மின் வாரிய கடனை மக்கள் தலையில் சுமக்க வைக்க முடியாது! படபடக்கும் கொங்கு ஈஸ்வரன்!
சென்னை: மின் வாரிய கடனை மின் நுகர்வோர் தலையில் சுமக்க வைக்க முடியாது என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மின் கட்டண உயர்வு என்பது தவிர்க்க முடியாதது என்று உணர்ந்தாலும் பரிந்துரைக்கப்பட்ட கட்டணங்கள் மிக அதிகமாக இருப்பதால் அது குறைக்கப்பட வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

மின் கட்டணம்
சிறு, குறு தொழில்களுக்கான நிலை கட்டண உயர்வு தொழில்களுக்கு சிரமத்தை உண்டாக்கி அதிகப்படியான விலை ஏற்றத்தையும், வேலை இழப்புகளை உருவாக்கும். தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கான பரிந்துரைகளை அறிவித்து மின்சார வாரியம் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டுக் கொண்டிருக்கிறது. பொதுமக்கள் மத்தியில் எதிர் கருத்துக்களை கண்கூடாக பார்க்க முடிகிறது.

தவிர்க்க முடியாதது
மின் கட்டண உயர்வு என்பது தவிர்க்க முடியாதது என்று உணர்ந்தாலும் பரிந்துரைக்கப்பட்ட கட்டணங்கள் மிக அதிகமாக இருப்பது குறைக்கப்பட வேண்டும். வீட்டு இணைப்புகளுக்கான நிரந்தர கட்டணம் மிக அதிகமாக உயர்த்தப்பட்டிருப்பது குறைக்கப்பட வேண்டும். அளவுக்கு அதிகமாக உயர்த்த பரிந்துரைக்கப்பட்டிருக்கின்ற தொழிற்சாலைக்கான நிலை கட்டணம் கண்டிப்பாக மறுபரிசீலினை செய்யப்பட்டு குறைக்கப்பட வேண்டும்.

வேலை இழப்பு
சாத்தியமே இல்லாத நிலை கட்டண உயர்வை தாங்க முடியாது என்பதை தமிழகம் முழுவதும் இருக்கின்ற தொழில் துறையினர் தமிழக மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்திற்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். பரிந்துரைக்கப்பட்ட நிலை கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டால் பல சிறு, குறு தொழிற்சாலைகள் இயங்காத நிலை ஏற்பட்டு லட்சக்கணக்கான வேலை இழப்புகளும், அதனால் உற்பத்தி பாதிப்புகளும், விலையேற்றத்தையும் ஏற்படுத்தும்.

மொத்த கடன்
மின்வாரியத்தினுடைய மொத்த கடனையும் மின் நுகர்வோர் தலையில் சுமக்க வைக்க முடியாது. அதை தாங்க கூடிய நிலையில் சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகள் இன்று இல்லை. கொரானா காலகட்டத்துக்கு பின்னர் சிறிது சிறிதாக தொழில் துறை முன்னேறி வரும் நிலையில் இந்த விலையேற்றம் அவர்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்.

பாதிப்பு ஏற்படாமல்
தமிழக மின்வாரியத்திற்கு வருமானத்தை அதிகரிக்க வேண்டிய தேவை இருந்தாலும் அதை கட்டணமாக கட்ட வேண்டிய மக்களினுடைய நிலைமையையும் கவனத்தில் கொண்டு கட்டண உயர்வு பரிந்துரையை மறுபரிசீலனை செய்து அனைத்து கட்டண உயர்வுகளையும் குறைக்க வேண்டும். குறிப்பாக தொழிற்சாலைகளுக்கான நிலை கட்டண உயர்வை அதிகபட்சமாக ஒரு கிலோ வாட்டுக்கு 100 ரூபாய்க்கு மேல் போகாத படியும் நடுத்தர மக்களுக்கும் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications