கனிமொழி பேச்சு மேடையோடு ஓவர்.. "காவியை" பார்த்து திமுகவிற்கு பயம்..! "மாம்பலம்" உமா ஆனந்தன் பரபர
மாம்பல உமா ஆனந்தன் திமுகவையும், முதல்வர் ஸ்டாலினையும் சரமாரியாக விமர்சித்து பேசினார்
சென்னை: எச்.ராஜாவும், அண்ணாமலையும் இத்தனை நாள் கேள்வி கேட்கிறாங்களே, எதுக்காவது இதுவரை பதில் வந்திருக்கா? இதுதான் திராவிட மாடல்" என்று பாஜகவின் உமா ஆனந்தன் சரமாரி திமுக அரசை விமர்சித்துள்ளார்.
இன்றைய தினம் திமுகவை கண்டித்து, தமிழக பாஜக உண்ணாவிரத ஆர்ப்பாட்டத்தை தமிழகம் முழுவதும் தொடங்கி உள்ளது.
சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில், மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.. இதில், பாஜக தலைவர்கள் உட்பட பலரும் பங்கேற்றுள்ளனர்.. அந்த வகையில், உமாஆனந்தனும் பங்கேற்று பேசினார்.. இந்த உமா ஆனந்தன் யார் தெரியுமா?

மாம்பலம்
21 வருடங்களுக்கு பிறகு சென்னை மாநகராட்சியில் மீண்டும் பாஜக தடம் பதித்தபோது, மாம்பலம் பகுதியில் வென்றவர்.. அவருக்கான சமுதாய வாக்குகள் கைகொடுத்ததே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது.. ஆனால் அந்த தொகுதியை திமுக காங்கிரசுக்கு ஒதுக்கியிருக்க கூடாது என்றம், திமுகவே நேரடியாகவே போட்டியிட்டிருந்தால், நிச்சயம் வெற்றி பெற்றிருக்கலாம் என்றும் முணுமுணுப்புகள் அப்போதே கிளம்பின. ஒருவேளை பாஜகவின் வெற்றிக்காக, காங்கிரஸ் தரப்பு விட்டுக் கொடுத்துவிட்டதா? என்ற சந்தேகத்தையும் இந்த வெற்றி எழுப்பியதை மறுக்க முடியாது. அங்கு வெற்றி பெற்ற மாம்பல உமா ஆனந்தன் இன்று ஆர்ப்பாட்டத்தில் பேசியதாவது:

கோடம்பாக்கம்
"1967-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தபோது, நான் 7-ம் கிளாஸ் படித்து கொண்டிருந்தேன்.. அப்போது ஊர்வலம் நடந்தது.. கோடம்பாக்கத்தில் அம்பேத்கர் சிலை இருக்கே, அங்கேதான் அந்த ஊர்வலம் முடிந்தது.. அப்போது, அவங்க மீட்டிங்கை முதல்முறையாக கேட்டேன்.. அவர்களின் அடுக்கு மொழி பேச்சை கேட்டேன்.. நீங்க பார்த்தீங்கன்னா, அப்போதிருந்து இப்போது வரை, திமுகவின் அஸ்திவாரமே அவர்களின் அடுக்குமொழியும், பொய்யும்தான்..

டிஸ்கோ சாந்தி
சினிமாவுக்கு வசனம் எழுதி, அந்த வசனத்தை மக்களிடம் கொண்டு சென்று ஆட்சிக்கு வந்தார்கள்.. பிராக்டிகலா எதுவுமே யோசிக்கிறது இல்லை... அன்றைக்கு அந்த ஊர்வலத்தில் முதலில் வந்தவர் யார் என்றால், நடிகர் ஆனந்தன்.. டிஸ்கோ சாந்தியின் அப்பா.. அடுத்து இலட்சிய நடிகர் எஸ்எஸ்ஆர்.. இவங்க தான் ஊர்வலத்தில் முன்னாடி போனாங்க. அடுக்குமொழி தமிழ் பேசியே ஊர்வலத்தில் சென்றார்கள்..

