1500 பேஜ்.. சீல் வைத்த "ரிப்போர்ட்".. போகஸ் முழுக்க எடப்பாடி மீதுதான்.. சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்!
சென்னை: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் முக்கிய திருப்பமாக இன்று விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. தனிப்பட்ட நீண்ட காலம் விசாரணை நடத்தி வந்த நிலையில் இது தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
கோடநாடு கொள்ளை மற்றும் கொலை வழக்கு விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. இந்த வழக்கு சிபிசிஐடி கைக்கு சென்றுள்ள நிலையில் வழக்கு விசாரணை கோணம் அப்படியே மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதா மரணத்திற்கு பின் கடந்த 2017 ஏப்ரல் 24ல் கோடநாட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தில் பல பொருட்கள், கோப்புகள் கொள்ளை அடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதில் எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் என்பவரும் கொள்ளையர்களால் கொல்லப்பட்டார்.

மரணம்
இந்த எஸ்டேட்டில் இருக்கும் சில முக்கியமான கோப்புகள் அப்போதே காணாமல் போனதாக தகவல்கள் வந்தன. இந்த கோப்புகளை திருடத்தான் அங்கு கொலை நடந்தேறியதாகவும் கூறப்பட்டன. அதன்பின் கொள்ளையில் குற்றஞ்சாட்டப்பட்ட பலர் அடுத்தடுத்து மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். இந்த கோடநாடு மர்ம மரணங்கள் மற்றும் கொள்ளை பற்றி தமிழ்நாடு போலீஸ் 5 தனிப்படை அமைத்து விசாரித்து வந்தது. இதன் ஒரு கட்டமாக சமீபத்தில் சசிகலாவிடம் அவரின் தி நகர் வீட்டில் வைத்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்

விசாரணை
இதில் 5 தனிப்படை போலீசார் வெவ்வேறு இடங்களில் விசாரணை நடத்தி வந்தனர். கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கூட போலீசார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் தொடர்புடைய பலர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டனர். இந்த கொள்ளை மற்றும் கொலை சம்பவத்திற்கு பின் சரியாக 4 நாட்கள் கழித்து கொள்ளையில் ஈடுப்பட்ட கனகராஜ் விபத்து ஒன்றில் மர்மமாக மரணம் அடைந்தார். இவர் ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர். அதேபோல் இன்னொரு முக்கிய குற்றவாளி சயான் குடும்பத்தினர் விபத்தில் கொல்லப்பட்டனர். இதில் சயான் நூலிழையில் உயிர் தப்பினார்.

விசாரணை
இந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கு சினிமாவில் காட்டப்படுவது போல பல திருப்பங்களுடனும், புதிர்களுடனும் நகர்ந்து செல்கிறது. 5 தனிப்படை போலீசார் இந்த வழக்கை விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் சயான் நேரடியாக எடப்பாடி பழனிசாமி மீதே குற்றஞ்சாட்டி இருக்கிறார். எடப்பாடி பழனிசாமியை நோக்கி இவர் தனது கையை திருப்பி உள்ளார். எடப்பாடி பழனிச்சாமி சொல்லித்தான் கனகராஜ் இந்த திட்டங்களை தீட்டியதாக சயான் போலீசில் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. இப்படி வழக்கில் போகஸ் எடப்பாடி பக்கம் திரும்பி உள்ளது. இந்த நிலையில்தான் வழக்கு தற்போது சிபிசிஐடி வசம் சென்றுள்ளது.

ரிப்போர்ட்
இதையடுத்து இந்த வழக்கை விசாரித்து வந்த தனிப்படை போலீசார் அது தொடர்பாக ரிப்போர்ட் ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். 1500 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை ரிப்போர்ட்டாக தாக்கல் செய்துள்ளனர். மூடி முத்திரையிடப்பட்ட, சீல் செய்யப்பட்ட கவரில் போலீசார் அறிக்கையை இன்று கோர்டில் சமர்ப்பித்தனர். உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் உள்ள இந்த அறிக்கையை இனி சிபிசிஐடி போலீசார் பெற்று மேற்கொண்டு விசாரணை செய்வர். இந்த வழக்கில் திடீரென விசாரணை சிபிசிஐடி கைக்கு விசாரணை சென்றுள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் இதில் தீவிரம் காட்டுகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications