எடப்பாடிக்கு பிரஷர் தர்றாங்க.. கொடநாடு பற்றி இவ்வளவு அவசரமா திமுக பேசணுமா? ஜெயக்குமார் காட்டம்
: கொடநாடு விவகாரம் குறித்து ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்
சென்னை: சட்டமன்றத்தில் விவாதிக்க எத்தனையோ விஷயங்கள் இருக்கும்போது, இப்போ இந்த கொடநாடு விவகாரம் அத்தனை அவசரமா? என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்த முறை சட்டப்பேரவை நிகழ்வுகளில் அதிமுக தரப்பு அவ்வளவாக பங்கேற்கவில்லை.. திமுக மிக முக்கிய அறிவிப்புகளை, திட்டங்களை இந்த முறை பட்ஜெட்டில் கொண்டு வந்தாலும்கூட, அதை எதிர்த்து அவையில் கூச்சல் குழப்பம் எழுப்ப வேண்டும் என்று ஏற்கனவே அதிமுக தரப்பு முடிவு செய்திருந்ததாக தகவல்கள் வந்தன.
ஆனால், எதிர்பார்க்காமல் கொடநாடு விவகாரத்தை முதல்வர்ஸ்டாலின் கையில் எடுக்கவும், அதிமுக மேலிடம் அரண்டு போய் உள்ளது.. குறிப்பாக எடப்பாடி பழனிசாமி கதிகலங்கி உள்ளார்..

கூச்சல் குழப்பம்
அவையிலேயே கூச்சல் குழப்பம் நடத்தினர்.. வெளிநடப்பு செய்தனர்.. தர்ணா செய்தனர்.. ஆவேசமாக பேட்டி தந்தனர்.. ஆளுநரை ஓடிப்போய் பார்த்தனர். இப்படி தினம் தினம் அதிமுக தரப்பு தன்னுடைய பதற்றத்தையும், படபடப்பையும் வெளிப்படுத்தி கொண்டிருக்கிறது. எனவே, இன்றைய சட்டப்பேரவை கூட்டத்திலும் பங்கேற்கவில்லை..

ஆலோசனை கூட்டம்
மாறாக, அதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி பழனிச்சாமி சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்... கோடநாடு விவகாரம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர மனு தரப்பட்டுள்ள நிலையில் இந்த ஆலோசனை நடந்து வருகிறது. தன்னுடைய எதிர்க்கட்சி தலைவர் அறையிலேயே இந்த ஆலோசனையை நடத்தி கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி..

கவன ஈர்ப்பு தீர்மானம்
காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வபெருந்தகை கோடநாடு பற்றி விவாதிக்க கவன ஈர்ப்பு தீர்மான மனு அளித்துள்ள நிலையில், அதிமுகவின் இன்றைய ஆலோசனை கூட்டம் முக்கிய கவனத்தை பெற்று வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டியில் அவர் சொன்னதாவது:

செல்வப்பெருந்தகை
காங்கிரஸ் உறுப்பினர் செல்வப்பெருந்தகை கொடநாடு விவகாரம் குறித்தும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவருவதாக சொல்லி இருக்கிறார்.. சட்டமன்றத்தில் விவாதிக்க எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன.. ஆனால் இந்த கொடநாடு விவகாரம் அத்தனை அவசரமா என்ன? குடிநீர் பிரச்சனை, மக்கள் பிரச்னை, இயற்கை பேரிடர்கள் குறித்து எல்லாம் அவசர பிரச்னையாக சட்டமன்றத்தில் பேசுவார்கள், சட்டமன்ற மரபுகளை மீறி செல்வப்பெருந்தகை கொடநாடு குறித்து பேசப்போகிறார்...

நிலுவை வழக்கு
கோர்ட்டில் நிலுவையில் இருக்கும் வழக்கு குறித்து விதி எண் 55-ல் சட்டமன்றத்தில் விவாதிப்பது மரபை மீறிய செயல்.. நிலுவையில் இருக்கும் வழக்கு குறித்து சட்டமன்றத்தில், இதுக்கு முன்பு, எந்த காலத்திலும் யாருமே விவாதித்ததும் கிடையாது.. இது ஜனநாயக மரபுகளுக்கு எதிரானது... உரிமை மீறும் செயலாகும்..
Recommended Video

எடப்பாடி பழனிசாமி
கொடநாடு விவகாரம் குறித்து பேசி, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மன ரீதியான அழுத்தத்தை கொடுத்து சுதந்திரமாக அதிமுகவினர் சட்டமன்றத்தில் பேசவிடாமல் செய்ய உரிமை மீறல் நடக்கிறது.. கொடநாடு விவகாரம் சட்டமன்றத்தில் பேசினால் கோர்ட் விசாரணை திசை திரும்பிவிடும்... ஆனால், அதிமுக யாருக்கும் எதுக்குமே பயப்படவில்லை... நீதிமன்றத்தின் அதிகாரத்தை சட்டமன்றம் எடுத்துக்கொள்ள முடியுமா? ஜனநாயக மரபுகளை திமுக அரசு கட்டிக்காக்கும் என நம்புறேன்" என்றார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
திமுக தோல்வி.. "எல்லார் மீதும் தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுப்பது?" வைரமுத்து சொன்ன காரணம்! -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
பாரதிராஜா முகத்தை பார்த்ததும் உடைந்து போன முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின்.. உருக்கமான பதிவு -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு!












Click it and Unblock the Notifications