அடைமொழி
இதெல்லாம் நான் ஏன் சொல்கிறேன் என்றால், உண்மையான சரித்திரத்தை நீங்கள் அறிய வேண்டும்.. இவர்களை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.. இன்னொன்றையும் சொல்லணும்.. இவர்கள் தங்களுக்கு தாங்களே வைத்து கொள்ளும் அடைமொழிகூட பொருத்தமில்லாததுதான்.. அறிஞர் அண்ணா.. அவர் எழுதியது பார்த்தீங்கன்னா, ஓர் இரவு, வேலைக்காரி.. இப்படித்தான்.. அதே போல தந்தை பெரியார்.. அவருக்கு ஏன் தந்தை என்று பட்டப்பெயர் தந்தார்கள் என்று சொல்வதற்கு அவர்களுக்கு எந்தவித முகாந்திரமும் கிடையாது..

பேராசிரியர் அன்பழகன்
அதேமாதிரி பேராசிரியர் அன்பழகன்.. இப்படி சொல்லிட்டே போகலாம்.. அன்றைய தினம், இந்த திகவும், திமுகவும் ஒருவரையொருவர் வசை பாடியதை காது கொடுத்து கேட்க முடியாது.. நாமெல்லாம் எங்காவது முக்காடு போட்டுக்கிட்டுதான் ஒரு ஓரமாக போய் உட்கார்ந்துடணும்.. அரசியலில் அநாகரீகத்தை கொண்டு வந்தவர்களே திராவிட கட்சிக்காரர்கள்தான்.. இதோ இந்த வள்ளுவர் கோட்டத்தை, கலைஞர் கட்டினார் என்று சொல்கிறார்கள்.. கலைஞர் எந்த காலேஜில், எங்கே இன்ஜினியரிங் படித்து, இந்த வள்ளுவர் கோட்டத்தை கட்டினார் என்று தெரியவில்லை..

ஜெலூசில்
முரண்பாடுகளின் மொத்த அம்சமே இந்த திமுகதான்.. காவி என்று யாரை பார்த்து ஏளனம், நையாண்டி செய்கிறார்களோ, இந்த காவிகளின் வளர்ச்சி அவர்களின் கனவுகளுக்கு முட்டுக்கட்டையை போட்டுவிட்டது.. இன்று காவியை பார்த்து பயப்படுகிறார்கள்.. திமுக மிரண்டு போகும் அளவுக்கு வளர்ந்திருக்கிறோம்.. திமுககாரங்க ஜெலூசிலை தினமும் கரைச்சு குடிச்சால்தான் நிவாரணம்.. அதுகூட முழுமையான நிவாரணம் கிடையாது..

கனிமொழி
நம்ம வளரல என்று சொல்வதெல்லாம், அவர்களே அவர்களை ஏமாற்றி கொள்வதுதான்.. கனிமொழி எனக்கு ஃபிரண்டுதான்.. 40 ஆண்டு கால குடும்ப நண்பர்.. ஒவ்வொரு முறை தேர்தலின்போது, தாய்மார்களின் கண்ணீரை துடைக்க வேண்டும் என்று சொல்வார்.. ஆனால், அந்த பேச்செல்லாம் மேடையோடு சரி.. பள்ளிக்கூடம் கட்டித்தரும் அரசு, ஆஸ்பத்திரி கட்டித்தரும் சரி, இன்றைக்கு சாராயத்தை விற்கிறது.. எச்.ராஜாவும், அண்ணாமலையும் இத்தனை நாள் கேள்வி கேட்கிறாங்களே, எதுக்காவது இதுவரை பதில் வந்திருக்கா? இதுதான் திராவிட மாடல்" என்றார்.












Click it and Unblock the Notifications