Seeman Vs Periyar: பெரியாரிஸ்டுகள் மீது வெடிகுண்டு வீச்சு பேச்சு- சீமான் மீது போலீசில் திவிக புகார்!
சென்னை: தந்தை பெரியார் தொண்டர்கள் மீது வெடிகுண்டுகளை வீசுவேன் என பகிரங்கமாக பொதுமேடையில் பேசுகையில் கொலை மிரட்டல் விடுத்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஈரோடு போலீசில் திராவிடர் விடுதலை கழகத்தினர் புகார் அளித்துள்ளனர். தம்மை நோக்கி பெரியாரின் வெங்காயத்தை வீசினால் பிரபாகரன் தந்த வெடிகுண்டுகளை பெரியார் தொண்டர்கள் மீது வீசுவேன் என பேசியிருந்தார் சீமான்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து தந்தை பெரியாரை இழிவுபடுத்தி பேசி வருகிறார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் நேற்று முன்தினம் பேசிய சீமான், பிரபாகரனிடன் பெரியார் தொண்டர்கள் போகாதீர்கள்.. நீங்கள் வைத்திருப்பது வெறும் பெரியார் எனும் வெங்காயம்.. என் தலைவன் பிரபாகரன் கையில் வைத்திருப்பது வெடிகுண்டு.

நீ பெரியாரின் வெங்காயத்தை என் மீது வீசு.. நான் உன் மீது பிரபாகரன் தந்த வெடிகுண்டை வீசுகிறேன்.. என்ன நடக்கிறது என பார்.... ஏய்.. வெச்சிருக்கேன்.. இன்னும் வீசவில்லை.. வெடிகுண்டுகளை வீசினேன் என்றால் என்ன ஆவாய் என பார்த்துக் கொள்.. உன்னை புதைச்ச இடத்தில் புல் கூட முளைக்காது.. Be Carefull.. சேட்டையை வேறு எங்காவது வைத்துக் கொள்..
திராவிட குப்பைகளை உரமாக்கி தமிழ்த் தேசியத்தை வளர்க்க வந்த பிள்ளைகள் நாங்கள். பெரியார் ஆரிய அடிமை; ஆரிய கூட்டாளி மட்டுமல்ல. ஆங்கிலேய அடிமையனாகவும் வாழ்ந்திருக்கிறார். பெரியார் எந்த மதத்துக்கு எதிரான குறியீடு? என பேசியிருந்தார்.
28.1.25 அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில்,
— DVK Periyar திவிக (@dvkperiyar) January 29, 2025
"வெடிகுண்டு வீசுவேன், நீ செத்தால் அந்த இடத்தில் புல் பூண்டு கூட முளைக்காது" என்று வன்முறையை தூண்டும் வகையில் பேசிய,
நடிகர் சீமான் @SeemanOfficial மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திராவிடர் விடுதலை கழகம்… pic.twitter.com/PCiJJb5RZc
சீமானின் இந்த பகிரங்க கொலை மிரட்டல் தொடர்பாக ஈரோடு போலீசில் கொளத்தூர் மணியை தலைவராக கொண்ட திராவிடர் விடுதலை கழகத்தினர் நேற்று புகார் கொடுத்தனர். அதில், வன்முறையை தூண்டும் வகையிலும் கொலை மிரட்டல் விடுத்தும் பேசிய சீமானை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே தந்தை பெரியார் குறித்து இழிவாகவும் அவதூறாகவும் பேசியதாக சீமான் மீது தமிழ்நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றமும் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications