கோடநாடு வழக்கு.. சிபிசிஐடி போலீசாரிடம் சொன்னது என்ன? கனகராஜ் சகோதரர் தனபால் பரபர பேட்டி
சென்னை: கோட நாடு கொலை கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மறைந்த கார் டிரைவர் கனகராஜ்ஜின் சகோதரர் தனபாலிடம் சிபிசிஐடி போலீசார் இன்று விசாரணை மேற்கொண்டனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி கொலை, கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. மேலும் அங்கிருந்த முக்கிய ஆவணங்களும், பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டன. இதுமட்டுமின்றி அப்போது பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் கார் ஓட்டுநர் கனகராஜ் சாலை விபத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.

இதேபோல் கோடநாடு எஸ்டேட்டில் சிசிடிவி கேமராவை கண்காணித்து வந்த ஆபரேட்டர் தினேஷ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இப்படி கோடநாடு வழக்கோடு சம்பந்தப்பட்டவர்களில் அடுத்தடுத்து மர்ம மரணங்கள் நிகழ்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. கோடநாடு கொலை கொள்ளை குறித்து நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 6 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் சில ஆவணங்களை அழித்ததாக கனகராஜின் அண்ணன் தனபால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து ஜாமீனில் வெளி வந்த தனபால், அண்மையில் சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது "என்னை சந்தித்தபோது கனகராஜ் 5 பெரிய பைகளை வைத்திருந்தார்.
எடப்பாடி பழனிசாமி கூறியதன் பேரில்தான் 5 பைகளை எடுத்து வந்ததாக கனகராஜ் என்னிடம் தெரிவித்தார்" என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும் கோடநாடு வழக்கில் எடப்பாடியை விசாரிக்க வேண்டும் என்றும் கூறினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோடநாடு வழக்கில் ஏற்கனவே 11-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருக்கும் தனபால் முன்வைத்த இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தான், தனபாலிடம் மீண்டும் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று உதகை நீதிமன்றத்தில் சிபிசிஐடி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு உதகை நீதிமன்றமும் அனுமதி வழங்கியது. இதன்படி, சிபிசிஐடி போலீசார், தனபாலுக்கு சம்மன் அனுப்பி இன்று விசாரணை மேற்கொண்டனர். கோவை காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் சுமார் 8 மணி நேரம் தனபாலிடம் விசாரணை நடைபெற்றது.
இந்த விசாரணைக்கு ஆஜராகிவிட்டு வெளியே வந்த தனபால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- கோடநாடு வழக்கு தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் நடத்திய விசரணை நிறைவாக இருந்தது. வாக்கு மூலம் எழுத்துப்பூர்வமாகவும் வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டது. சந்தேகப்படும் நபர்களின் பெயர் பட்டியலை சிபிசிஐடியிடம் வழங்கியுள்ளேன்" என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications