கொடநாடு வழக்கு.. எங்கள் மடியில் கனமில்லை.. சிபிஐ விசாரணை தேவை என்கிறார் எடப்பாடி பழனிச்சாமி
சென்னை: கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் என்ன ஃபைல்ஸ் வேண்டுமானலும் வெளியிடட்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். எங்கள் மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை என்று தெரிவித்துள்ள எடப்பாடி பழனிச்சாமி, சிபிஐ விசாரிக்க வேண்டும் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த 2017ஆம் ஆண்டு கொடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை காலை சுற்றிய பாம்பாக எடப்பாடி பழனிச்சாமியை சுற்றி வருகிறது.

அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி இன்று மதுரைக்கு வருகை புரிந்துள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக எடப்பாடி பழனிசாமி கோயிலுக்கு சென்றார். அப்போது அவரை வரவேற்ற முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு எடப்பாடி பழனிசாமியின் காலில் விழுந்து வணங்கி வரவேற்றார்.
இதை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் , ராஜன் செல்லப்பா ஆகியோரும் எடப்பாடி பழனிசாமிக்கு சால்வை போர்த்தி மரியாதை செய்தனர். இதனிடையே எடப்பாடி பழனிசாமி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, கொடநாடு வழக்கில் என்னைச் சம்பந்தப்படுத்தி பேசுவது தவறான விஷயம் என்று கூறினார்.
நாட்டில் எத்தனையோ சம்பவங்கள் நடைபெறும் போது இதை மையமாக வைத்து ஏன் பேசுகின்றனர்? என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிச்சாமி, அவதூறு செய்தியை பரப்புவதாக கூறினார். ஏற்கனவே அவதூறு செய்தியை பரப்பியவர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இது பற்றி நான் சட்டசபையிலும் பேசியுள்ளேன். கொடநாடு கொள்ளை சம்பவம் நடந்த போது அதை விசாரித்து குற்றவாளிகளை சிறையில் அடைத்தது அதிமுக அரசுதான். வழக்கு நடைபெற்றது அதிமுக ஆட்சி காலத்தில்தான். அப்போது குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆஜரானது திமுகவினர்தான்.
இந்த குற்றவாளிகளுக்கு ஜாமீன்தாரராக இருந்தது திமுகவினர். இதை ஏன் சிபிஐ விசாரிக்கக் கூடாது. இந்த வழக்கினை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும். கொலை குற்றவாளிகள் ஏற்கனவே கேரளாவில் கொடுங்குற்றங்கள் புரிந்துள்ளனர். பல குற்றங்களை செய்தவர்களுக்கு திமுகவினர் ஆதரவாக வாதாடியதற்கு என்ன காரணம். திமுகவினர் ஜாமீன்தாரர்களாக இருப்பதற்கு என்ன தொடர்பு உள்ளது. 15 மாத காலம் கொரோனா காலத்தில் நீதிமன்றம் செயல்படாமல் போனதே கால தாமதத்திற்குக் காரணம் என்றும் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.
90 சதவிகிதம் வழக்கு நிறைவடைந்த நிலையில் மீண்டும் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது ஏன்? எங்கள் மீது எந்த குற்றமும் சுமத்த முடியாத நிலையில் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அவதூறு பரப்புகின்றனர். ஓர் ஆட்சி இருக்கும்போது, பல்வேறு சம்பவங்கள் நடைபெறும். அந்தச் சம்பவத்தை சட்டரீதியாக அரசு அணுகி நடவடிக்கை எடுத்திருக்கிறது. வேண்டுமென்றே இன்றைய ஆட்சியாளர்கள் திரித்து அவர்களுக்குச் சாதகமாக சூழ்ச்சி செய்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது. அ.தி.மு.க சட்டத்தின் ஆட்சி நடத்தியது. அதை உணர்ந்துகொள்ள வேண்டும். உங்களுக்கு சந்தேகம் இருந்தால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுங்கள் என்றும் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த கனகராஜ் ஆத்தூர் அருகே மர்மமான விபத்தில் உயிரிழந்தார். இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக கருதப்பட்ட கனகராஜ் மர்மமான முறையில் உயிரிழந்ததால், வழக்கு அடுத்தகட்டத்துக்குச் செல்லமுடியவில்லை. இந்த நிலையில் கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் ஆவணங்களை அழித்ததாக, கனகராஜின் அண்ணன் தனபால் கைதுசெய்யப்பட்டு, ஜாமீனில் இருந்தார். ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் தனபால், நிலமோசடி வழக்கு ஒன்றில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கைதுசெய்யப்பட்டார். சேலம் மத்திய சிறையில் இருந்த அவருக்கு, நெஞ்சுவலி ஏற்படவே, கோவை அரசு மருத்துவமனையில் ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் ஜாமீனில் வெளியே வந்த தனபால், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு குறித்து திடீரென பேட்டி கொடுத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரோ, "கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்று கேட்கும் நாங்கள் எதற்கு பயப்படப்போகிறோம். கனகராஜின் சகோதரர் யாரோட தூண்டுதலிலோ இப்படிப் பேசி வருகிறார் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி கொடநாடு வழக்கு பற்றி பேசினால் பதற்றம் அடைவதாக முரசொலி தலையங்கம் விமர்சித்துள்ள நிலையில், சிபிஐ விசாரணை தேவை என்ற கோரிக்கை வைத்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.
அதிமுகவினர் ஊழல் பற்றி ஃபைல்ஸ் வெளியாகும் என்று பாஜகவினர் கூறி வருவதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, எங்கள் மடியில் கனமில்லை வழியில் பயமில்லை என்று கூறினார் எடப்பாடி பழனிச்சாமி. எத்தனை ஃபைல்ஸ் வெளியிட்டாலும் அதை பயமின்றி எதிர்கொள்வோம் என்றும் கூறியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications