைக்கின்றன" என்று கிவி பழத்தின் பெருமைகளை பேசியிருந்தார்.. அது தொடர்பாகவும் ஒரு ட்வீட் பதிவிட்டிருந்தார் சட்டத்துறை அமைச்சர்.

டிப்ஸ்
இந்த ட்வீட்டைதான் பாஜகவின் குஷ்பு ரீட்விட் செய்துள்ளார்.. அத்துடன் கிவி பழம் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகளை பற்றி சில டிப்ஸ்களையும் தந்திருக்கிறார்.. "கிவி.. உங்கள் ரத்த அழுத்தத்தை குறைக்கும் சிறந்த பழங்களில் ஒன்று.. வைட்டமின் சி அதிகம் நிறைந்திருக்கும் பழம்.. இதை வரவேற்று, நல்ல ஆரோக்கியத்திற்கு முன்மாதிரியாக அமைந்ததற்கு நன்றி சார்" என்று குஷ்பு அமைச்சருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
“அண்ணாமலைக்கும், அவர் பின்னால் போன ஆட்டு மந்தைக்கும் பாஜகவின் கொள்கை புரியவில்லை” - வேலூர் இப்ராஹிம் -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
தமாகாவை கரைத்த பாஜக.. என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? ஜிகே வாசன் முடிவில் பின்னணி -
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட்












Click it and Unblock the Notifications