Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லுங்கி யாருடையது.. குலைநடுங்கும் கொடநாடு.. விஸ்வரூபமெடுக்கும் சிசிடிவி தினேஷ் மரணம்.. மறுவிசாரணை மனு

கொடநாடு தினேஷ் தற்கொலை வழக்கை மீண்டும் போலீஸ் விசாரிக்க போகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் சிசிடிவி ஆபரேட்டர் தினேஷ் குமார் தற்கொலை குறித்து மறுவிசாரணைக்கு அனுமதி கோரி கோத்தகிரி வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த ஏப்ரல் மாதம் 23-ந்தேதி கொலை, கொள்ளை நடந்தது.

அப்போது அங்கிருந்த காவலாளியை கொன்று விட்டு 10 பேர் தப்பிசென்றுவிட்டனர். எப்போதும் பாதுகாப்பு நிறைந்து காணப்படும் கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கொலை- கொள்ளை நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது...

தனிப்படை

தனிப்படை

இதையடுத்து, நீலகிரி மாவட்ட தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இறுதியில், முக்கிய குற்றவாளியான சயன் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்... இவர்களிடமும் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இதில் சம்பவம் நடந்தபோது, கொடநாடு பங்களாவில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் அணைக்கப்பட்டிருந்தது பெருத்த சந்தேகத்தை ஏற்கனவே கிளப்பியிருந்தது..

மாவட்டம்

மாவட்டம்

கொடநாடு சாதாரணமாக நுழையும் பகுதி கிடையாது, அதாவது தடையில்லா மின்சாரத்துக்கு பெரிய அமைப்பே இங்குள்ளது.. மொத்த நீலகிரி மாவட்டத்துக்கு கரண்ட் இல்லை என்றாலும், இந்த கொடநாடு பகுதிக்கு மட்டும் கரண்ட் எந்நேரமும் இருந்து கொண்டே இருக்கும்..

தினேஷ்குமார்

தினேஷ்குமார்

ஆனால், அன்றைய தினம் கரண்ட் கட் ஆகி உள்ளது.. அதேபோல, அந்த குறிப்பிட்ட நேரத்தில் சிசிடிவி கேமராக்களும் அணைக்கப்பட்டிருந்தன.. இந்த அனைத்து சிசிடிவி கேமராக்களின் ஒரே ஆபரேட்டர்தான் தினேஷ் என்பவர்.. ஆனால், அடுத்த சில தினங்களில் தினேஷ்குமார் லுங்கியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்... இவர் தூக்கில் தொங்கியது அவரது லுங்கியே இல்லை என்றும், அப்படி ஒரு லுங்கி தன் வீட்டில் யாருமே பயன்படுத்தியது இல்லை என்றும் தினேஷ் சகோதரி தெரிவித்திருந்தார்.

தற்கொலை

தற்கொலை

அப்படியானால் அந்த லுங்கி யாருடையது, சிசிடிவி ஆபரேட்டராக அனைத்து உண்மைகளையும் அறிந்தவர் தற்கொலை செய்தது ஏன்? கொள்ளை நடந்த அன்று சிசிடிவி எதுவும் வேலை செய்யாத மர்மம் என்ன? என்பதுதான் பெருத்த சந்தேகமாக எழுந்தது.. ஆனால், சிசிடிவி கேமரா குறித்து தகவல் அறிந்த தினேஷ் தற்கொலை செய்து கொண்டதாக அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

மனு

மனு

இந்நிலையில், தினேஷ் தற்கொலையில் பல்வேறு சந்தேகம் உள்ளதாகவும், அதை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றும் நீலகிரி மாவட்ட காவல்துறை முடிவு செய்துள்ளது.. அதன்படி, கோத்தகிரி ஆய்வாளர் வேல்முருகன் என்பவர், இன்று கோத்தகிரி தாசில்தாருக்கு மனு ஒன்றை அளித்துள்ளார்..

தற்கொலை

தற்கொலை

அந்த மனுவில், "தினேஷ் தற்கொலையில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக கருதுவதாகவும், எனவே, அவருடைய தற்கொலை வழக்கில் உள்ள சாட்சிகளிடம் விசாரணை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறியுள்ளார். இந்த மனுவுக்கு இன்று மாலைக்குள் அனுமதி வழங்கப்பட்டுவிடும் என்றும், நாளை முதல் தினேஷ் தற்கொலை விசாரணை சூடு பிடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

போலீசார்

போலீசார்

அதாவது, கொடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை சம்பவம் நடந்த போது சிசிடிவி காட்சிகள் ஏன் பதிவாகவில்லை? கொடநாட்டில் 27 சிசிடிவி கேமராக்கள் இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில், அங்கு சிசிடிவி கேமராக்களே இல்லை என போலீசார் தெரிவித்தது ஏன் என்பது உள்ளிட்டவை விடை கிடைக்காத சந்தேகங்களாக உள்ள நிலையில், தினேஷ்குமார் தற்கொலை செய்து கொண்டது எதனால், தற்கொலைக்கு தூண்டப்பட்டாரா என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+